கனடா தனியுரிமை அறிவிப்பு

நடைமுறைக்கு வரும் தேதி: செப்டம்பர் 22, 2023

கனடாவில் உள்ள பயனர்களுக்காக இந்த அறிவிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். கனடாவில் உள்ள பயனர்கள் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு மற்றும் மின்னணு ஆவணங்கள் சட்டம் (PIPEDA) உட்பட கனடிய சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சில தனியுரிமை உரிமைகளைக் கொண்டுள்ளனர்.  எங்கள் தனியுரிமை கோட்பாடுகள் மற்றும் நாங்கள் வழங்கும் தனியுரிமை கட்டுப்பாடுகள் அனைத்து பயனர்களுக்கும் இந்த சட்டங்களுக்கு ஏற்ப இருக்கும்—இந்த அறிவிப்பு கனடாவின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. உதாரணமாக, எல்லாப் பயனர்களும் தங்கள் தரவின் நகலைக் கோரலாம், கணக்கை நீக்கக் கோரலாம் மற்றும் பயன்பாட்டில் தங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம். முழு விவரத்திற்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

தரவு கட்டுப்படுத்தி

நீங்கள் கனடாவில் உள்ள பயனராக இருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவலானது Snap Inc -இன் பொறுப்பு என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

உங்கள் உரிமைகள்

தனியுரிமைக் கொள்கையின் உங்கள் தகவலின் மீதான கட்டுப்பாடு பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளபடி அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புத் தகவலைப் பயன்படுத்தி எங்கள் தனியுரிமை அதிகாரியைத் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் அணுகல் மற்றும் தவறு நீக்கத்திற்கான உங்கள் உரிமைகளைப் பயன்படுத்தலாம்.

உங்கள் மாகாணத்தைப் பொறுத்து, உங்கள் தனிப்பட்ட தகவலைப் பரப்புவதைக் கட்டுப்படுத்தும் உரிமை, தரவு பெயர்வுத்திறனுக்கான உரிமை, தானியங்கு முடிவெடுப்பது தொடர்பான அவதானிப்புகளைத் தெரிவிக்க மற்றும் சமர்ப்பிக்கும் உரிமை மற்றும் தரவு செயலாக்கம் குறித்த தகவலைக் கோரும் உரிமை உள்ளிட்ட கூடுதல் உரிமைகள் உங்களுக்கு இருக்கலாம்.

எங்கள் தயாரிப்பிகள் மற்றும் சேவைகளை தனியுரிமையை மனதில் கொண்டு நாங்கள் வடிவமைக்கிறோம். பல வகையான தரவுகளுடன், நாங்கள் அதைச் செயலாக்குவதை நீங்கள் இனி விரும்பவில்லை எனில், அதை நீக்குவதற்கான திறனை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். பிற வகைத் தரவுகளுக்கு, அந்த அம்சத்தை முழுவதுமாக முடக்குவதன் மூலம் உங்கள் தரவின் பயன்பாட்டை நிறுத்தும் திறனை உங்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். நாங்கள் செயலாக்குவதை நீங்கள் ஏற்காத வேறு வகையான தகவல் இருந்தால் நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

எங்கள் பார்வையாளர்கள்

எங்கள் சேவைகளின் நோக்கம் 13 வயதிற்குட்பட்ட எவருக்கும் (அல்லது பெற்றோரின் அனுமதியின்றி எங்கள் சேவைகளைப் பதிவுசெய்து பயன்படுத்துவதற்கு உங்கள் மாகாணத்தில் உங்களுக்கு அங்கீகாரம் தேவை) இல்லை — எங்கள் சேவைகளை நோக்கி அவர்களை திசைத்திருப்புவதில்லை. அதனால் தான் இந்த வயதிற்குக் குறைவான யாரிடமும் தெரிந்தே தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிப்பதில்லை.

சர்வதேச தரவு பரிமாற்றங்கள்

உங்களுக்கு எங்கள் சேவைகளை வழங்க, Snap சார்பாக இங்கு விவரித்துள்ளவாறு அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியே நீங்கள் வசிக்கும் அதிகார வரம்புகளில், உங்கள் தனிப்பட்ட தகவலை Snap Inc குழு நிறுவனங்கள் மற்றும் சில மூன்றாம் நபர் சேவை வழங்குனர்களிடமிருந்து சேகரிக்கலாம், அவர்களுக்குப் பரிமாற்றலாம், தகவலை அவர்களிடம் சேமித்துச் செயலாக்கலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வெளியே நாங்கள் தகவல்களைப் பகிரும்போதெல்லாம், உங்கள் தனிப்பட்ட தகவல் போதுமான அளவு பாதுகாக்கப்படுவதற்காக உங்கள் உள்ளூர் சட்டத்துடன் பரிமாற்றம் இணங்குவதை நாங்கள் உறுதி செய்கிறோம். அத்தகைய தகவல்கள் உங்கள் வசிப்பிடத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது, அது இருக்கும் அதிகார வரம்பிற்கு உட்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டது, மேலும் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க, அரசாங்கங்கள், நீதிமன்றங்கள் அல்லது சட்ட அமலாக்க அல்லது அத்தகைய பிற அதிகார வரம்பின் ஒழுங்குமுறை முகமைகளுக்கு வெளிப்படுத்துவதற்கு உட்பட்டதாக இருக்கலாம்.

குக்கீகள்

பெரும்பாலான இணையச் சேவைகளையும் மொபைல் செயலிகளையும் போலவே, உங்கள் செயல்பாடு, உலாவி, சாதனம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கக் குக்கீகள் மற்றும் வெப் பீக்கான்கள், இணையச் சேமிப்பகம், தனித்துவ விளம்பர அடையாளங்காட்டிகள் போன்ற பிற தொழில்நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்தலாம்.  எங்கள் சேவைகள் மற்றும் உங்கள் தெரிவுகளில் நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் குக்கீகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி மேலும் அறிய, தனியுரிமைக் கொள்கையின் குக்கீகள் மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பிரிவில் சேகரிக்கப்பட்ட தகவலைப் பார்க்கவும்.

புகார்கள் அல்லது கேள்விகள்? 

எங்கள் தனியுரிமை ஆதரவு குழு அல்லது dpo@snap.com இல் உள்ள எங்கள் தனியுரிமை அதிகாரியிடம் நீங்கள் ஏதேனும் விசாரணைகள் அல்லது புகார்களை சமர்ப்பிக்கலாம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறோம். கனடாவின் தனியுரிமை ஆணையர் அலுவலகம் அல்லது உங்கள் உள்ளூர் தனியுரிமை ஆணையரிடம் புகாரைப் பதிவு செய்யும் உரிமையும் உங்களுக்கு உள்ளது.