Snaps & அரட்டைகள்

நேரில் அல்லது தொலைபேசியில் ஒருவருடன் பேசுவதைப் போலவே, Snaps மற்றும் அரட்டைகள் மூலம் உரையாடுவது உங்கள் மனதில் உள்ளதை அந்த நேரத்தில் வெளிப்படுத்த அனுமதிக்கிறது — நீங்கள் இதுவரை கூறிய அனைத்தின் நிரந்தரப் பதிவைத் தானாகவே பராமரிக்காமல்.
நிச்சயமாக, நீங்கள் ஒரு Snap-ஐ அனுப்புவதற்கு முன்பு சேமிக்க தேர்வு செய்யலாம் மற்றும் பெறுநர்கள் எப்போதும் திரை பிடிப்பு படத்தை எடுக்கலாம். நீங்கள் அரட்டையில் ஒரு செய்தியையும் சேமிக்கலாம். அதை தட்டவும். மீதமுள்ளவற்றிடம் சிக்காமல், முக்கியமானதை சேமிப்பதை Snapchat எளிதாக்குகிறது.
Snaps சேமிப்பு தனியுரிமையை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் Snap-கள் Snapchat-இல் சேமிக்கப்படலாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். ஒரு Snap-ஐ சேமிப்பதை அனுமதிக்க Snap ன் நேரத்தை வரம்பில்லை என்று அமைக்கவும். அரட்டையில் சேமிக்கப்பட்ட Snap-கள் உட்பட நீங்கள் அனுப்பிய எந்த செய்தியையும் எப்போதும் நீக்கலாம். சேமிப்பை நீக்க அழுத்திப் பிடிக்கவும். நீங்கள் ஒரு Snap-ஐ சேமிக்கும்போது, அல்லது அனுப்புவதற்கு முன் அல்லது அதற்கு பிறகு அது உங்கள் நினைவுகளின் ஒரு அங்கமாக மாறும். உங்கள் நண்பர் நீங்கள் அவருக்கு அனுப்பிய ஒரு Snap-ஐ சேமிக்கும்போது, அது அவர்களின் நினைவுகளின் ஒரு அங்கமாக மாறும். நினைவுகள் பற்றிய விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள நினைவுகள் பிரிவைப் பார்க்கவும்.
குரல் மற்றும் வீடியோ அரட்டை உங்கள் நண்பர்களுடன் தொடர்பிலிருக்க உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு குரல் செய்தியை அனுப்ப விரும்பினால், நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளோம், குரல் செய்தியைப் பதிவு செய்ய மைக்ரோஃபோனை அழுத்திப் பிடிக்கவும். Snapchat பயனர்கள், எங்களது குரல் குறிப்பு டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தையும் பயன்படுத்தலாம், இது குரல் அரட்டையைப் படிக்கும் வகையில் அவற்றின் டிரான்ஸ்கிடிப்ட்களை உருவாக்கி கிடைக்கச் செய்கிறது.
உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களுக்கு இடையிலான குரல் மற்றும் வீடியோ அரட்டைகள் உட்பட Snaps மற்றும் அரட்டைகள் தனிப்பட்டது மற்றும் இயல்பாகவே நீக்கப்படும் — அதாவது, நாங்கள் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க, பரிந்துரைகளை வகுக்க அல்லது விளம்பரங்களை காண்பிக்க அவற்றின் உள்ளடக்கத்தை ஸ்கேன் செய்வதில்லை. இதன் பொருள், வரம்பிடப்பட்ட, பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலைகளில் (உதாரணத்திற்கு, நாங்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் பொருட்டு குறிக்கப்பட்ட உள்ளடக்கத்தின் ஒரு அறிக்கையை பெற்றால், அல்லது உங்களுக்கு மால்வேர் அல்லது மற்ற தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை அனுப்புவதிலிருந்து ஸ்பேமர்களைத் தடுக்க உதவுவதற்கு) அல்லது நீங்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டாலொழிய (உதாரணத்திற்கு, நீங்கள் எங்கள் குரல் அரட்டை டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தைப் பயன்படுத்தினால்) நீங்கள் என்ன அரட்டை அடிக்கிறீர்கள் அல்லது Snap செய்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியாது.

இணையத்திற்கான Snapchat

இணையத்திற்கான Snapchat உங்கள் கணினியிலேயே Snapchat செயலியைப் பயன்படுத்தும் அனுபவத்தைப் பெற உங்களுக்கு உதவுகிறது. தொடங்குவதற்கு, உங்கள் Snapchat தகவல்களுடன் உள்நுழையவும். உள்நுழைந்த பிறகு, அது உண்மையிலேயே நீங்கள் தானா என்பதை உறுதி செய்ய, நாங்கள் உங்கள் Snapchat செயலிக்கு ஒரு புஷ் அறிவிப்பை அனுப்பலாம்.
நீங்கள் இயக்கியதும், இணையத்திற்கான Snapchat அம்சம் Snapchat செயலி அனுபவத்தைப் போலவே இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள், ஆனால் சில வேறுபாடுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உதாரணத்திற்கு, நீங்கள் இணையத்திற்கான Snapchat-இல் யாரையாவது அழைக்கிறீர்கள் என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட லென்ஸ்களுக்கு மட்டுமே உங்களிடம் அணுகல் இருக்கும், மேலும் அனைத்து ஆக்கப்பூர்வக் கருவிகளும் உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். நீங்கள் மேலும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம், மேலும் அறிய கீழே உள்ள ஆதாரங்களைப் பார்க்கவும்!

My AI

எனது AI என்பது பாதுகாப்பை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சாட்போட் ஆகும்.. நீங்கள் My AI-உடன் நேரடியாக உரையாடலாம் அல்லது உரையாடல்களில் My AI-ஐ @ mention செய்யலாம். உருவாக்க AI என்பது பக்கச்சார்பான, தவறான, தீங்கு விளைவிக்கும் அல்லது தவறாக வழிநடத்தும் படிகளை வழங்கக்கூடிய ஒரு வளரும் தொழில்நுட்பமாகும். எனவே, நீங்கள் அதன் ஆலோசனையை சார்ந்திருக்கக் கூடாது, நீங்கள் எந்தவொரு ரகசிய மற்றும் முக்கியமானத் தகவலையும் கூட பகிரக்கூடாது — நீங்கள் பகிர்ந்தால் அதை My AI பயன்படுத்தும்.
My AI -உடனான உங்கள் உரையாடல்கள் உங்கள் நண்பர்களுடனான அரட்டைகள் மற்றும் Snap செய்தல்களுடன் வித்தியாசமாக செயல்படுகின்றன — நீங்கள் My AI-க்கு அனுப்பும் மற்றும் அங்கிருந்து பெறும் உள்ளடக்கத்தை நீங்கள் நீக்கும் வரை அல்லது உங்கள் கணக்கை நீக்கும் வரை நாங்கள் தக்க வைக்கிறோம் (Snapகள் மற்றும் அரட்டைகள் போன்று). My AI உடன் நீங்கள் தொடர்புகொள்ளும் போது, My AI-இன் பாதுகாப்பு மற்றும் விளம்பரங்கள் உட்பட உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்குவது உள்ளிட்ட Snap-இன் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு நீங்கள் பகிரும் உங்கள் உள்ளடக்கம் மற்றும் உங்கள் இருப்பிடத்தை (நீங்கள் Snapchat உடன் இடத்தைப் பகிர்வதை செயல்படுத்தியிருந்தால்) நாங்கள் பயன்படுத்துகிறோம்.
எனது AI அதன் பதில்களில் உங்கள் இருப்பிடம் அல்லது My AI க்காக நீங்கள் அமைத்துள்ள பயோவைக் குறிப்பிடலாம் (நீங்கள் My AI ஐ @ mention செய்யும் உரையாடல்கள் உட்பட).
நீங்கள் 18 வயதிற்குட்பட்டவர் என்றால், உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் போன்ற ஒரு நம்பகமான பெரியவர் நீங்கள் My AI உடன் அரட்டையடித்தீர்களா என்பதைப் பார்க்கவும் My AI-க்கான உங்கள் அணுகலை ஆன் அல்லது ஆஃப் செய்யவும் குடும்ப மையத்தைப் பயன்படுத்தலாம். நம்பகமான பெரியவர்கள் நீங்கள் My AI உடன் உரையாடிய உள்ளடக்கத்தைப் பார்க்க முடியாது.
My AI க்கு வழங்க, உங்கள் தகவலை எங்கள் சேவை வழங்குநர்கள் மற்றும் விளம்பரக் கூட்டாளர்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.
My AI ஐ மேம்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நீங்கள் My AI இலிருந்து ஏதேனும் பதில்களை விரும்பவில்லை எனில், எங்களுக்குத் தெரிவியுங்கள்.
மேலும் அறிய கீழே உள்ள வளங்களைப் பாருங்கள்!

கதைகள்

உங்களுக்கு விருப்பமான பார்வையாளர்களுடன் உங்கள் தருணங்களை பகிர்வதற்கு Snapchat-இல் பல்வேறு கதை வகைகள் உள்ளன. தற்போது, நாங்கள் பின்வரும் கதை வகைகளை வழங்குகிறோம்:
  • தனிப்பட்ட கதை. நீங்கள் ஒரு கதையை தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்களுடன் பகிர விரும்பினால், நீங்கள் தனிப்பட்ட கதை விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.
  • BFF கதை. நீங்கள் உங்கள் கதையை உங்களின் நெருங்கிய நண்பர்களுடன் பகிர விரும்பினால், நீங்கள் BFF கதை வடிவத்தைத் தேர்வு செய்யலாம்.
  • என் கதை - நண்பர்கள். என் கதை நண்பர்கள் உங்களின் அனைத்து நண்பர்களுடனும் ஒரு கதையை பகிர உங்களை அனுமதிக்கிறது. நினைவில் கொள்ளவும், நீங்கள் உங்கள் என் கதை நண்பர்களை அமைப்புகளில் 'அனைவராலும்' பார்க்கக்கூடிய வகையில் அமைத்தால், உங்களின் என் கதை பொதுவானதாக கருதப்படும் மற்றும் யாரிடம் வேண்டுமானாலும் காட்டப்படக்கூடும்.
  • பகிரப்பட்ட கதைகள். பகிரப்பட்ட கதைகள் என்பது உங்களுக்கும் பிற Snapchat பயனர்களுக்கும் இடையில் பகிரப்பட்ட கதைகள் ஆகும்.
  • சமூகக் கதைகள். நீங்கள் Snapchat-இல் உள்ள ஒரு சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்தால், நீங்கள் சமூகக் கதையில் சமர்ப்பிக்கலாம். இந்த உள்ளடக்கம் பொதுவானதாகவும் கருதப்படும் மற்றும் சமூக உறுப்பினர்களால் இதை கான முடியும்.
  • என் கதை - பொதுவானது. உங்கள் கதை பொதுவானதாக இருக்கவும் பல பார்வையாளர்களைச் சென்றடையவும் வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் உங்கள் கதையை என் கதை பொதுவானது என்பதில் சமர்ப்பிக்கலாம், மேலும் இது டிஸ்கவர் போன்று செயலியின் பிற பகுதிகளில் இடம்பெறலாம்.
  • Snap வரைபடம். Snap வரைபடத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கதைகள் பொதுவானவை மற்றும் Snap வரைபடத்திலும் Snapchat-ற்கு வெளியேயும் காண்பிக்க தகுதியுடையவை.
நீங்கள் அமைப்புகளை மாற்றினாலொழிய, உங்கள் பொது சுயவிவரத்தில் கதையை சேமித்தாலொழிய அல்லது நீங்கள் அல்லது ஒரு நண்பர் அரட்டையில் சேமித்தாலொழிய பெரும்பாலான கதைகள் 24 மணி நேரத்திற்கு பிறகு நீக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் கதை ஒன்றை இடுகையிட்ட உடன் அவற்றுடன் உங்கள் நண்பர்கள் மற்றும் பிறர் கலந்துரையாடலாம். உதாரணத்திற்கு, அவர்கள் நீங்கள் பயன்படுத்திய லென்ஸ்களைப் பயன்படுத்தலாம், Snap-ஐ ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது நண்பர்களுடனும் மற்றவர்களுடனும் பகிரலாம்.
நினைவில் கொள்ளவும்: யார் வேண்டுமானாலும் ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம் அல்லது ஒரு கதையைப் பதிவு செய்யலாம்!

தகவல் பக்கங்கள்

நீங்கள் அதிகம் விரும்பும் தகவல்களையும் Snapchat அம்சங்களையும் கண்டறிவதை தகவல் பக்கங்கள் எளிதாக்குகின்றன. என் தகவல் பக்கம், நட்பு தகவல் பக்கங்கள், குழு தகவல் பக்கங்கள் மற்றும் பொதுத் தகவல் பக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தகவல் பக்கங்கள் Snapchat-இல் உள்ளன.
உங்கள் Bitmoji, வரைபடத்தில் இடம், நண்பர் தகவல் மற்றும் பல, உங்கள் Snapchat தகவல்களை என் தகவல் பக்கம் கொண்டிருக்கும். ஒவ்வொரு நட்பிற்கும் நட்பு சுயவிவரம் தனித்துவமானது, இங்குதான் நீங்கள் சேமித்த புகைப்படங்கள் மற்றும் அரட்டைகள், Bitmoji போன்ற உங்கள் நண்பரின் Snapchat தகவல் மற்றும் வரைபடத்தில் இருப்பிடம் (அவர்கள் உங்களின் அதை பகிர்கிறார்கள் என்றால்) ஆகியவற்றைக் காணலாம், மேலும் இங்குதான் உங்கள் நட்பை நிர்வகிக்கலாம் மற்றும் புகாரளிக்கலாம், நண்பரைத் தடைச்செய்யலாம் அல்லது அகற்றலாம். குழு சுயவிவரங்கள் உங்கள் சேமித்த Snaps மற்றும் அரட்டைகளை குழு உரையாடல் மற்றும் நண்பர்கள் Snapchat தகவல் ஆகியவற்றின் கீழ் காண்பிக்கின்றன.
பொது சுயவிவரங்கள் Snapchat-இல் Snapchat பயனர்களைக் கண்டுபிடிக்க உதவுகிறது. பெரும்பாலான பகுதிகளில், நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், நீங்கள் ஒரு பொது சுயவிவரத்திற்கு தகுதி அடைவீர்கள். உங்களின் பொது சுயவிவரத்தைப் பயன்படுத்தும் போது, நீங்கள் உங்களுக்கு விருப்பமான பொது கதைகள், ஸ்பாட்லைட்கள், லென்ஸஸ் மற்றும் பிற தகவல்களை வெளிப்படுத்தலாம். உங்கள் பொதுத் தகவல் பக்கத்தை மற்ற Snapchat பயனர்களால் பின்தொடர முடியும். உங்களைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இயல்பாக அணைக்கப்பட்டிருக்கும், ஆனால் நீங்கள் விரும்பினால் அமைப்புகளில் அதனை இயக்கலாம்.

ஸ்பாட்லைட்

Snapchat உலகை ஒரே இடத்தில் கண்டறியவும், எவர் உருவாக்கிய மிகவும் பொழுதுபோக்கான Snapகளை அடையாளப்படுத்தவும் ஸ்பாட்லைட் உங்களுக்கு உதவுகிறது!
ஸ்பாட்லைட்டில் சமர்பிக்கப்பட்ட Snapகள் மற்றும் கருத்துகள் பொதுவில் உள்ளவை, மற்ற Snapchat பயனர்களால் Snapchat இற்கு உள்ளேயும் வெளியேயும் அவற்றை பகிர்வதற்கும் மற்றும் 'ரீமிக்ஸ்' செய்வதற்கும் முடியும். எடுத்துக்காட்டாக, அவர்கள் உங்கள் வேடிக்கையான நடனத்தை எடுத்து அதன் மீது எதிர்வினையை அடுக்கலாம். நீங்கள் சமர்ப்பித்த ஸ்பாட்லைட் Snap-களின் கண்ணோட்டத்தை உங்கள் சுயவிவரத்தில் கட்டுப்படுத்தவும் பார்க்கவும் முடியும். நீங்கள் ஸ்பாட்லைட் உள்ளடக்கத்தைப் பிடித்ததாகக் குறிக்கலாம் மற்றும் அவ்வாறு நீங்கள் செய்தால், நாங்கள் அதனை உங்களுடைய எனக்குப் பிடித்தவை பட்டியலில் சேர்த்து விடுவோம் மற்றும் உங்கள் ஸ்பாட்லைட் அனுபவத்தினை தனிப்பயனாக்க பயன்படுத்துவோம்.
நீங்கள் ஸ்பாட்லைட்டில் உள்ள உள்ளடக்கத்தை ஆராயும்போது மற்றும் அவற்றுடன் ஈடுபடும்போது, நாங்கள் உங்கள் ஸ்பாட்லைட் அனுபவத்தைக் குறிப்பாக வடிவமைத்து நீங்கள் விரும்பக்கூடும் என நாங்கள் நினைக்கும் உள்ளடக்கத்தை உங்களுக்கு அதிகமாகக் காண்பிப்போம். உதாரணத்திற்கு, நடன சவால்களை நீங்கள் தொடர்ந்து பார்த்தால், நடனம் தொடர்பான உள்ளடக்கங்களை அதிகமாகக் காட்டுவோம். ஸ்பாட்லைட் Snap-இல் நீங்கள் பகிர்ந்தீர்கள், பரிந்துரைத்தீர்கள் அல்லது கருத்து தெரிவித்தீர்கள் என்பதை நாங்கள் உங்கள் நண்பர்களிடம் தெரியப்படுத்தலாம்.
நீங்கள் ஸ்பாட்லைட்டிற்குச் Snapகளைச் சமர்பிக்கும்போது எங்கள் சமூக வழிகாட்டுதல்கள், ஸ்பாட்லைட் விதிமுறைகள், மற்றும் ஸ்பாட்லைட் வழிகாட்டுதல்களுடன் இணங்குமாறு நாங்கள் உங்களைக் கேட்போம். உங்கள் ஸ்பாட்லைட் சமர்ப்பிப்புகள் நீங்கள் அவற்றை நீக்கும் வரை எங்கள் சேவையகங்களில் சேமித்து வைக்கப்படும் மற்றும் நீண்ட காலத்திற்கு Snapchat-இல் பார்க்கலாம். ஸ்பாட்லைட்டில் நீங்கள் சமர்ப்பித்த Snapஐ அகற்ற விரும்பினால், உங்கள் சுயவிவரத்திற்குச் சென்று அதைச் செய்யலாம்.

நினைவுகள்

நினைவுகள் நீங்கள் சேமித்த Snap-ஐ மீண்டும் பார்ப்பதற்கும் அவற்றை திருத்தி மீண்டும் அனுப்புவதையும் எளிதாக்குகிறது! உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க உங்கள் நினைவகங்களில் (நீங்கள் அணுகலை வழங்கினால், உங்கள் சாதனத்தின் கேமரா ரோலில் உள்ள உள்ளடக்கமும்) Snapchat-இன் மாயாஜாலத்தை நாங்கள் சேர்க்கிறோம். உள்ளடக்கத்தின் அடிப்படையில் லேபிள்களை சேர்ப்பதன் மூலம் நாங்கள் இதைச் செய்கிறோம், எனவே உங்களால் அதை எளிதாகத் தேட முடியும், மற்றும் நினைவுகள் அல்லது ஸ்பாட்லைட் போன்ற எங்கள் சேவைகளின் பிற பகுதிகளில் இதே போன்ற உள்ளடக்கத்தை நாங்கள் காட்சிப்படுத்துவதற்காக நீங்கள் எந்த வகையான உள்ளடக்கத்தை விரும்புகிறீர்கள் என்பதை எங்களிடம் தெரியப்படுத்துகிறீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் நினைவுகளில் உங்கள் நாயின் பல Snap-களை சேமித்தால், ஒரு நாய் உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்து, அழகான நாய் பொம்மைகளைப் பற்றிய ஸ்பாட்லைட் Snap-கள் அல்லது விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிப்பதன் மூலம் உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்கலாம்!
வேடிக்கையான லென்ஸைப் போன்ற ஒரு புதிய திருப்பத்துடன் உங்கள் நினைவுகள் மற்றும் கேமரா ரோல் உள்ளடக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளை நாங்கள் பரிந்துரைக்கலாம் — ஆனால் எப்போது எங்கு பகிர்வது என்பதை நீங்கள் முடிவு செய்யலாம். உங்களின் அனைத்து நினைவுகளையும் காண்பதற்கு உங்களுக்கு நாங்கள் உதவுவோம், உதாரணத்திற்கு, உங்களுக்கு விருப்பமான நினைவுகளை உள்ளடக்கிய கதைகளை அல்லது ஸ்பாட்லைட் Snap-களை மிகவும் எளிதாக உருவாக்க ஒரு குறிப்பிட்ட நேரம் அல்லது இடத்தைச் சுற்றி அவற்றை குழுவாக்குகிறோம்.
நினைவுகளை இணையத்தில் காப்புறுதி எடுத்து வைப்பது அவற்றைத் தொலைத்துவிடாமல் வைத்திருக்க உதவுகின்றன, ஆனால் அதன் பொருள் நீங்கள் உங்கள் தனியுரிமையையோ பாதுகாப்பையோ தியாகம் செய்ய வேண்டும் என்பதில்லை. அதனால் தான் நாங்கள் "என் கண்கள் மட்டும்" என்பதை உருவாக்கினோம், அது உங்கள் Snapகளை பாதுகாப்பாகவும் மறைகுறியிட்டும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு கடவுச்சொல் மூலம் பத்திரமாகவும் வைத்திருக்க உங்களுக்கு உதவுகிறது. இவ்விதமாக ஒருவர் எப்படியாவது உங்கள் சாதனத்தை திருடி Snapchat இல் உள்நுழைந்தாலும் கூட அந்தத் தனிப்பட்ட Snaps அப்போதும் பாதுகாப்பாக இருக்கும். கடவுச்சொல் இல்லாமல், என் கண்கள் மட்டும் என்பதில் நீங்கள் சேமித்து வைத்த விஷயங்களை பிறகு யாராலும் பார்க்க முடியாது — எங்களாலும் கூட! எனினும் எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் நீங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் இந்த மறைகுறியாக்கப்பட்ட Snapகளை மீட்டெடுக்க வழியே இல்லை.
கூடுதலாக, நினைவுகளில், AI-ஆல் உருவாக்கப்பட்ட உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களின் போர்ட்ரேட்களை நீங்கள் பார்க்கலாம். இந்த போர்ட்ரேட்களை உருவாக்க நீங்கள் பதிவேற்றிய செல்ஃபிகள், உங்கள் நண்பர்கள் மற்றும் உங்களின் புதிய படங்களை உருவாக்க ஜெனரேட்டிவ் AI உதவியுடன் பயன்படுத்தப்படுகிறது.

லென்ஸஸ்

லென்ஸஸ் உங்களுக்கு நாய்க்குட்டியின் காதுகளை எப்படி வழங்குகிறது அல்லது உங்கள் முடியின் வண்ணத்தை எப்படி மாற்றுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
லென்ஸ்களுக்குப் பின்னால் உள்ள சில மாயங்களுக்கு "பொருள் கண்டறிதல்" காரணமாகும். பொருள் அடையாளம் காணுதல் என்பது பொதுவாக ஒரு படத்தில் உள்ள பொருட்கள் என்ன என்பதை ஒரு கணினி புரிந்துகொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். இந்த விஷயத்தில், ஒரு மூக்கை மூக்கு எனவும் கண்ணைக் கண் எனவும் நமக்குத் தெரிவிக்கிறது.
ஆனால், பொருள் கண்டறிதல் என்பது உங்கள் முகத்தை அடையாளம் காண்பதைப் போல் அல்ல. லென்ஸஸால் எது முகம் எது முகம் இல்லை என்று கூற முடியும் என்ற போதிலும், அது குறிப்பிட்ட முகங்களை அடையாளம் காண்பதில்லை!
எங்கள் லென்ஸஸில் பல, வேடிக்கையான அனுபவங்களை உருவாக்கி உங்கள் தோற்றத்தையும் அனுபவத்தையும் சிறப்பு வாய்ந்ததாக மாற்ற ஜெனரேட்டிவ் AI-ஐ சார்ந்துள்ளது.

Snap கிட்

Snap கருவிப்பெட்டி என்பது உங்களுக்கு பிடித்த செயலிகளுடன் அல்லது செயலிகள் மற்றும் வலைத்தளங்களிலிருந்து உங்கள் Snapchat கணக்கில் Snap-கள், கதைகள் மற்றும் Bitmoji-களைஎளிதாகப் பகிர அனுமதிக்கும் உருவாக்குநர் கருவிகளின் தொகுப்பாகும்! நீங்கள் ஒரு செயலி அல்லது வலைத்தளத்துடன் இணைய தேர்வுசெய்யும்போது, Snap கருவிப்பெட்டி வழியாக பகிரப்பட்ட தகவலை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம். Snapchat அமைப்புகளில் ஒரு செயலி அல்லது வலைத்தளத்தின் அணுகலையும் எந்நேரத்திலும் நீக்கலாம்.
நீங்கள் இணைக்கப்பட்ட செயலி அல்லது வலைதளத்தை 90 நாட்கள் திறக்கவில்லை என்றால், அதன் அணுகலை நாங்கள் அகற்றுவோம், ஆனால் ஏற்கெனவே பகிரப்பட்ட தரவைப் பற்றி கேள்விகள் இருந்தால், நீங்கள் உருவாக்குநரைத் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கலாம்.

Spectacles

Spectacles என்பது நீங்கள் உங்கள் உலகைப் நீங்கள் பார்க்கும் விதத்தில் அதை படம்பிடிக்கக்கூடிய குளிர்காண்ணாடிகள் ஆகும். உங்களுக்கு வேண்டிய தருணத்தைச் சேமிக்க — ஃபோனைத் தேடி அலையாமல் அந்தத் தருணத்தில் பட்டனை அழுத்துங்கள். நீங்கள் ஒரு சாகசத்தில் இருந்தாலும் அல்லது ஒரு சாதாரண நாளில் இருந்தாலும் — உலகில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தாலும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, நாங்கள் குறிப்பாக Spectacles சன்கிளாஸை உருவாக்கியுள்ளோம்.
நீங்கள் Spectacles உடன் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும்போது, நீங்கள் Snap எடுக்கிறீர்கள் அல்லது வீடியோவைப் பதிவு செய்கிறீர்கள் என்பதை உங்கள் நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்காக LEDகள் ஒளிரும்.
எங்கள் சமூக வழிகாட்டுதல்களானது, Snapchat பயனர்கள் எப்போதும் பொறுப்புணர்வுடன் இருக்குமாறும், மக்களின் தனியுரிமையை மதிக்குமாறும் கேட்கின்றன - அதே தத்துவம் Spectacles-க்கும், வடிவமைப்பிலேயே பொருந்தும்!
நாங்கள் Spectacles ஐத் தொடர்ந்து புதுமைப்படுத்தி வருகிறோம் — வெவ்வேறு தலைமுறைகள் அவற்றின் தனித்துவமான உற்சாகமூட்டும் அம்சங்களைக் கொண்டுள்ளன.  புதிய Spectacles உங்களைச் சுற்றியுள்ள உலகில் மூழ்கும் லென்ஸ்களை மேற்பொருத்தி கீழே விவரிக்கப்படும் ஸ்கேன் அம்சங்களில் சிலவற்றை வழங்குகிறது.

உங்கள் Snapchat கணக்கு

உங்கள் முக்கிய கணக்குத் தகவல்களையும் தனியுரிமை அமைப்புகளையும் Snapchat-இன் உள்ளே காணலாம் மற்றும் திருத்தலாம். எங்கள் செயலிகளில் இல்லாத ஒன்றைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் accounts.snapchat.com ஐப் பார்க்கலாம், என் தரவு என்பதைக் கிளிக் செய்து பின்னர் 'கோரிக்கையைச் சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யலாம். நாங்கள் உங்கள் கணக்கு தகவல்களின் நகலைத் தயார் செய்து, நீங்கள் பதிவிறக்குவதற்கு எப்போது தயாராக உள்ளது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். நீங்கள் எப்போதாவது Snapchat ஐ விட்டு விலக விரும்பினால், உங்கள் கணக்கை accounts.snapchat.com இலும் அழிக்கலாம்.

ஸ்கேன் செய்யுங்கள்

எங்கள் ஸ்கேன் செயல்பாட்டின் மூலம் Snapcodes மற்றும் QR குறியீடுகளை ஸ்கேன் செய்ய நீங்கள் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தலாம். நீங்கள் ஒரு ஸ்கேனை ஆரம்பிக்கும்போது, குறியீட்டின் நோக்கி உங்களை வழிநடத்தும் இணைப்பு பாப்-அப்பைக் காண்பீர்கள்.

Snap வரைபடம்

Snap வரைபடம் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட வரைபடமாகும், மேலும் அது நீங்களும் உங்கள் நண்பர்களும் எங்கே இருக்கிறீர்கள் மற்றும் இருந்தீர்கள் என்பதைப் பார்ப்பதற்கும், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கும், உங்களுக்கு விருப்பமான உணவகங்கள் மற்றும் பார்களைச் சேமித்து கண்டுபிடிக்கவும், உலகம் முழுவதும் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கும் உதவுகிறது.
நீங்கள் இருதிசை நண்பர்களாக இருந்தாலொழிய, நீங்கள் உங்கள் நண்பர்களின் Snap வரைபடத்தில் தோன்ற மாட்டீர்கள், முதல் முறையாக வரைபடத்தைத் திறந்து, சாதனத்தின் இருப்பிட அனுமதியை வழங்கி, உங்கள் நண்பர்களுடன் உங்கள் இடத்தை பகிர தேர்வு செய்யவும். நீங்கள் நண்பர்களுடன் உங்கள் தற்போதைய இடத்தை காலவரையின்றி பகிர்வதற்கு தேர்வு செய்யாத வரை, நீங்கள் 24 மணிநேரத்திற்குச் செயலியைத் திறக்கவில்லையெனில், நீங்கள் மீண்டும் Snapchat ஐத் திறக்கும் வரையில் வரைபடத்தில் நண்பர்களுக்குத் தெரியமாட்டீர்கள். நீங்கள் Snap வரைபட அமைப்புகளில் உங்கள் இடத்தைப் பகிரும் நபர்களை எப்போதும் புதுப்பிக்கலாம், அல்லது உங்கள் தற்போதைய இடத்தைப் பகிரும் நபர்களைத் தவிர்த்து மற்ற அனைவரிடமிருந்தும் உங்கள் இடத்தை மறைப்பதற்காக 'பேய் முறைக்குச்' செல்லலாம். நீங்கள் உங்களின் நிகழ்நேர இடத்தை பகிர்வதை நிறுத்த விரும்பினால், அதற்கு ஒரு தனி அமைப்பு உள்ளது. இருப்பிடப் பகிர்வை சிறிது நேரம் இயக்கத்தில் வைத்திருந்தால் நாங்கள் உங்களுக்கு நினைவூட்டலாம்.
Snap வரைபடத்திற்குச் சமர்பிக்கப்பட்ட அல்லது இட அடையாளத்துடன் ஸ்பாட்லைட்டில் தோன்றும் Snaps வரைபடத்தில் காட்டப்படலாம் — ஆனால் எல்லா Snap-யும் அங்கே தோன்றாது. வரைபடத்தில் உள்ள பெரும்பாலான Snaps தானியங்கு செயல்முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நினைவிற் கொள்க: Snap வரைபடத்திற்குச் சமர்பிக்கப்படும் அல்லது ஸ்பாட்லைட்டில் இடம் குறிக்கப்படும் Snaps பொது உள்ளடக்கம் ஆகும், Snapchat இற்கு வெளியில் உங்கள் Snap பகிரப்பட்டிருந்தால் அவை Snapchat இற்கு வெளியில் தோன்றலாம். மேலும், Snap வரைபட சமர்பிப்புகள் சிறிது காலத்திற்குச் சேமிக்கப்படலாம் மற்றும் அவை Snapchat இல் நீண்ட காலத்திற்கு தோன்றலாம் — சிலநேரங்களில் பல ஆண்டுகளுக்கு. நீங்கள் Snap வரைபடத்திற்குச் சமர்பித்த அல்லது ஸ்பாட்லைட்டில் இடம் குறித்த ஒரு Snap-ஐ நீக்க விரும்புகிறீர்கள் எனில், நீங்கள் உங்கள் தகவல் குறிப்புப் பக்கத்திற்குச் சென்று அதனைச் செய்யலாம். Snap-ஐ உங்கள் பெயர் மற்றும் பிற சுயவிவரங்களுடன் இணைக்காமல் Snap வரைபடத்தில் சமர்ப்பிக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.
சுவாரஸ்யமான ஒன்று நடப்பது போல் தோன்றும்போது, வரைபடத்தில் ஒரு கதையின் சிறிய படம் தோன்றக்கூடும். நீங்கள் வரைபடத்தில் ஜூம் செய்யும் போது இடங்கள் பற்றிய கதைகளும் தோன்றலாம். பெரும்பாலான பகுதிகளில், இவை தானாகவே உருவாக்கப்படுகின்றன — மிகப்பெரிய நிகழ்வுகளுக்கான கதைகள் இன்னும் அதிகமான நடைமுறை அணுகுமுறையைப் பெறலாம்.
நீங்கள் Snap வரைபடத்திலும், Snapchat-இன் பிற பொது பகுதிகளிலும் சமர்ப்பிக்கும் Snap-கள் குறித்து கவனமாக இருங்கள், ஏனெனில் அவை உங்களின் இடத்தை வெளிப்படுத்தலாம். உதாரணத்திற்கு, நீங்கள் Snap வரைபடத்தில் ஈஃபில் கோபுரத்தின் Snap-ஐ சமர்ப்பித்தால், உங்கள் Snapஇன் உள்ளடக்கம் நீங்கள் பாரிஸில் ஈஃபில் கோபுரத்திற்கு அருகில் இருந்ததை வெளிப்படுத்தப்போகிறது.
Snap வரைபடத்தில் உள்ள இடங்கள் உள்ளூர் வணிகங்களுடன் தொடர்புகொள்வதை எளிதாக்குகிறது. இடத்தின் பட்டியலைக் காண வரைபடத்தில் ஒரு இடத்தைத் தட்டவும் அல்லது ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வரைபடத் திரையின் மேலே உள்ள தேடலைத் தட்டவும். இடங்கள் தனிப்பயனாக்கப்பட்ட வரைபட அனுபவத்தை வழங்குகின்றன.

இருப்பிடம்

Snapchat உடன் உங்கள் துல்லியமான இடத்தைப் பகிர்தல், GPS தரவு போன்றவை, இயல்பாக முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் இடப் பகிர்தலைத் தேர்வு செய்தால், நாங்கள் உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும் பல தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்க இயலும். எடுத்துக்காட்டாக, சில ஜியோஃபில்டர்கள் மற்றும் லென்ஸஸ் நீங்கள் இருக்கும் இடம் அல்லது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து மட்டுமே வேலை செய்கின்றன. நீங்கள் இடப் பகிர்தலைச் செயல்படுத்தினால், நீங்கள் தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கு வரைபடத்தில் உங்கள் இடத்தைக் காட்ட, மற்றும் உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய அருகிலுள்ளவற்றைக் காட்ட எங்களால் இயலும். இடப் பகிர்தல் இயக்கத்திலிருக்கும் போது, My AI உடன் அரட்டையில் அருகிலுள்ள இடங்களுக்கான பரிந்துரைகளையும் நீங்கள் கேட்க முடியும். இடத் தகவல்கள் நீங்கள் எதனைப் பார்க்க விரும்புவீர்கள் என்பதை அறிவதற்கு எங்களுக்கு உதவுகின்றன — எடுத்துக்காட்டாக பிரான்சில் உள்ளவர்கள் பிரெஞ்சு வெளியீட்டார்களின் உள்ளடக்கம், பிரெஞ்சு விளம்பரங்கள் போன்றவற்றைப் பார்க்கிறார்கள்.
வரைபடம் மற்றும் பிற அம்சங்களை மேம்படுத்துவதில் உதவுவதற்காகவும், உங்களுக்கு அதிகப் பொருத்தமான இடங்களைத் துல்லியமாகக் காட்டுவதற்கும் நாங்கள் GPS இடங்களைச் சிறிது காலம் சேமித்து வைக்கிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் அடிக்கடி செல்லும் சில இடங்களை நாங்கள் சேமிக்கலாம், இதன்மூலம் உங்களுக்கு மிகவும் பொருத்தமான தேடல் உள்ளடக்கத்தைக் காண்பிக்கமுடியும் அல்லது வரைபடத்தில் உங்கள் Bitmoji-இன் செயல்பாட்டைப் புதுப்பிக்கமுடியும். உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க நீங்கள் நினைவுகளில் சேமிக்கும் அல்லது கதைகள், ஸ்பாட்லைட் அல்லது Snap வரைபடத்தில் சமர்ப்பிக்கும் Snapகளின் இருப்பிடத் தகவலையும் நாங்கள் சேமிக்கலாம்.
புதிய Spectacles இல், சில அம்சங்கள் முறையாக இயங்க இடத் தரவு தேவைப்படலாம். உங்கள் இடத்தின் கூடுதல் துல்லியமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக சில மூலங்களிலிருந்து தரவுகளையும் நாங்கள் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு, உங்கள் குளிர்கண்ணாடிகளின் கடைசி இடம் கிடைக்கவில்லையெனில், இட அடிப்படையிலான அம்சங்களை வழங்குவதற்கு உங்கள் சாதனத்தின் GPS இன் Snapchat பயன்பாட்டை நாங்கள் சார்ந்திருக்கலாம்.
உங்கள் சாதனத்தின் அமைப்புகளில் இட அனுமதிகளை நீங்கள் முடக்கியிருந்தாலும் Snapchat மற்றும் Spectacles ஐ நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும், ஆனால் அவற்றின் பல அம்சங்கள் முறையாக வேலை செய்யாது (அல்லது மொத்தமாக வேலை செய்யாது!) அது இல்லாமல். சில நேரங்களில் ஒரு IP முகவரியின் அடிப்படையில் ஒரு நாடு அல்லது நகரம் போன்ற தோராயமான இருப்பிடத்தை நாங்கள் ஊகிக்க முடியும் - ஆனால் அது சரியானதாக இருக்காது.

கேமியோக்கள்

அரட்டையில் உள்ள நண்பர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய உங்கள் சொந்த, சுருக்கமான வீடியோக்களில் நட்சத்திரமாக கேமியோஸ் உங்களை அனுமதிக்கிறது. கேமியோஸை இயக்க, உங்களை வேடிக்கையான காட்சிகளில் சேர்க்க செல்ஃபி எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் முக அங்கீகார மென்பொருளைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, கேமியோஸ் உங்கள் முகம் மற்றும் முடியின் வடிவத்தை காட்சிகளில் வைக்கவும், கேமியோஸ் உகந்ததாக இருப்பதை உறுதிப்படுத்தவும்.
நீங்கள் உங்கள் செல்ஃபியைக் கட்டுப்படுத்தலாம் மற்றும் மாற்றலாம், அழிக்கலாம், Snapchat அமைப்புகளுக்கு சென்று இரண்டு-நபர் கேமியோக்களில் பிறர் உங்களுடைய செல்ஃபியைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தலாம்.