தனியுரிமைக் கொள்கை

நடைமுறைக்கு வரும் தேதி: ஆகஸ்ட் 15, 2023

Snap Inc. ஒரு தொழில்நுட்ப நிறுவனம். இந்தத் தனியுரிமைக் கொள்கையுடன் இணைக்கப்பட்ட Snapchat, Bitmoji, Spectacles மற்றும் பிற வன்பொருள், விளம்பரம், வர்த்தகம் மற்றும் மற்றவை உள்ளிட்ட எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், உங்களை வெளிப்படுத்தவும், அக்கணத்தில் வாழவும், உலகை அறியவும், ஒன்றாக மகிழ்ந்திருக்கவும் விரைவான, வேடிக்கையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகளை வழங்குகின்றன! 

இந்தச் சேவைகளைப் பயன்படுத்தும்போது, நீங்கள் சில தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள். எனவே, நாங்கள் சேகரிக்கும் தகவல்கள், அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறோம், எவ்வாறு பகிரப்படுகின்றன, மற்றும் உங்களுக்கான கட்டுப்பாடுகள் ஆகியவைப் பற்றி தெளிவாகத் தெரிவிக்க விரும்புகிறோம்.

இந்தத் தனியுரிமைக் கொள்கை அனைத்துப் பயனர்களும் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் கடினமான மொழி மற்றும் சட்டர்ப்பூர்வ சொற்கள் இல்லாதவாறும் எழுத எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்துள்ளோம். நீங்கள் பின்னர் எதையாவது மதிப்பாய்வு செய்ய விரும்பினால், எங்கள் தனியுரிமை மையத்தை எப்பொழுது வேண்டுமாலும் அணுகலாம் எங்களின் தனியுரிமை நடைமுறைகளின் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய சுருக்கங்களை உங்களுக்கு வழங்குவதற்காக நாங்கள் இதை வடிவமைத்துள்ளோம். எடுத்துக்காட்டாக, தயாரிப்பு வாரியாக தனியுரிமைப் பக்கம் தயாரிப்பு சார்ந்தத் தகவல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள் மற்றும் குறிப்புகளுக்கான ஆதரவுப் பக்கங்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. இன்னும் ஏதானும் கேள்விகள் உண்டா? எங்களைத் தொடர்பு கொள்க

நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் மூன்று அடிப்படை பிரிவுகள் உள்ளன:

  • நீங்கள் வழங்கும் தகவல்கள்.

  • நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது நாங்கள் பெறும் தகவல்கள்.

  • மூன்றாம் தரப்பினர்களிடமிருந்து நாங்கள் பெறும் தகவல்கள்.

இந்த வகைகள் ஒவ்வொன்றைக் குறித்த சற்று கூடுதல் விவரம் இங்கே உள்ளது.

நீங்கள் வழங்கும் தகவல்கள்

நீங்கள் எங்கள் சேவைகளுடன் ஊடாடும்போது, நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். உதாரணத்திற்கு, எங்களின் பல சேவைகளுக்கு நீங்கள் ஒரு கணக்கை அமைக்க வேண்டும், எனவே, உங்களின் பெயர், பயனர் பெயர், கடவுச்சொல், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மற்றும் பிறந்த தேதி போன்ற, உங்களைக் குறித்த முக்கியமான சில தகவல்களை நாங்கள் சேகரிப்போம். தகவல் பக்கப் படம் அல்லது Bitmoji அவதார் போன்ற எங்கள் சேவைகளில் பொதுவில் தெரியும் சில கூடுதல் தகவல்களையும் எங்களுக்கு வழங்கும்படி நாங்கள் உங்களிடம் கேட்கலாம். சமீபத்திய ஸ்னீக்கர்கள் போன்ற எதையாவது வாங்க நீங்கள் எங்கள் வர்த்தகத் தயாரிப்புகளைப் பயன்படுத்தினால், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு எண் மற்றும் தொடர்புடைய கணக்குத் தகவல் போன்ற பணம்செலுத்துதல் தகவல்களை நாங்கள் உங்களிடம் கேட்கலாம்.

Snapகள் மற்றும் அரட்டைகள், My AI உடன் உரையாடல்கள், ஸ்பாட்லைட் சமர்ப்பிப்புகள், பொதுத் தகவல் பக்கத் தகவல், நினைவுகள் போன்ற பலவற்றில் எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் அனுப்பும் எந்தத் தகவலும் எங்களுக்கு வழங்கப்படும். உங்கள் Snapகள், அரட்டைகள் மற்றும் பிற எந்த உள்ளடக்கத்தைப் பார்க்கும் பயனர்களால் அந்த உள்ளடக்கத்தைச் சேமிக்க அல்லது செயலிக்கு வெளியே நகலெடுக்க எப்போதும் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இணையத்திற்குப் பொருந்தும் அதே பொது அறிவு எங்கள் சேவைகளுக்கும் பொருந்தும்: வேறொருவர் சேமிப்பதையோ பகிர்வதையோ நீங்கள் விரும்பாத உள்ளடக்கத்தைச் செய்திகளில் அனுப்பவோ பகிரவோ வேண்டாம்.

நீங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளும்போது அல்லது வேறு ஏதேனும் வழியில் எங்களைத் தொடர்புகொள்ளும்போது, நீங்களாக அளிக்கும் அல்லது உங்கள் கேள்வியைத் தீர்க்க எங்களுக்குத் தேவைப்படும் எந்தத் தகவலையும் சேகரிப்போம்.

நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களுக்குக் கிடைக்கும் தகவல்

நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, நீங்கள் எந்தச் சேவைகளைப் பயன்படுத்தினீர்கள், அவற்றை எப்படிப் பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிப்போம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு குறிப்ப்ட்ட கதையைப் பார்த்தீர்கள், ஸ்பாட்லைட்டில் பூனை வீடியோவைப் பார்த்தீர்கள், சில காலம் ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தைப் பார்த்தீர்கள், Snap வரைபடத்தை ஆராய்ந்தீகள் மற்றும் சில Snapகளை அனுப்பினீர்கள் என்பது எங்களுக்குத் தெரியலாம். நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது நாங்கள் சேகரிக்கும் தகவல்களின் வகைகள் பற்றிய முழுமையான விளக்கம் இதோ:

  • பயன்பாட்டுத் தகவல்கள். எங்கள் சேவைகளில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். எடுத்துக்காட்டாக, நாங்கள் பின்வருபவை பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்:

    • நீங்கள் எந்த வடிகட்டிகள் அல்லது லென்ஸ்களைப் பார்க்கிறீர்கள் அல்லது Snaps க்குப் பயன்படுத்துகிறீர்கள், Discover ல் எந்தக் கதைகளைப் பார்க்கிறீர்கள், கண்ணாடியைப் பயன்படுத்துகிறீர்களா, My AI உடனான உங்கள் உரையாடல்களைப் பயன்படுத்துகிறீர்களா இல்லையா அல்லது எந்தத் தேடல் வினவல்களைச் சமர்ப்பிக்கிறீர்கள் போன்ற எங்கள் சேவைகளுடன் நீங்கள் செய்யும் பரிமாற்றங்களை பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்.

    • பிற Snapchat பயனர்களுடன் எப்படித் தொடர்பு கொள்கிறீர்கள், அதாவது அவர்களின் பெயர்கள், உங்கள் தகவல் தொடர்புகளின் நேரம் தேதி, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகளின் எண்ணிக்கை, எந்த நண்பர்களுடன் நீங்கள் அதிகம் செய்தி பரிமாறிக்கொள்கிறீர்கள், செய்திகளுடனான உங்களின் ஊடாடும் விதம் (செய்திகளை எப்போது திறக்கிறீர்கள் அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுக்கிறீர்களா என்று நாங்கள் தீர்மானித்தால்) போன்றவை.

  • உள்ளடக்கத் தகவல்கள். எங்கள் சேவைகளை நீங்கள் பயன்படுத்தும்போது, ​​கேமரா அல்லது ஆக்கப்பூர்வமான கருவிகளுடன் நீங்கள் ஈடுபடலாம் மற்றும் கதைகள், புகைப்படங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான உள்ளடக்கங்களை உருவாக்கலாம் மற்றும் பகிரலாம். எங்கள் சேவைகளில் நீங்கள் உருவாக்கும் அல்லது வழங்கும் உள்ளடக்கம் மற்றும் கேமரா மற்றும் ஆக்கப்பூர்வ கருவிகளுடன் உங்கள் தொடர்பு பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். சில உள்ளடக்கத்திற்கு, இதில் படம், வீடியோ அல்லது ஆடியோவின் உள்ளடக்கம் சார்ந்த தகவல் அடங்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் கூடைப்பந்து விளையாடும் ஸ்பாட்லைட் Snap ஒன்றை நீங்கள் இடுகையிட்டால், கூடைப்பந்து பற்றிய பிற ஸ்பாட்லைட் Snapகளை நாங்கள் உங்களுக்குக் காட்டலாம். மெட்டாடேட்டா உள்ளிட்ட உள்ளடக்கத்தைப் பற்றிய பிற தகவல்களையும் நாங்கள் சேகரிக்கலாம். இது உள்ளடக்கத்தைப் பற்றிய தகவல்களாகும், அதாவது அது வெளியிடப்பட்ட தேதி மற்றும் நேரம் மற்றும் யார் அதைப் பார்த்தார்கள் போன்றவை. 

  • சாதனத் தகவல்கள். நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களிலிருந்தும் சாதனங்களைப் பற்றியும் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். எடுத்துக்காட்டாக, நாங்கள் இவற்றைச் சேகரிக்கலாம்:

    • உங்கள் வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய தகவல், வன்பொருள் மாதிரி, இயக்க முறைமை பதிப்பு, சாதன நினைவகம், விளம்பர அடையாளங்காட்டிகள், தனிப்பட்ட பயன்பாட்டு அடையாளங்காட்டிகள், நிறுவப்பட்ட பயன்பாடுகள், தனிப்பட்ட சாதன அடையாளங்காட்டிகள், சாதன பயன்பாட்டுத் தரவு, உலாவி வகை, நிறுவப்பட்ட விசைப்பலகைகள், மொழி, பேட்டரி நிலை மற்றும் நேர மண்டலம் போன்றவை;

    • முடுக்கமானிகள், கைரோஸ்கோப்புகள், திசைகாட்டிகள், ஒலிவாங்கிகள் போன்ற சாதன உணர்விகளிடமிருந்து கிடைக்கிற தகவல்கள், நீங்கள் ஹெட்ஃபோன் இணைத்துள்ளீர்களா என்பது; மற்றும்

    • மொபைல் போன் எண், சேவை வழங்குநர், IP முகவரி மற்றும் சமிக்ஞை வலிமை போன்ற உங்கள் வயர்லெஸ் மற்றும் மொபைல் இணைய இணைப்புகள் பற்றிய தகவல்கள்.

  • சாதன தொலைபேசிப் புத்தகம். எங்கள் சேவைகள் நண்பர்களுடன் தொடர்பு கொள்வது பற்றியது என்பதால், உங்கள் அனுமதியுடன் உங்கள் தொடர்புகள் மற்றும் தொடர்புடையத் தகவல் போன்றவற்றையை உங்கள் சாதனத்தின் தொலைபேசி புத்தகத்தில் இருந்து தகவலைச் சேகரிக்கலாம்.

  • கேமரா, புகைப்படங்கள் மற்றும் ஒலி அமைவு. எங்களுடைய பல சேவைகளுக்கு உங்கள் சாதனத்தின் கேமரா, புகைப்படங்கள் மற்றும் மைக்ரோபோன் ஆகியவற்றிலிருந்து படங்களையும் பிற தகவல்களையும் சேகரிக்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, உங்கள் கேமரா அல்லது புகைப்படங்களை எங்களால் அணுக முடிந்தாலொழிய, உங்கள் கேமரா சுருளிலிருந்து உங்களால் Snaps ஐ அனுப்பவோ, புகைப்படங்களைப் பதிவேற்றவோ முடியாது.

  • இருப்பிடத் தகவல்கள். நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். உங்கள் அனுமதியுடன், GPS போன்ற முறைகளை உள்ளடக்கிய உங்கள் சரியான இருப்பிடத்தைப் பற்றிய தகவல்களையும் நாங்கள் சேகரிக்கலாம்.

  • குக்கீகள், பிற தொழில்நுட்பங்களால் சேகரிக்கப்படுகிற தகவல்கள். பெரும்பாலான இணையச் சேவைகளையும் மொபைல் செயலிகளையும் போலவே, உங்கள் செயல்பாடு, உலாவி, சாதனம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கக் குக்கீகள் மற்றும் வெப் பீக்கான்கள், இணையச் சேமிப்பகம், தனித்துவ விளம்பர அடையாளங்காட்டிகள் போன்ற பிற தொழில்நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்தலாம். எங்கள் கூட்டாளர்களில் ஒருவர் மூலம் நாங்கள் வழங்கும் விளம்பரம், வணிக அம்சங்கள் போன்ற சேவைகளுடன் ஊடாடும் போது தகவல்களைச் சேகரிக்க நாங்கள் இந்தத் தொழினுட்பங்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக உங்களுக்கு அதிக பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட பிற வலைத்தளங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். பெரும்பாலான இணைய உலாவிகள் இயல்பாக குக்கீகளை ஏற்க அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பினால், உங்கள் உலாவி அல்லது சாதனத்தில் உள்ள அமைப்புகள் மூலம் உலாவியின் குக்கீகளை அகற்றலாம் அல்லது நிராகரிக்கலாம். இருப்பினும் நினைவில் கொள்ளுங்கள், குக்கீகளை அகற்றுவது அல்லது நிராகரிப்பது எங்கள் சேவைகளின் கிடைக்கும் தன்மையையும் செயல்பாட்டையும் பாதிக்கலாம். நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் எங்கள் சேவைகளில் குக்கீகளை எப்படிப் பயன்படுத்துகிறோம் மேலும் உங்களின் வாய்ப்புகள் பற்றி மேலும் அறிய எங்கள் குக்கீக் கொள்கையைப் பாருங்கள்.

  • பதிவுத் தகவல்கள். நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்தும்போது பதிவுத் தகவலையும் சேகரிக்கலாம், எடுத்துக்காட்டுகள்:

    • எங்கள் சேவைகளை எப்படிப் பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய விவரங்கள்;

    • உங்கள் இணைய உலாவி வகை மற்றும் மொழி போன்ற சாதனத் தகவல்;

    • அணுகல் நேரங்கள்;

    • பார்த்த பக்கங்கள்;

    • IP முகவரி;

    • உங்கள் சாதனம் அல்லது உலாவியை தனித்து அடையாளம் காணக்கூடிய குக்கீகள் அல்லது பிற தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய அடையாளங்காட்டிகள்; மற்றும்

    • எங்கள் இணையதளத்திற்கு செல்லும் முன் அல்லது சென்ற பின் நீங்கள் பார்வையிடுகிற பக்கங்கள்.

  • உங்கள் அனுமதியுடன், பிற தகவல்கள். எங்கள் சேவைகளுடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது கூடுதல் தகவல்களை சேகரிக்க உங்கள் அனுமதியை நாங்கள் கேட்கும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, எங்கள் எனக்காக உருவாக்கப்பட்டது -இல் நீங்கள் பங்கேற்க விரும்பினால் அல்லது சில தரவு முக்கியமானது எனக் கருதப்படும் அதிகார எல்லையில் நீங்கள் வசித்தால், நாங்கள் உங்கள் அனுமதியைக் கேட்டு, நாங்கள் சேகரிக்கும் முக்கியமான தரவு உட்பட, எந்த தரவுகளை சேகரிக்கிறோம் என்பதை உங்களுக்குத் தெரிவிப்போம். 

மூன்றாம் நபர்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்

நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பிற பயனர்கள், எங்கள் துணை நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நபர்களிடமிருந்து சேகரிக்கலாம். சில எடுத்துக்காட்டுகள் இதோ:

  • நீங்கள் உங்கள் Snapchat கணக்கை வேறொரு சேவையுடன் இணைத்தால் (Bitmoji அல்லது மூன்றாம்-நபர் செயலி போன்றவை), நீங்கள் அந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது போன்ற தகவல்களைப் பிற சேவையிலிருந்து பெறலாம்.

  • விளம்பரதாரர்கள், செயலி உருவாக்குநர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிற மூன்றாம் நபர்களிடமிருந்து நாங்கள் தகவலைப் பெறலாம். விளம்பரங்களின் செயல்திறனை இலக்குவைக்க அல்லது அளவிட, நாங்கள் இந்தத் தகவல்களை வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இந்த வகையான மூன்றாம் நபர் தரவுகளின் எங்கள் பயன்பாடு குறித்து எங்கள் உதவி மையத்தில் மேலும் அறியலாம்.

  • மற்றொரு பயனர் தனது தொடர்புப் பட்டியலைப் பதிவேற்றினால், நாங்கள் உங்களைப் பற்றி சேகரித்துள்ள பிற தகவல்களுடன் அந்த பயனரின் தொடர்புப் பட்டியலிலிருந்து உங்களைப் பற்றியத் தகவல்களை ஒருங்கிணைக்கலாம்.

  • உங்கள் தொடர்புத் தகவலை நீங்கள் எங்களுக்கு வழங்கினால், மற்ற செய்தி தளங்களில் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிக்க மூன்றாம் நபர்களிடமிருந்து பெறப்பட்ட அந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம். 

  • வலைத்தள வெளியீட்டாளர்கள், சமூக வலைப்பின்னல் வழங்குநர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் மற்றும் பிறர் உள்ளிட்ட மூன்றாம் நபர்களிடமிருந்து எங்கள் சேவை நிபந்தனைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களை மீறுபவர்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பெறலாம்.

நாங்கள் தகவலை எப்படிப் பயன்படுத்துகிறோம்

நாங்கள் சேகரிக்கும் தகவல்களை என்ன செய்கிறோம்? விரிவான பதிலுக்கு, இங்குச் செல்க. குறுகிய பதில்: நாங்கள் இடைவிடாமல் மேம்படுத்தும் அற்புதமான தயாரிப்புகளையும் மற்றும் சேவைகளையும் உங்களுக்கு வழங்குதல். நாங்கள் அதைச் செய்யும் வழிகள் இதோ:

  • எங்கள் தயாரிப்புகளையும் சேவைகளையும் உருவாக்குதல், செயல்படுத்துதல், மேம்படுத்துதல், வழங்குதல், பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்.

  • எங்கள் விளம்பர சேவைகள், விளம்பர இலக்கு மற்றும் விளம்பர அளவீடு ஆகியவற்றை வழங்கவும், தனிப்பயனாக்கவும் மற்றும் மேம்படுத்தவும், உங்கள் உள்ளடக்கம் மற்றும் துல்லியமான இருப்பிடத் தகவலைப் பயன்படுத்துவதன் மூலம் (மீண்டும், துல்லியமான இருப்பிடத் தகவலைச் சேகரிக்க நீங்கள் எங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தால்), எங்கள் சேவைகளில் மற்றும் வெளியே இதைச் செய்வதற்காக உங்கள் சாதனத்தில் மூன்றாம் தரப்பு செயலிகள் மற்றும் வலைதளங்களின் உங்கள் பயன்பாடு குறித்த தகவல்களையும் நாங்கள் சேமிக்கலாம்.
    மேலும் அறிக. எங்கள் விளம்பரம் செய்தல் மற்றும் உங்கள் தெரிவுகள் பற்றி கூடுதல் தகவலுக்கு கீழே உள்ள உங்கள் தகவல் மீதான கட்டுபாடு பிரிவைப் பார்க்கவும்.

  • உங்களின் Snapchat அனுபவத்தில் சூழலைச் சேர்க்கவும், உதாரணத்திற்கு, நீங்கள் இருக்கும் இடம் (நிச்சயமாக, உங்கள் துல்லியமான இருப்பிடத் தகவல்களைச் சேகரிக்க நீங்கள் எங்களுக்கு அனுமதி அளித்திருந்தால்) மற்றும் உங்களின் புகைப்படம் அல்லது வீடியோவின் உள்ளடக்கத்தின் (எடுத்துக்காட்டாக., உங்கள் புகைப்படத்தில் ஒரு நாய் இருந்தால், "நாய்" என்ற வார்த்தை மூலம் நினைவுகளில் அதைத் தேடலாம்") அடிப்படையில் தேடக்கூடிய லேபிள்களுடன் உங்கள் நினைவுகளை டேக் செய்தல். 

  • மற்றவற்றுடன், நண்பர்களைப் பரிந்துரைப்பதன் மூலமும், Snap வரைபடத்தில் பரிந்துரைகளை வைப்பதன் மூலமும், தகவல் குறிப்புத் தகவல்கள் அல்லது கேமியோஸ் ஸ்டிக்கர்களை வைப்பதன் மூலமும், Snapchat பயனர்கள் Snapchat, இணைப்பு மற்றும் மூன்றாம் நபர் பயன்பாடுகள் மற்றும் சேவைகளில் ஒருவரையொருவர் கண்டுபிடிக்க உதவுவதன் மூலமும், உங்கள் உள்ளடக்கம் அல்லது செயல்பாட்டின் அடிப்படையில் உங்கள் ஆர்வங்களைக் கண்டறிவதன் மூலமும், அல்லது விளம்பரங்கள் உட்பட நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கும் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்குவதன் மூலமும் எங்கள் சேவைகளைத் தனிப்பயனாக்குதல்

  • தனிப்பயனாக்கம்,விளம்பரம் செய்தல், இணைப்பு நிஜமாக்கம், நேர்மை மற்றும் உள்ளடக்கம் உள்ளிட்ட எங்கள் வழிமுறைகள் மற்றும் இயந்திர கற்றல் மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகம் அல்லது பிற சேவை நிபந்தனைகள் மீறல்களைத் தடுப்பது.

  • Snapchat பயனர் மற்றும் பொது நுகர்வோர் நலன்கள் மற்றும் போக்குகள், எங்கள் சேவைகள் பயன்படுத்தப்படும் வழிகள் உட்பட சிறந்த புரிந்து கொள்ள ஆராய்ச்சி மேற்கொள்வது.

  • பிற செய்தித் தளங்களில் உங்களுடன் தொடர்புகொள்ள நீங்கள் வழங்கும் தகவலைப் பயன்படுத்துதல்.

  • எங்கள் தயாரிப்புகள் சேவைகளின் காப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல்.

  • உங்கள் அடையாளத்தை சரிபார்த்து மோசடி அல்லது பிற அங்கீகரிக்கப்படாத அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடுத்தல்.

  • எங்கள் சேவைகளையும் அவற்றுடனான உங்கள் அனுபவத்தையும் மேம்படுத்த குக்கீகள் மற்றும் பிற தொழினுட்பங்களிலிருந்து சேகரித்த தகவல்களைப் பயன்படுத்துதல்.

  • எங்கள் சேவை நிபந்தனைகள் மற்றும் பிற பயன்பாட்டு கொள்கைகளை மீறுவது, சட்ட அமலாக்கத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது மற்றும் சட்டத் தேவைகளுடன் இணங்குவது போன்றவற்றில் நடைமுறைப்படுத்துதல், விசாரணை செய்தல் மற்றும் அறிக்கை அளித்தல்.

  • அனுமதிக்கப்பட்டால், மின்னஞ்சல், SMS அல்லது பிற செய்தி தளங்கள் மூலம் உங்களுக்கு தகவல்களை அனுப்புதல். உதாரணமாக, ஆதரவுக் கேள்விகளுக்கு பதிலளிக்க அல்லது உங்களுக்கு விருப்பம் இருக்கும் என்று நாங்கள் நினைக்கும் எங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் விளம்பரச் சலுகைகள் பற்றிய தகவல்களைப் பகிர மின்னஞ்சல், SMS அல்லது பிற செய்தி தளங்களைப் பயன்படுத்தலாம்.

  • போக்குகளையும் பயன்பாட்டையும் கண்காணித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்.

  • நீங்கள் Apple TrueDepth கேமராவுடன் ஒரு Apple சாதனத்தைப் பயன்படுத்தினால், லென்ஸ்களின் தரத்தை மேம்படுத்த Apple TrueDepth கேமராவிலிருந்து தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். இந்தத் தகவல்கள் நிகழ்நேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன - நாங்கள் இந்தத் தகவல்களை எங்களது சேவையகங்களில் சேமிக்கவோ மூன்றாம் தரப்பினருடன் பகிரவோ மாட்டோம்.

நாங்கள் எவ்வாறு தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம்

நாங்கள் சேகரிக்கும் தகவலை நாங்கள் ஏன் பகிர்கிறோம்? பெரும்பாலான நேரங்களில், நீங்கள் எங்களைப் பகிரக் கேட்பதால். சில சமயங்களில் நாங்கள் பகிர வேண்டியுள்ளதால் பகிர்கிறோம். உங்களைப் பற்றிய தகவலை நாங்கள் பகிரும் வழிகள் இதோ:

  • பிற Snapchat பயனர்களுடன். நாங்கள் பின்வரும் தகவல்களைப் பிற Snapchat பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்:

    • உங்கள் பயனர்பெயர், பெயர், Bitmoji போன்ற உங்களைப் பற்றிய தகவல்கள்.

    • எங்கள் சேவைகளுடன் நீங்கள் எவ்வாறு தொடர்பு கொண்டீர்கள் மற்றும் நீங்கள் தொடர்புகொண்ட தொடர்புகள் என்பது பற்றிய தகவல், உங்கள் Snapchat "மதிப்பெண்" போன்றவை நீங்கள் நண்பர்களாக உள்ள ஸ்னாப்சாட்டர்களின் பெயர்கள், Snapchat இல் உங்கள் நண்பர்களுடன் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறீர்கள், நீங்கள் சமீபத்தில் Snapchat-இல் தீவிரமாக செயல்பட்டீர்களா, உங்களின் சமீபத்திய இருப்பிட வரலாறு (Snap வரைபடத்தில் உங்கள் இருப்பிடத்தைப் பகிர நீங்கள் தேர்வுசெய்தால்), எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி மற்றவர்களுடனான உங்கள் தொடர்புகளைப் புரிந்துகொள்ள Snapchat பயனர்களுக்கு உதவும் பிற தகவல்கள். எடுத்துக்காட்டாக, உங்களுக்குத் தெரிந்த நபரிடமிருந்து தான் புதிய நட்புக் கோரிக்கை வந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியாது என்பதால், உங்களுக்கும் கோருபவருக்கும் இடையே பொதுவான Snapchat நண்பர்கள் இருக்கிறார்களா அல்லது அதே பகுதியில் இருக்கிறார்களா என்பதை நாங்கள் பகிரலாம்.

    • அரட்டைகள், Snapகள், மற்றும் பிற உள்ளடக்கங்களை உகந்த பார்வை வடிவத்தில் பெற உங்களுக்கு உதவுவதற்காக, ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் சாதனத்தின் வகை போன்ற உங்களின் சாதனம் பற்றிய தகவல்கள்.

    • பகிருமாறு நீங்கள் எங்களை அறிவுறுத்திய ஏதேனும் கூடுதல் தகவல்கள். எடுத்துக்காட்டாக உங்கள் Snapchat கணக்கை மூன்றாம் நபர் செயலியுடன் இணைக்கும் போதும், Snapchat இலிருந்து மூன்றாம் நபர் செயலிக்குத் தகவலையோ உள்ளடக்கத்தையோ பகிர்ந்தாலும், Snap உங்கள் தகவல்களைப் பகிரும்.

    • செயல்படுத்தப்பட்டால், உங்கள் சரியான இருப்பிடத்தை உங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களுடன் Snap வரைபடத்தில் பகிர்ந்து கொள்வோம் (ஆனால் நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் காலத்திற்கு மட்டுமே).

    • நீங்கள் பதிவிடும் அல்லது அனுப்பும் உள்ளடக்கம். உங்கள் உள்ளடக்கம் எவ்வளவு பரவலாகப் பகிரப்படுகிறது என்பது உங்கள் தனிப்பட்ட அமைப்புகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் சேவை வகையைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, ஒரு Snap ஐ நீங்கள் தேர்ந்தெடுத்த ஒரு நண்பருக்கு மட்டும் அனுப்பலாம், ஆனால் உங்கள் என் கதையைப் பார்க்க நீங்கள் அனுமதிக்கும் எந்த Snapchat பயனரும் உங்கள் கதை Snapகள் உள்ளடக்கத்தைக் காணலாம்.

  • அனைத்து Snapchat பயனர்கள், எங்கள் வணிகக் கூட்டாளர்கள் மற்றும் பொது மக்களுடன். பின்வரும் தகவல்களை அனைத்து Snapchat பயனர்களுடனும், எங்கள் வணிகக் கூட்டாளர்களுடனும் பொது மக்களுடனும் நாங்கள் பகிரலாம்:

    • உங்கள் பெயர், பயனர்பெயர், தகவல் குறிப்புப் படங்கள், Bitmoji, Snapcode மற்றும் பொதுத் தகவல் பக்கம் போன்ற பொதுத் தகவல்.

    • உங்கள் முதன்மைகள், தனிப்பயன் ஸ்டிக்கர்கள், லென்ஸஸ், கதை சமர்ப்பிப்புகள் போன்ற பொது உள்ளடக்கம், அனைவரும் பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் ஸ்பாட்லைட், Snap வரைபடம் மற்றும் பிற கூட்டம் சார்ந்த சேவைகள் போன்ற இயல்பான பொது சேவைக்கு சமர்ப்பிக்கும் உள்ளடக்கம். தேடல் முடிவுகள், வலைதளங்கள், செயலிகள், இணைய இணையமில்லா ஒளிபரப்புகள் உள்ளிட்டவை மூலமாக எங்கள் சேவைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் இந்த உள்ளடக்கத்தைப் பொதுமக்களால் பார்க்கவும், பயன்படுத்தவும், பகிரவும் முடியும்.

  • எங்கள் துணை நிறுவனங்களுடன். Snap Inc. குடும்பத்தில் உள்ள நிறுவனங்களுடன் நாங்கள் தகவல்களைப் பகிரலாம்.

  • மூன்றாம் நபர்களுடன். பின்வரும் வழிகளில் நாங்கள் மூன்றாம் தரப்பினருடன் தகவல்களைப் பகிரக்கூடும்:

    • பணம் செலுத்துவதற்கான வசதியை ஏற்படுத்தி, விளம்பரங்களின் செயல்திறனை அளவிடுவதற்கும் மேம்படுத்துவதற்கும், மூன்றாம் தரப்பு வலைதளங்கள் செயலிகள் உள்ளிட்டவற்றில் மிகவும் பொருத்தமான விளம்பரங்களை வழங்குவது போன்ற சேவைகளை எங்கள் சார்பாக மேற்கொள்ளும் சேவை வழங்குநர்களுடன் உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பகிரலாம்.

    • சேவைகளையும் எங்கள் சேவைகளில் செயல்பாட்டையும் வழங்கும் வணிகக் கூட்டாளர்களுடன் உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பகிரலாம். எங்கள் சேவைகளில் மூன்றாம் நபர்களால் சேகரிக்கப்படும் தகவல்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, எங்கள் உதவித் தளத்திற்குச்செல்க.

    • மோசடியைத் தடுப்பதில் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவுவதற்காக சாதனம் மற்றும் பயன்பாட்டுத் தகவல் போன்ற உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் பகிரலாம்.

    • சட்டம், பாதுகாப்பு மற்றும் பத்திரமாக்குதல் காரணங்களுக்காக நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிரலாம். பின்வருனவற்றிற்காகத் தகவலை வெளியிடுவது தேவை என்று நாங்கள் நியாயமாக நம்பினால் நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிரலாம்:

      • ஏதேனும் செல்லுபடியாகும் சட்டச் செயல்முறை, அரசாங்கக் கோரிக்கை அல்லது பொருந்தக்கூடிய சட்டம், விதி அல்லது ஒழுங்குமுறைக்கு இணங்க.

      • சாத்தியமான சேவை நிபந்தனைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் மீதான மீறல்களை விசாரிக்கவும், தீர்வுசெய்யவும் அல்லது செயல்படுத்தவும்.

      • எங்கள், எங்களது பயனர்கள் அல்லது பிறரின் உரிமைகள், சொத்து அல்லது ஏமத்தைப் பாதுகாக்க.

      • ஏதேனும் மோசடி அல்லது பாதுகாப்புச் சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்க.

    • இணைப்பு அல்லது கையகப்படுத்துதலின் ஒரு பகுதியாக நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பகிரலாம். இணைப்பு, சொத்து விற்பனை, நிதியுதவி பெறுதல், நிறுவனக் கலைப்பு அல்லது திவால்நிலை ஆகியவற்றில் Snap Inc. ஈடுபட்டால், அல்லது எங்கள் வணிகத்தின் பகுதிகள் அனைத்தையும் அல்லது சிலவற்றை வேறொரு நிறுவனம் கையகப்படுத்தினால், பரிமாற்றம் முடிவடைவதற்கு முன்பும் பின்பும் உங்கள் தகவலை நாங்கள் அந்த நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  • பொதுவான தகவல். திரட்டப்பட்ட, தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத அல்லது அடையாளம் நீக்கப்பட்ட தகவல்களை எங்களுக்குச் சேவைகளை வழங்கும் அல்லது எங்களுக்காகத் தொழில் நோக்கங்களைச் செய்யும் மூன்றாம் நபர்களுடனும் நாங்கள் பகிரலாம்.

மூன்றாம்-நபர் உள்ளடக்கம் மற்றும் ஒருங்கிணைப்புகள்

எங்கள் சேவைகள் மூன்றாம் நபர் உள்ளடக்கம் மற்றும் ஒருங்கிணைப்புகளைக் கொண்டிருக்கலாம். கேமராவில் மூன்றாம் நபர் ஒருங்கிணைப்புகள், அரட்டையில் மூன்றாம் நபர் விளையாட்டுகள், மூன்றாம் நபர் Snap கிட் ஒருங்கிணைப்புகள் ஆகியன எடுத்துக்காட்டுகளில் அடங்கும். இந்த ஒருங்கிணைப்புகள் மூலமாக நீங்கள் மூன்றாம் நபருக்கும் Snap இற்கும் உங்கள் தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கலாம். அந்த மூன்றாம் நபர்கள் உங்கள் தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறார்கள் அல்லது பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எப்போதும்போல, எங்கள் சேவைகளின் மூலம் நீங்கள் ஊடாடும் மூன்றாம் நபர்கள் உள்ளிட்ட, நீங்கள் பார்வையிடும் அல்லது பயன்படுத்தும் ஒவ்வொரு மூன்றாம் நபர் சேவையின் தனியுரிமைக் கொள்கைகளையும் மீளாய்வு செய்யுமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். நீங்கள் Snapchat இல் மூன்றாம் நபர் சேவைகள் பற்றி இங்கு மேலும் அறியலாம்.

உங்கள் தகவலை நாங்கள் எவ்வளவு காலம் சேமித்து வைக்கிறோம்

அக்கணத்தில் வாழ்வதைப் படம் பிடிக்க Snapchat உதவுகிறது. எங்கள் பக்கத்தில்லிருந்து Snapchat -இல் அனுப்பப்படும் Snapகள் மற்றும் அரட்டைகள் போன்ற பெரும்பாலான செய்திகள் அனைத்துப் பெறுநர்களால் திறக்கப்பட்டாலோ அல்லது காலாவதியாகிவிட்டாலோ அல்லது நீங்கள் உங்கள் இயல்புநிலை அமைப்புகளை மாற்றியிருந்தால் அல்லது எதையாவது சேமிக்க முடிவு செய்திருந்திருக்கிறீர்கள் என்று எங்களால் கண்டறியப்பட்ட பின்னர் எங்களின் சேவையகங்களிலிருந்து அவை இயல்பாகவே தானாகா அழிக்கப்படும் என்பது அதன் அர்த்தமாகும். கதைப் பதிவுகள் போன்ற பிற உள்ளடக்கங்கள் நீண்ட காலத்திற்குச் சேமிக்கப்படும். பல்வேறு வகையான உள்ளடக்கங்களை நாங்கள் எவ்வளவு காலம் சேமிக்கிறோம் என்பது பற்றிய சமீபத்திய தகவல்களுக்கு, உதவித் தளத்தைப் பார்க்கவும்.

பிற தகவல்களை நாங்கள் நீண்ட காலத்திற்குச் சேமித்து வைக்கிறோம். எடுத்துக்காட்டிற்கு:

  • உங்களின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மற்றும் நண்பர்கள் பட்டியல் போன்ற உங்களின் அடிப்படை கணக்கு தகவல்களை நீங்கள் அழிக்கும்படி கூறும் வரை, அவற்றை நாங்கள் சேமித்து வைப்போம்.

  • இருப்பிடத் தகவல்கள் எவ்வளவு துல்லியமானது, எந்தச் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதன் அடிப்படையில் இருப்பிடத் தகவல்களை வெவ்வேறு கால அளவிற்குச் சேமித்து வைக்கிறோம். நினைவகங்களில் சேமிக்கப்பட்டவை அல்லது Snap வரைபடத்தில் அல்லது ஸ்பாட்லைட்டில் பதிவிடப்பட்டவை போன்ற Snap உடன் தொடர்புடையதாக இருப்பிடத் தகவல்களாக இருந்தால், நாங்கள் Snap ஐச் சேமித்து வைத்திருக்கும் வரை அந்த இருப்பிடத் தகவல்களையும் தக்கவைப்போம். நிபுணர் உதவிக்குறிப்பு: உங்கள் தரவைப் பதிவிறக்குவதன் மூலம் உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் இருப்பிடத் தரவை நீங்கள் பார்க்கலாம்.

நீங்கள் Snapchat பயன்படுத்துவதை எப்போதாவது நிறுத்த முடிவு செய்தால், நீங்கள்உங்கள் கணக்கை நீக்குமாறு நீங்கள் எங்களிடம் கேட்கலாம். நீங்கள் சிறிது காலம் செயல்படவில்லை என்றால். உங்களைப் பற்றி நாங்கள் சேகரித்த பெரும்பாலான தகவல்களையும் நீக்கிவிடுவோம்!

நினைவில் கொள்ளுங்கள், எங்கள் நீக்குதல் நடைமுறைகளைத் தானாகவே செயல்படுத்தும் வகையில் எங்கள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ள போதிலும், ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் நீக்குதல் நடைபெறும் என்று எங்களால் உறுதியளிக்க முடியாது. உள்ளடக்கத்தைப் பாதுகாக்கும்படி கேட்கும் சரியான சட்ட செயல்முறை இருந்தாலோ, துஷ்பிரயோகம் அல்லது பிற சேவை விதிமுறைகளை மீறுதல் போன்ற புகார்களைப் பெற்றாலோ, அல்லது உங்கள் கணக்கு, உங்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் அல்லது பிற பயனர்களுடன் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் போன்றவற்றை துஷ்பிரயோகம் அல்லது பிற சேவை விதிமுறைகளை மீறியதற்காக மற்றவர்களால் அல்லது எங்கள் அமைப்புகளால் கொடியிடப்பட்டிருந்தாலோ, உங்கள் தரவைச் சேமிப்பதற்கான சட்டத் தேவைகள் இருக்கலாம் மற்றும் அந்த நீக்குதல் நடைமுறைகளை நாங்கள் இடைநிறுத்த வேண்டியிருக்கும். இறுதியாக, வரையறுக்கப்பட்ட காலத்திற்கு அல்லது சட்டத்தின் தேவைக்கு ஏற்பச் சில தகவல்களை நாங்கள் காப்புப்பிரதி எடுத்து வைக்கலாம்.

உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு

உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு உங்களிடம் இருக்கவேண்டும் என விரும்புகிறோம், ஆகையால் நாங்கள் பின்வரும் கருவிகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

  • அணுகல், திருத்தம் மற்றும் பெயர்வுத்திறன். உங்களின் பெரும்பாலான அடிப்படைக் கணக்குத் தகவலை எங்கள் செயலிகளிலேயே நீங்கள் அனுகித் திருத்தலாம். எங்கள் செயலிகளில் பெயர்வுத்திறன் வடிவில் இல்லாத தகவலின் நகலைப் பெற நீங்கள் என் தரவைப் பதிவிறக்கலாம், இதன் மூலம் அதை நீங்கள் எங்குவேண்டுமானாலும் நகர்த்தலாம் அல்லது சேமிக்கலாம். உங்கள் தனியுரிமை எங்களுக்கு முக்கியம் என்ற காரணத்தால், உங்கள் தனிப்பட்ட தகவலை நீங்கள் அணுக அல்லது புதுப்பிக்க அனுமதிக்கும் முன் உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த அல்லது கூடுதல் தகவலை வழங்குமாறு கேட்போம். பின்வருவன உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை அணுகவோ அல்லது புதுப்பிக்கவோ எழுப்பும் கோரிக்கையை நாங்கள் நிராகரிக்கலாம், உதாரணமாக கோரிக்கை பிற பயனர்களின் தனியுரிமைக்கு ஆபத்தானது அல்லது சட்டவிரோதமானது.

  • அனுமதிகளைத் திரும்பப்பெறுதல். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்த நீங்கள் அனுமதித்தால், செயலியில் அல்லது உங்கள் சாதனம் இந்த விருப்பங்களை அனுமதித்தால் உங்கள் சாதனத்தில் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் உங்கள் அனுமதியை நீங்கள் திருமபப் பெறலாம். மேலும் நீங்கள் அதைச் செய்தால், சில சேவைகளின் முழு செயல்பாட்டை இழக்கலாம். விளம்பர மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்தி அல்லது பிற செய்தித் தளங்கள் மூலம் அனுப்பப்படும் செய்திகளுக்கு, குழுவிலகும் இணைப்பு அல்லது வழங்கப்பட்டுள்ள பிற செயல்முறைகள் மீது கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் விலகலாம்.

  • நீக்குதல். நீங்கள் வாழ்நாள் முழுவதும் Snapchat பயனராக இருப்பீர்கள் என நாங்கள் நம்பும் அதே சமயம், ஏதோ காரணத்திற்காக உங்கள் கணக்கை நீங்கள் நீக்க விரும்பினால், இங்கே சென்று எவ்வாறு செய்வது என அறியுங்கள். நினைவுகளில் நீங்கள் சேமித்துள்ள புகைப்படங்கள், My AI உடனான உங்கள் உரையாடல்கள், ஸ்பாட்லைட் சமர்ப்பிப்புகள் மற்றும் தேடல் வரலாறு போன்ற செயலியில் உள்ள சில தகவலையும் நீங்கள் நீக்கலாம்.

  • விளம்பர விருப்பத்தேர்வுகள். உங்கள் விருப்பங்களுக்குப் பொருத்தமானவை என நாங்கள் நினைக்கும் விளமாபரங்களை உங்களுக்குக் காட்ட முயற்சிக்கிறோம். இந்த வியம்பரங்களைத் தேர்ந்தெடுக்க நாங்களும் எங்கள் விளம்பரக் கூட்டாளர்களும் பயன்படுத்தும் தகவலை நீங்கள் மாற்றியமைக்க விரும்பினால், செயலியில் மற்றும் உங்கள் சாதன முன்னுரிமைகளில் நீங்கள் அதைச் செய்யலாம். மேலும் அறிய இங்கு செல்க.

  • டிராக் செய்தல். iOS 14.5 அல்லது மிகச் சமீபத்திய பதிப்புகள் கொண்ட சாதனங்களை இயக்கும் பயனர்களுக்கு சில குறிப்பிட்ட தேவைகள் பொருந்தும். அவற்றை நாங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளோம். 

  • பிற Snapchat பயனர்களுடன் தொடர்புக்கொள்வது. நீங்கள் யாருடன் தொடர்புகொள்கிறீர்கள் என்பதை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எங்களுக்கு முக்கியம். அதனால் தான், யார் உங்கள் கதைகளைப் பார்க்கவேண்டும் என நினைக்கிறீர்கள், உங்கள் நண்பர்கள் மட்டுமா, உங்கள் நண்பர்கள் மற்றும் தொடர்புகள் அல்லது அனைத்து Snapchat பயனர்களிடமிருந்தும் Snapகளைப் பெற விரும்புகிறீர்களா மற்றும் வேறு Snapchat பயனர் உங்களை மீண்டும் தொடர்புக்கொள்வதிலிருந்து தடுக்க விரும்புகிறீர்கள் என்பனவற்றை பிறவற்றுக்கு இடையில் நீங்கள் குறிப்பிட்ட அமைப்புக்களில் பல கருவிகளைக் கட்டமைத்துள்ளோம். மேலும் அறிய இங்கு செல்க.

சர்வதேச தரவு பரிமாற்றங்கள்

நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து, அதை இடமாற்றி, நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் சேமிக்கலாம், செயலாக்கலாம். நீங்கள் வசிக்கும் இடத்திற்கு வெளியே நாங்கள் தகவல்களைப் பகிரும்போதெல்லாம், நாங்கள் சட்டப்பூர்வமாக அவ்வாறு செய்ய வேண்டியிருக்கும் போது, போதுமான பரிமாற்றப் வழிமுறை இருப்பதை உறுதிசெய்கிறோம். நாங்கள் தகவல்களைப் பகிரும் எந்தவொரு மூன்றாம் நபரும் போதுமான பரிமாற்ற வழிமுறையை கொண்டிருப்பதை உறுதிசெய்கிறோம். நாங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் மூன்றாம் நபர்களின் வகைகளைப் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் இங்குக் காணலாம்.

மாநில மற்றும் பிராந்திய குறிப்பிட்ட தகவல்

உங்கள் மாநிலம் அல்லது பிராந்தியத்தில் குறிப்பிட்ட தனியுரிமை உரிமைகள் உங்களுக்கு இருக்கக்கூடும். உதாரணமாக, அமெரிக்காவில், கலிபோர்னியா மற்றும் பிற மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு குறிப்பிட்ட தனியுரிமை உரிமைகள் உள்ளன. ஐரோப்பிய பொருளாதார பகுதி (EEA), இங்கிலாந்து, பிரேசில், தென்கொரியா மற்றும் பிற அதிகார எல்லைகளில் உள்ள Snapchat பயனர்களுக்கும் குறிப்பிட்ட உரிமைகள் உள்ளன. நாங்கள் மாநில மற்றும் பிராந்திய குறிப்பிட்ட வெளிப்பாடுகளின் புதுப்பித்த கண்ணோட்டத்தை இங்கு வைத்திருக்கிறோம்

குழந்தைகள்

எங்கள் சேவைகள் 13 வயதிற்குட்பட்டவர்களுக்கானது இல்லை, மேலும் அவற்றை நாங்கள் அவர்களுக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. அதனால்தான் 13 வயதிற்கு உட்பட்டவர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தெரிந்தே சேகரிப்பதில்லை. கூடுதலாக, 13 முதல் 16 வயது வரையிலான EEA மற்றும் UK பயனர்களின் தகவல்கள் சிலவற்றை எவ்வாறு சேகரிப்பது, பயன்படுத்துவது மற்றும் சேமிப்பது என்பதை நாங்கள் கட்டுப்படுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், இந்தப் பயனர்களுக்குச் சில செயல்பாடுகளை எங்களால் வழங்க முடியாது என்பதே இதன் பொருள். உங்கள் தகவல்களைச் செயலாக்குவதற்கு ஒப்புதலைச் சட்டரீதியான அடிப்படையாக நாங்கள் சார்ந்திருக்க வேண்டும் என்றால், மற்றும் பெற்றோர் ஒருவரின் ஒப்புதல் உங்கள் நாட்டில் தேவை என்றால், அந்தத் தகவலை நாங்கள் சேகரித்துப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் பெற்றோரின் ஒப்புதல் எங்களுக்குத் தேவைப்படலாம்.

தனியுரிமைக் கொள்கைக்கான திருத்தங்கள்

நாங்கள் இந்தத் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது மாற்றலாம். ஆனால் நாங்கள் அவ்வாறு செய்யும்போது, ஏதாவது ஒரு வழியில் உங்களுக்குத் தெரியப்படுத்துவோம். சில நேரங்களில், எங்கள் இணையதளத்திலும் மொபைல் செயலியிலும் இருக்கும் தனியுரிமைக் கொள்கையின் மேல் உள்ள தேதியைத் திருத்துவதன் மூலம் நாங்கள் உங்களுக்கு அதனைத் தெரியப்படுத்துவோம். மற்ற நேரங்களில், நாங்கள் உங்களுக்குக் கூடுதல் அறிவிப்பை வழங்கலாம் (எங்கள் இணையதளங்களின் முகப்புப் பக்கங்களில் அறிக்கையைச் சேர்ப்பது அல்லது செயலியிலேயே உங்களுக்கு அறிவிப்பை வழங்குவது போன்றவை).