உங்கள் தனியுரிமை, விளக்கப்பட்டது

தனியுரிமைக் கொள்கைகள் நீளமாக மற்றும் குழப்பமாக இருக்கும் இயல்புடையவை அதனால் தான் எங்கள் தனியுரிமைக் கொள்கையை சுருக்கமாக, தெளிவாக மற்றும் படிக்க எளிதாக இருக்கும் வகையில் அமைக்க முயற்சி செய்தோம்!

நீங்கள் எங்கள் முழு தனியுரிமைக் கொள்கையைப் படிக்க வேண்டும், ஆனால் உங்களிடம் நேரம் குறைவாக இருக்கும்போது அல்லது பின்னர் எதையாவது நினைவில் வைத்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் எப்போதும் இந்த சுருக்கத்தைப் பார்க்கலாம் - எனவே அடிப்படைகளில் சிலவற்றை நீங்கள் சில நிமிடங்களில் கற்றுக்கொள்ளலாம் அல்லது நினைவுபடுத்தலாம்.

Snap இல் நாங்கள் என்ன செய்கிறோம்

Snap-இல், எங்கள் நோக்கம் மக்கள் தங்களை வெளிப்படுத்தவும், அக்கணநேரத்தில் வாழவும், உலகைப் பற்றி அறியவும், ஒன்றாக மகிழ்ந்திருக்கவும் அதிகாரம் அளிப்பதாகும்.

எங்கள் சேவைகளை வழங்குவதற்கும் அவற்றைச் சிறப்பாகச் செய்வதற்கும், நீங்கள் Snapchat, Bitmoji மற்றும் எங்கள் பிற சேவைகளைப் பயன்படுத்தும்போது உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க உங்களைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். எடுத்துக்காட்டாக உங்கள் பிறந்தநாள் என்று தெரிந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களும் கொண்டாட உதவ ஒரு லென்ஸை நாங்கள் அனுப்பலாம்! அல்லது நீங்கள் ஒரு நாளை பீச்சில் கழிப்பதைப் பார்த்தால், உங்கள் Bitmoji அந்த நிகழ்விற்கு ஏற்றாற்போல் உடை அணிந்திருப்பதை நாங்கள் உறுதி செய்யலாம். நன்றாக இருக்கும், இல்லையா?

தனிப்பயனாக்கப்பட்ட சேவையினை நாங்கள் வழங்கும் மற்றொரு வழி நாங்கள் காட்டும் விளம்பரங்களாகும் — நாங்கள் இலவசமாக வேடிக்கையான, பாதுகாப்பான மற்றும் புதுமையான ஆன்லைன் இடத்தை வழங்க முடிந்த வழிகளில் இது ஒன்றாகும். உங்களுக்கு ஆர்வமுள்ள விளம்பரங்களை வழங்குவதற்கு உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்த சிலவற்றை நாங்கள் பயன்படுத்துகிறோம் - அவற்றில் நீங்கள் ஆர்வம் காட்டும்போது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஃபேஷன் பற்றி பல கதைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில், சமீபத்திய ஜீன்ஸ் ஸ்டைல் பற்றிய விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவோம். அல்லது வீடியோ கேம்களுக்கான ஒரு சில விளம்பரங்களை நீங்கள் கிளிக் செய்தால், அந்த விளம்பரங்களை நாங்கள் தொடர்ந்து இயக்கலாம்! ஆனால் நீங்கள் விரும்பாத விளம்பரங்களைக் காண்பிப்பதைத் தவிர்க்க உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு டிக்கெட் விற்கும் தளம் நீங்கள் ஏற்கனவே ஒரு திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளீர்கள் என்று எங்களிடம் சொன்னால் - அல்லது Snapchat மூலம் அவற்றை நீங்கள் வாங்கியிருந்தால் - அதற்கான விளம்பரங்களைக் காண்பிப்பதை நாங்கள் நிறுத்தலாம். மேலும் அறிக.

உங்கள் தகவலை எவ்வாறு கட்டுப்படுத்துகிறீர்கள்

உங்கள் கணக்குத் தகவலைப் புதுப்பிக்க விரும்புகிறீர்களா அல்லது உங்கள் கதையை அல்லது Snap வரைபடத்தில் யார்உங்களைப் பார்க்க முடியும்? செயலியில் உள்ள உங்கள் அமைப்புகளுக்குச் செல்லுங்கள். செயலியில் இல்லாத உங்கள் தகவல் குறித்து ஆர்வமா? உங்கள் தரவை பதிவிறக்குவதற்கு இங்கே செல்லுங்கள். உங்களுக்கு எப்போதாவது Snapchat-ஐ விட்டு வெளியேறி உங்கள் கணக்கை ஒருவழியாக நீக்க வேண்டுமென்றால், எங்களிடம் அதற்கான கருவிகளும் இருக்கின்றன. மேலும் அறிக.

நாங்கள் எவ்வாறு தகவல்களைச் சேகரிக்கிறோம்

முதலில் , நீங்கள் எங்களுக்குத் தர தேர்வுசெய்யும் தகவல்களில் இருந்து கற்றுக்கொள்கிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு Snapchat கணக்கை அமைக்கும்போது, உங்கள் பிறந்தநாள், மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் பயனர்பெயரான நீங்கள் விரும்பும் தனிப்பட்ட பெயர் ஆகியவற்றை நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

இரண்டாவதாக, நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்களைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்கிறோம். ஆகையால், நீங்கள் ஒரு விளையாட்டு ரசிகர் என்று நீங்கள் சொல்லாவிட்டாலும், ஸ்பாட்லைட்டில் நீங்கள் எப்போதும் கூடைப்பந்து ஹைலைட்ஸ் பார்த்துக்கொண்டும் உங்கள் Bitmoji உங்கள் அணியின் வண்ணத்தை அணிந்துகொண்டிருந்தால், உங்களைப் பற்றி ஊகிப்பது சரியானதாக இருக்கும்.

மூன்றாவதாக, உங்களைப் பற்றி பிற நபர்கள் மற்றும் சேவைகளில் இருந்து தெரிந்துகொள்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரு நண்பர் தங்கள் தொடர்புப் பட்டியலை பதிவேற்றினால், நாங்கள் உங்கள் மொபைல் எண்ணை பார்க்கக்கூடும். அல்லது ஒரு வீடியோ கேமிற்காக ஒரு விளம்பரத்தின் மீது நீங்கள் தட்டினால், விளம்பரதாரர் நீங்கள் அதை நிருவியுள்ளீர்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கலாம். மேலும் அறிக.

நாங்கள் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம்

பொதுவாக நீங்கள் எங்களைக் கேட்கும்போது நாங்கள் தகவல்களைப் பகிர்கிறோம் — எங்கள் கதையில் Snap ஐ ஸ்பாட்லைட் அல்லது Snap வரைபடத்தில் சேர்க்க அல்லது நண்பருக்கு அரட்டையை அனுப்ப விரும்புவது போன்றவை. உங்கள் பயனர்பெயர், Snapcode போன்ற உங்களின் சில தகவல்கள் இயல்பாகவே பொதுவில் தெரியும்.

சட்டத்தால் தேவைப்படும் என நாங்கள் நினைக்கும்போது மற்றும் Snapchat பயனர்களின், எங்களின் அல்லது பிறரின் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவைப்படும் என நாங்கள் நம்புப் போது Snap குடும்ப நிறுவனங்களுக்குள் எங்கள் சேவைகளை வழங்க உதவும் தொழில் கூட்டாளர்களுடன் நாங்கள் தகவலைப் பகிர்ந்துகொள்வோம்.

அதைத் தவிர பெரும்பாலான விஷயங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன! மேலும் அறிக.

தகவலை நாங்கள் எவ்வளவு காலம் சேமித்து வைக்கிறோம்

Snapchat அத்தருணத்தில் வாழ்வது பற்றியதாகும். அதனால்தான் நீங்கள் ஒரு Snap அல்லது அரட்டையை ஒரு நண்பருக்கு அனுப்பும்போது அதைப் பார்த்த பிறகு அல்லது அது காலாவதியானபிறகு (உங்கள் அமைப்புகளைப் பொறுத்த) அது இயக்பாகவே நீக்குமாறு எங்கள் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நீங்களோ அல்லது நண்பர் ஒருவரோ ஒரு உரையாடலில் ஒரு செய்தியை அல்லது நினைவுகளில் ஒரு Snap-ஐ சேமிக்கச் சொன்னால் சேமிப்போம்.

நினைவில் கொள்ளுங்கள்: Snapchat பயனர்கள் எப்போதும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம்!

பிற தகவல்கள் நீண்ட காலத்திற்குச் சேமிக்கப்படலாம் எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் அடிப்படைத் தகவல்களை நீக்குமாறு எங்களிடம் தெரிவிக்கும் வரை, நாங்கள் அவற்றை சேமிப்போம். மேலும் நீங்கள் விரும்பும், விரும்பாத விஷயங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் தொடர்ந்து சேகரித்து மற்றும் அவற்றைப் புதுப்பித்து வருகிறோம், எனவே உங்களுக்கு சிறந்த உள்ளடக்கத்தையும் விளம்பரங்களையும் எங்களால் வழங்க முடியும். மேலும் அறிக.

நீங்கள் மேலும் அறிவது எப்படி

எங்கள் முழு தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்!

தயாரிப்பின் படி தனியுரிமை என்பது குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றிய கூடுதல் தகவலை வழங்குகிறது, மேலும் செயலியின் வெவ்வேறு பகுதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிய உங்களுக்கு உதவுவதற்காக ஆயிரக்கணக்கான ஆதரவுப் பக்கங்களையும் உருவாக்கியுள்ளோம் என உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தேவையானதை இன்னும் கண்டறியமுடியவில்லையா? கவலை வேண்டாம், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள், எங்கள் நட்பான ஆதரவுக் குழு உங்களைத் தொடர்பு கொள்வார்கள்!