Snapchat விளம்பரங்கள் வெளிப்படைத்தன்மை

விளம்பரங்களைப் பொறுத்து உங்கள் தரவை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்ந்து கொள்கிறோம் என்பதைப் பற்றிய வெளிப்படைத்தன்மை வழங்குவது தான் இந்தப் பக்கத்தின் நோக்கமாகும். விளம்பரத்திற்காக உங்கள் தரவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை கட்டுப்படுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய Snapchat அமைப்புகளையும் நாங்கள் உள்ளடக்குகிறோம். உங்கள் தரவு குறித்த எங்கள் தனியுரிமை நடைமுறைகள் பற்றிய அதிகத் தகவலைப் பெற தனியுரிமை மையத்தை நீங்கள் பார்க்கலாம்.

நாங்கள் ஏன் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களைக் காட்டுகிறோம்

பெரும்பாலான ஆன்லைன் தகவல் சேவைகளைப் போலவே, Snapchat முதன்மையாக விளம்பரத்தால் ஆதரிக்கப்படுகிறது. விளம்பரதாரர்கள் தங்களுக்கு ஆர்வம் காட்டக்கூடிய நபர்களுக்கு விளம்பரங்களைக் காட்ட அதிக கட்டணம் செலுத்துகிறார்கள்.. நாங்கள் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களைக் காட்டினால் தவிர, கட்டணம் இல்லாமல் Snapchat-ஐ வேடிக்கையான, பாதுகாப்பான மற்றும் புதுமையான ஆன்லைன் தளமாக வைத்திருப்பது சாத்தியமில்லாத ஒன்றாகும்.

பெரும்பாலானோர் மிகவும் பொருத்தமான, வேடிக்கையான, மற்றும் சுவாரஸ்யமான விளம்பரங்களை விரும்புகிறார்கள் — பொருத்தமற்ற விளம்பரங்கள் அவர்களுக்கு எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. அடுத்த சிறந்த செஃப் ஆக உருவாகும் பாதையில் நீங்கள் இருக்கிறீர்கள் எனில், சமையல் பாத்திரங்கள் மற்றும் ரெசிபீக்கள் பற்றிய விளம்பரங்கள் Snapchat-இல் உங்கள் நேரத்தை மேம்படுத்தலாம்: டிராம்போலின்கள் பற்றிய விளம்பரங்கள் அவ்வளளவு மேம்படுத்தாது (உங்களுக்கும் குத்திப்பது பிடித்திருந்தால் தவிர!).

Snap மீதான உங்களது நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். இது Snapchat-இல் உங்கள் அனுபவத்தின் மற்ற பகுதியைப் போலவே விளம்பரத்திற்கும் பொருந்தும். தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரமானது சரியாக சமநிலையாக்கப்பட்டிருந்தால், அனைவருக்கும் வெற்றிதரும் ஒன்றாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இதை அடைவதற்கு:

  • Snapchat-இல் விளம்பரங்கள் எவ்வாறு இயங்குகின்றன, உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட நாங்கள் எந்தத் தகவலை சேகரித்து பயன்படுத்துகிறோம் மற்றும் நீங்கள் எந்த விளம்பரங்களைப் பார்க்கிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்த நாங்கள் வழங்கும் அமைப்புகள் ஆகியவற்றை கீழே விளக்கியுள்ளோம்.

  • வடிவமைப்பு செயல்முறைகளிலேயே கடுமையான தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நாங்கள் அமைத்துள்ளோம். Snapchat-இல் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரத்திற்கான எங்களது அணுகுமுறை சமநிலையானதாக இருப்பதை இவை உறுதி செய்யும்.

  • விளம்பரதாரர்களுடன் உங்களைப் பற்றிய அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்வதில்லை. எந்த வகையான பயனர்கள் தங்கள் விளம்பரங்களைப் பார்க்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவும் அவர்களின் விளம்பரங்கள் வெற்றிகரமானதா என்பதை அளவிடவும் மட்டுமே நாங்கள் விளம்பரதாரர்களை அனுமதிக்கிறோம்.

  • நாங்கள் எங்கள் விளம்பரதாரர்களுக்கும் சில தரநிலைகளில் வைத்திருக்கிறோம். அவர்கள் தங்கள் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் உள்ளடக்கம் குறித்து நேர்மையாக இருக்கவேண்டும், எங்களது பன்முக சமூகத்தினரிடம் தன்மையுடன் இருக்கவேண்டும் மற்றும் உங்கள் தனியுரிமையில் சமரசம் செய்யக்கூடாது ஆகியவற்றை அவர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

ஒரு விளம்பரம் தவறாக வழிநடத்துகிறது அல்லது எங்கள் சமூக வழிகாட்டுதல்களைச் சந்திக்கவில்லை என்பன உட்பட எங்கள் விளம்பரக் கொள்கைகளைப் பூர்த்தி செய்யாத விளம்பரங்களை நாங்கள் நிராகரிக்கலாம். தவறாக வழிநடத்தும் ஒரு விளம்பரத்தை நீங்கள் கண்டறிந்தால், விளம்பரத்தில் உள்ள மேலும் அறிக படவுறுவத்தை பயன்படுத்தி அதை பயன்பாட்டில் நீங்கள் புகாரளிக்கலாம்.

உங்களுக்கான விளம்பரங்களை வழங்க உங்களை பற்றி Snap சேகரிக்கும் மற்றும் பெறும் தகவல்கள்

எங்கள் விளம்பரங்களை பொருத்தமானவையாக உருவாக்க, உங்களுக்கு சரியான விளம்பரங்களை சரியான நேரத்தில் காட்ட முயல உங்களைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ளும் தகவல் மற்றும் எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். இதன் அர்த்தம், நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் உங்கள் ஆர்வங்கள் என நாங்கள் நினைப்பவை, எங்கள் தளத்தில் உங்கள் செயல்பாடு மற்றும் உங்களைப் பற்றி எங்கள் கூட்டாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் வழங்கும் தகவல்கள் ஆகியவற்றால் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன.

நாங்கள் சேகரிக்கும் அல்லது பெறும் ஒவ்வொரு வகையானத் தகவலும் எங்களின் விளம்பரங்கள் அமைப்பின் மீது தாக்கம் விளைவிப்பவை மற்றும் சில வகைகள் மற்றவற்றை விட அதிக முக்கியத்துவம் கொண்டவை. ஒவ்வொரு விளம்பரமும் விளம்பரதாரரால் உருவாக்கப்பட்ட அதன் சொந்த இலக்கு மற்றும் உகந்ததாக்க அமைப்புகளைக் கொண்டுள்ளதால், நிறைகள் (கீழே கோடிட்டு காட்டியுள்ளவாறு) அந்த அமைப்புகளின் விளைவாக மாறுபடலாம்.

தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் எங்களது விளம்பர அமைப்புக்களில் அவற்றின் பொது ஒப்பீட்டு முக்கியத்துவம் (அடைப்புக்குறிகளுக்குள் வழங்கப்பட்டவை) உட்பட நாங்கள் சேகரிக்கும் முக்கிய வகையான தகவல்களானவை:

நாங்கள் உங்களிடமிருந்து நேரடியாகப் பெறும் தகவல்

  • கணக்குப் பதிவுத் தகவல். நீங்கள் Snapchat-க்குப் பதிவுசெய்யும் போது, உங்களைப் பற்றிய சில தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம்.

    • வயது. (அதிக முக்கியத்துவம்) நீங்கள் உங்கள் பிறந்த நாளை எங்களுக்கு வழங்குகிறீர்கள், அதை நாங்கள் உங்கள் வயதைத் தீர்மானிக்கப் பயன்படுத்துகிறோம் (மற்றும் உங்கள் அமைப்புகளைச் சார்ந்து, உங்கள் நண்பர்கள் உங்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூற அனுமதிப்பது போன்ற பிற வேடிக்கையான அனுபவங்களுக்கும் வழிவகுக்கிறது!). கீழே மேலும் விவரிக்கப்பட்டுள்ளபடி, உங்கள் வயதை நாங்கள் அனுமானிக்க முற்படுகிறோம், இது பிற விஷயங்களுடன் கூடவே விளம்பரங்கள் சரியான மற்றும் பொருத்தமான பார்வையாளர்களை சென்றடையும் வாய்ப்பை அதிகரிக்க கூடுதல் வழியாகும்.

    • நாடு/மொழி. (அதிக முக்கியத்துவம்) நீங்கள் வசிக்கும் நாடு மற்றும் உங்களுக்கு விருப்பமான மொழி ஆகியவற்றை பல காரணங்களுக்காகச் சேகரிக்கிறோம், அவை உள்ளூர் மயமாக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் சேவைகளை Snapchat உங்களுக்கு வழங்க அனுமதிப்பது, உங்கள் இடம் மற்றும் மொழிக்குப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்கு வழங்குவது மற்றும் உங்களுக்கு நாங்கள் காட்டும் விளம்பரங்கள் உங்கள் உள்ளூர் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வது ஆகியவையாகும். இந்த நோக்கங்களுக்காக உங்கள் இருப்பிடத்தையும் (கீழே விவரிக்கப்பட்டுள்ளவாறு) நாங்கள் பயன்படுத்தலாம்.

Snapchat-இல் உங்கள் செயல்பாடு

கேமரா, கதைகள், Snap வரைபடம், ஸ்பாட்லைட், Snapகள், லென்ஸஸ், My AI (My AI மற்றும் விளம்பரங்கள் குறித்த அதிகத் தகவல்களுக்கு கீழே பார்க்கவும்) மற்றும் Snapchat-இல் உள்ள பிற உள்ளடக்கம் மற்றும் அம்சங்கள் ஆகியவற்றை நீங்கள் பார்க்கும்போது அல்லது அவற்றைப் பயன்படுத்தும்போது, உங்களுக்கு எதில் ஆர்வம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்கிறோம் (சில சமயங்களில் ஊகிக்கிறோம்). எடுத்துக்காட்டாக, நீங்கள் கூடைப்பந்து பற்றி அதிகமாக ஸ்பாட்லைட் Snapகளை பார்த்தால் அல்லது உருவாக்கினால், நாங்கள் உங்களுக்கு தொழில்முறை கூடைப்பந்து நுழைவுச்சீட்டுகளுக்கான ஒரு விளம்பரத்தைக் காட்டலாம்.

Snapchat-இல் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் நாங்கள் பிற விஷயங்களையும் அனுமானிக்கிறோம், இவை கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி, பிற ஆதாரங்களில் இருந்து நாங்கள் சேகரிக்கும் தகவலின் மூலம் தெரிவிக்கப்படலாம். அனுமானங்களில் அடங்குபவை:

  • வயது. (அதிக முக்கியத்துவம்) உதாரணமாக, நீங்கள் பதிவுசெய்யும் போது உங்கள் பிறந்தநாளை உள்ளிடும்போது, Snapchat-இல் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் உங்கள் வயதையும் நாங்கள் அனுமானிக்கிறோம் — இந்த அனுமானம் எங்கள் இளைய Snapchat பயனர்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்கள் வயதுத் தரவின் துல்லியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட வயதுக் குழுவினர் குறிப்பிட்ட விளம்பரத்தை அதிகம் ஏற்பார்கள் என்பதால் விளம்பரதாரர்கள் அவர்களுக்கு சில தயாரிப்புகளை சந்தைப்படுத்த விரும்பலாம் அல்லது விளம்பரம் பொருந்தாத அல்லது தொடர்புடையதாக இல்லாத குழுக்களை அவர்கள் தவிர்க்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் 21 வயதிற்குட்பட்டவராக இருந்தால் அமெரிக்காவில் உங்களுக்கு மதுபானங்களுக்கான விளம்பரங்களைக் காட்டமாட்டோம்.

  • பாலினக் குழு. (அதிக முக்கியத்துவம்) உங்கள் Bitmoji, பயனர்பெயர் மற்றும் காட்சிப்படுத்தப்பட்ட பெயர், நண்பர் புள்ளிவிவரங்கள் மற்றும் Snapchat-இல் உங்கள் செயல்பாடு ஆகியவை உள்ளிட்ட பல சமிக்ஞைகளின் அடிப்படையில் உங்கள் பாலினக் குழுவையும் நாங்கள் அனுமானிக்கிறோம். உங்கள் ஆர்வங்களைத் தீர்மானிப்பது போலவே, அனுமானிக்கப்பட்ட உங்கள் பாலினக் குழு உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்கு காட்ட எங்கள் விளம்பரதாரர்களுக்கு உதவுகிறது. உதாரணமாக, ஒரு விளம்பரதாரர் ஒரு குறிப்பிட்ட பாலின உணர்வுடன் Snapchat பயனர்களுக்கு விளம்பரங்களைக் காட்ட விரும்பலாம், மேலும் அந்த கூட்டுறவுடன் மிக நெருக்கமாக தொடர்புடைய பயனர்களுக்கு விளம்பரங்களைக் காண்பிப்பதில் உதவ அனுமானிக்கப்பட்ட பாலினக் குழுவைப் பயன்படுத்துகிறோம்.

  • ஆர்வங்கள். (அதிக முக்கியத்துவம்) எங்கள் விளம்பரங்களை முடிந்தளவு உங்களுக்குப் பொருந்தும் வகையில் உருவாக்க முயற்சிசெய்கிறோம், எனவே உங்கள் ஆர்வங்களைப் பற்றி அனுமானிக்கிறோம். உதாரணமாக, நீங்க பந்தய கார் ஓட்டுநர்களை பின்தொடர்கிறீர்கள், புதிய கார்கள் அல்லது பந்தயம் பற்றி பார்க்க அல்லது கதைகளை உருவாக்க நீங்கள் விரும்பினால் அல்லது பந்தய தொடர்புடைய கருவிகள்/பொருட்கள் Snapchat விளம்பரங்கள் மீது கிளிக் செய்தால், நீங்கள் "வாகன ஆர்வலர்" என நாங்கள் யூகிக்கலாம். இந்த ஊகங்களில் சிலவற்றை நாங்கள் "வாழ்க்கைமுறை வகைகள்" என்று அழைக்கிறோம், மேலும் Snapchat-இல் உங்களைப் பற்றி நாங்கள் யூகித்தவற்றை வாழ்க்கைமுறை வகைகளில் மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் அந்த வாழ்க்கைமுறை வகைகளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றலாம் அல்லது அழிக்கலாம். உங்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய உள்ளடக்கத்தை உங்களுக்குக் கட்ட எங்களுக்கு உதவுகின்ற உங்கள் ஆர்வங்களையும் நாங்கள் அனுமானிக்கிறோம் — உதாரணமாக நீங்கள் தொடர்புகொள்ளும் Snap-இல் உள்ள உள்ளடக்கத்தை வகைப்படுத்தப்படும் "Snapchat உள்ளடக்க வகைப்பிரிவுகள்" எங்களிடம் உள்ளன. உங்கள் தரவைஇங்கேவிவரித்துள்ளவாறு பதிவிறக்கி இந்த உள்ளடக்க வகைப்பிரிவுகள் நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம்.

  • உங்கள் நண்பர்கள். (குறைவான முக்கியத்துவம்) பல நண்பர்களுக்கு ஒத்த ஆர்வங்கள் உள்ளன. விளம்பரங்கள் அல்லது உள்ளடக்கத்துடன் உங்களின் நண்பர்களின் ஊடாடல்களைப் பற்றிய தகவலை அந்த விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க நாங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் நண்பர்கள் ஒரு புதிய ஜோடி ஷூக்கான விளம்பரத்தின் மீது கிளிக் செய்தால், அதே விளம்பரத்தை உங்களுக்குக் காட்ட அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கலாம்.

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது பிரிட்டனில் இருக்கிறீர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர் என்றால், உங்கள் பாலினக் குழு, ஆர்வங்கள் அல்லது நண்பர்களின் ஆர்வங்களை நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைத் தனிப்பயனாக்க நாங்கள் அனுமானங்களைப் பயன்படுத்துவதில்லை.

அடுத்து உங்களுக்கு எந்த விளாபரங்களைக் காட்டவேண்டும் (அல்லது காட்டக்கூடாது) என்பதைத் தீர்மானிக்க நீங்கள் முன்னர் எந்த விளம்பரங்களுடன் ஊடாடினீர்கள் என்ற தகவலையும் நாங்கள் பயன்படுத்துகிறோம். ஒரே விளம்பரத்தை மீண்டும் மீண்டும் பார்க்க யாரும் விரும்புவதில்லை என்பது ஒரு ரகசியமல்ல!

எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களிடமிருந்து நாங்கள் பெறும் தகவல்

  • எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களின் வலைத்தளங்கள் மற்றும் தளங்களில் உங்கள் செயல்பாடு. (அதிக முக்கியத்துவம்) எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்கள் அவர்களின் சொந்த செயலிகள், வலைத்தளங்கள் மற்றும் தளங்களில் இருந்து எங்களுக்குத் தரவை வழங்குகிறார்கள். அதை நாங்கள் காட்டும் விளம்பரங்களுக்குத் தகவல் தெரிவிக்க பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக, Snap உடன் தரவைப் பகிரும் வலைத்தளத்தில் ஒரு திரைப்படத்தை நீங்கள் தேடினால், அது போன்ற திரைப்படங்களுக்கான விளம்பரங்களை நீங்கள் பார்க்கலாம்.

    • நாங்கள் இந்தத் தகவலை Snap பிக்ஸல் மற்றும் Snap இன் கன்வர்ஷன் API ஆகியவை உள்ளிட்ட சில வழிகளில் பெறுகிறோம். இரண்டு சந்தர்ப்பங்களிலும் மூன்றாம் நபர் தளங்களில்(அந்தத் தளங்களில் வரையறுக்கப்பட்ட செயல்பாடுகள் குறித்தத் தகவலை சேகரிக்கும் திங்க் வலைத்தளங்கள் மற்றும் செயலிகள்) ஒரு சிறிய குறியீடு உட்பொதிக்கப்பட்டிருக்கும். அவர்களின் விளம்பரங்கள் பற்றிய செயல்திறன் பற்றிய அறிக்கைகளை விளம்பரதாரர்களுக்கு வழங்கவும் இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

    • நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது பிரிட்டனிலோ வசிக்கிறீர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர் என்றால், எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களின் வலைத்தளங்கள் மற்றும் தளங்களில் உங்கள் செயல்பாடுகளில் இருந்து Snap சேகரித்தத் தகவலை உங்களுக்கு எந்த விளம்பரங்களைக் காட்டுவது என்பதைத் தீர்மானிக்க நாங்கள் பயன்படுத்துவதில்லை. அதேபோல், பிற அதிகார வரம்புகளில் அவற்றின் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்க இந்தத் தகவலின் பயன்பாட்டை குறிப்பிட்ட வயது வரம்புகளுக்கு நாங்கள் குறைக்கலாம்.

  • பார்வையாளர்கள். (அதிக முக்கியத்துவம்) எங்கள் விளம்பரதாரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் பட்டியளையும் Snap-இல் பதிவேற்றலாம், இதன் மூலம் அவர்கள் அந்த வாடிக்கையாளர்களுக்கு (அல்லது Snapchat இல் உள்ள அவர்களின் வாடிக்கையாளர்களைப் போன்ற தனிநபர்கள்) விளம்பரங்களை இலக்காகக் கொள்ளலாம். பொதுவாக, இந்தப் பொருத்தம் உங்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சளின் ஹாஷ் செய்யப்பட்ட பதிப்பின் அடிப்படையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் காமிக் புத்தகங்களின் தீவிர நுகர்வோர் என வைத்துக்கொள்வோம். ஒரு புதிய காமிக் புத்தகம் வெளியிடப்பட்டால், பதிப்பாளர் தங்களின் Snap-க்கு தங்கள் விசிறிகள் பட்டியலைப் பகிரலாம், இதன் மூலம் அவர்களின் சமீபத்திய வெளியீட்டைப் பற்றிய ஒரு விளம்பரத்தை நீங்கள் பார்ப்பது உறுதிசெய்யப் படுகிறது.

    • நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது பிரிட்டனிலோ வசிக்கிறீர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர் என்றால், உங்களை தனிப்பயன் பார்வையாளர்களின் நாங்கள் சேர்ப்பதில்லை.

  • எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களிடமிருந்து நாங்கள் பெறும் பிற தரவு. எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளவாறு எந்த விளம்பரங்களைக் நாங்கள் காட்டுவோம் என்பதைத் தெரிவிக்க எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களிடமிருந்து உங்களைப் பற்றி நாங்கள் பெற்ற பிற தரவுகளையும் நாங்கள் பயன்படுத்தலாம்.

உங்கள் சூழல், சாதனம் மற்றும் இடம் குறித்து நாங்கள் சேகரிக்கும் தகவல்

  • சாதனத் தகவல்கள். (குறைந்த முக்கியத்துவம்) நீங்கள் எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவலை நாங்கள் சேகரிப்போம், இது இயங்குதளம், திரை அளவு, மொழித் தேர்வு, நிறுவப்பட்ட செயலிகள் மற்றும் பிற பண்புகளை புரிந்துகொள்ள உதவுகிறது. இது உங்கள் சாதனத்துடன் இணக்கமான விளம்பரங்களை, நீங்கள் விரும்பும் மொழியில், குறிப்பிட்ட இயங்குதளங்களை இலக்காகக் கொண்டு, உங்கள் ஆர்வங்களுக்கு இணக்கமான விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு ஐஃபோன் பயன்படுத்தினால் iOS-இல் மட்டுமே கிடைக்கும் ஒரு செயலிக்கான விளம்பரத்தை நாங்கள் உங்களுக்குக் காட்டுவோம். இதேபோல், உங்கள் சாதனத்தின் மொழி ஃபார்சி என அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் மாண்டரின் மொழி விளம்பரங்களைப் பார்க்கமாட்டீர்கள்.

  • இருப்பிடத் தகவல்கள். (குறைந்த முக்கியத்துவம்) உங்கள் இருப்பிடத்திற்குப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்குக் காட்டுவது முக்கியம் என நாங்கள் நினைக்கிறோம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஜெர்மனியில் இருந்தால், அமெரிக்காவில் மட்டுமே பிளே ஆகும் திரைப்படங்களுக்கான விளம்பரங்களை ஒரு விளம்பரதாரர் உங்களுக்குக் காட்டுவதில் மகிழ்ச்சியோ அர்த்தமோ இருக்காது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களுக்கு நீங்கள் வழங்கும் உங்கள் IP முகவரி உள்ளிட்ட சில தரவின் அடிப்படையில் மற்றும் நீங்கள் அதைச் சேகரிக்க எங்களுக்கு அனுமதி வழங்கினால், GPS அடிப்படையில் உங்கள் துல்லியமான இருப்பிடத்தை நாங்கள் தீர்மானிப்போம். உங்களுக்குப் பொருத்தமான விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட, உங்களுக்கு அருகிலுள்ள இடங்களையும் நாங்கள் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு காபி ஷாப் அருகில் இருந்தால், ஒரு விளம்பரதாரர் தங்கள் காபிக்கான விளம்பரங்களை உங்களுக்குக் காட்ட விரும்பலாம்.

    • நீங்கள் கலிபோர்னியாவில் இருந்தால், உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட உங்கள் துல்லியமான இருப்பிட வரலாற்றைப் பயன்படுத்துவது உள்ளிட்ட உங்கள் தனிப்பட்ட தகவலை Snap பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நீங்கள்கோரிக்கை விடுக்கலாம்.

விளம்பரங்களைக் காட்ட மேலே விளக்கப்பட்டுள்ள பல ஆதரங்களில் இருந்து தரவை Snap பயன்படுத்தலாம் என்பதைக் கவனத்தில் கொள்க. எடுத்துக்காட்டாக, ஒரு விளம்பரதாரர் 35-44 வயதுடைய தோட்டக்கலை ஆர்வமுள்ளவர்கள் போன்ற குறிப்பிட்ட Snapchat பயனர்களுக்கு விளம்பரங்களை காட்ட விரும்பலாம். அந்த சந்தர்ப்பத்தில், நீங்கள் அந்த பார்வையாளர்களில் பொருந்தினால் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்ட நாங்கள் உங்கள் வயது மற்றும் Snapchat-இல் அல்லது பிற தளங்களில் உங்கள் செயல்பாட்டைப் பயன்படுத்தலாம்.

Notebook with heart shaped image

நீங்கள் பார்க்கும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்துதல்

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் மீது அர்த்தமுள்ள கட்டுப்பாட்டை நீங்கள் கொண்டிருக்கவேண்டும் என நாங்கள் நம்புகிறோம். நீங்கள் பார்க்கும் விளம்பரங்களை மாற்ற, இங்கே விவரிக்கப்பட்டுள்ள அமைப்புகளை பின்வருவனவற்றுக்காகப் பயன்படுத்தவும்:

  • செயல்பாடு சார் விளம்பரங்களைப் பார்ப்பதிலிருந்து விலக. எங்கள் விளம்பரதாரர்கள் மற்றும் கூட்டாளர்களின் வலைத்தளங்கள் மற்றும் தளங்களில் உங்கள் செயல்பாட்டின் அடிப்படையில் Snap உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், நீங்கள் விலகலாம்.

  • பார்வையாளர் அடிப்படையான விளம்பரங்களில் இருந்து விலக. விளம்பரதாரர்கள் மற்றும் பிறரிடமிருந்து நாங்கள் பெறும் பார்வையாளர்களின் பட்டியல்களின் அடிப்படையில் Snap உங்களை குறிவைப்பதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த விலகலைப் பயன்படுத்தவும்.

  • மூன்றாம் நபர் விளம்பர நெட்வொர்க்குகளில் இருந்து விலக. மூன்றாம் நபர் விளம்பர நெட்வொர்க்குகள் உங்களுக்கு விளம்பரங்களைக் காட்டுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த விலகலைப் பயன்படுத்துங்கள்.

  • கண்காணிப்பில் இருந்து விலகுதல் (iOS பயனர்கள் மட்டும்). Snapchat உங்களைக் கண்காணிக்க அனுமதிக்காத iOS 14.5 அல்லது அதற்கு மேலான பதிப்பு இயக்கும் உங்கள் சாதனத்தில் தனியுரிமைக் கட்டுப்பாடுகளை நீங்கள் அமைத்தால், அந்தச் சாதனத்தைப் பயன்படுத்தும் போது சேகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் உங்கள் செயல்பாட்டை Snapchat இலக்கு விளம்பரம் அல்லது விளம்பர அளவீட்டு நோக்கங்களுக்காக உங்கள் சாதனத்தில் தவிர சேகரிக்கப்பட்ட பயனர் அல்லது சாதனத் தரவுகளுடன் இணைக்க மாட்டோம். எனினும், உங்களைக் குறிப்பாக அடையாளம் காண முடியாத வகையில் விளம்பர நோக்கங்களுக்காக இந்தத் தகவலை நாங்கள் இணைக்கலாம்.

  • நீங்கள் பார்க்கும் விளம்பரத் தலைப்புகளை மாற்றுங்கள். அரசியல், மது அல்லது சூதாட்ட விளம்பரங்கள் போன்ற முக்கியமான தலைப்புகளைப் பற்றிய சில வகையான விளம்பரங்களைப் பார்க்க விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்க இந்த அமைப்பு உங்களை அனுமதிக்கிறது. இந்த அமைப்பு எவ்வாறு அமைக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு இந்த விளம்பரங்கள் இயல்பாகவே அணைக்கப்பட்டிருக்கும்.

  • வாழ்க்கைமுறை வகைகளில் மாற்றங்களைச் செய்யவும். இந்த அமைப்பு உங்கள் ஆர்வங்கள் மற்றும் Snapchat-இல் உங்கள் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் Snap உங்களைப் பற்றி அனுமானித்துள்ள வாழ்க்கைமுறை வகைகளை மாற்ற அனுமதிக்கும். சில வகையான விளம்பரங்கள் மற்றும் தொடர்புடைய வகைப்பிரிவுகளில் இந்த அமைப்பு வயது தொடர்பான கட்டுப்பாடுகளால் கட்டுப்படுத்தப்படாது.

நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தால், மேலேயுள்ள கட்டுப்பாடுகளுக்குக் கூடுதலாக, விளம்பரம் செய்தல் உள்ளிட்ட தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்திலிருந்தும் விலகலாம். அமைப்புகள் பக்கத்திலுள்ள "ஐரோப்பிய ஒன்றியக் கட்டுப்பாடுகள்" பிரிவை அணுகுவதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்.


விளம்பரதாரர்கள் மற்றும் அளவீட்டு கூட்டாளர்களுக்கு நாங்கள் வழங்கும் தகவல்

விளம்பரதாரர்களின் எந்த விளம்பரத்தை நீங்கள் பார்த்தீர்கள் மற்றும் கிளிக் செய்தீர்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் சில நேரங்களில் இது மூன்றாம் தரப்பு அளவீட்டு பங்காளிகள் வழியாக நிகழ்கிறது. விளம்பரதாரரின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை (உதாரணமாக, ஒரு புதிய கடிகாரத்தை வாங்குவது, வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மில் சந்தா செலுத்துவது அல்லது ஆப் பதிவிறக்குவது) நீங்கள் Snap விளம்பரம் பார்வை இடப்பட்டதா அல்லது கிளிக் செய்ப்பட்டதா என்பதை அவர்கள் சரிபார்க்கலாம். விளம்பரதாரர்களுடன் (மற்றும் அளவீட்டு கூட்டாளர்களுடன்) நாங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளோம், இது அவர்களின் விளம்பர பிரச்சாரங்களின் செயல்திறனை அளவிடுவதற்கு இந்த விளம்பரத் தரவைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிறது. பெயர், தொலைபேசி எண் அல்லது இமெயில் போன்ற உங்களை நேரடியாக அடையாளம் காணும் தகவலை விளம்பரதாரர்களுடன் நாங்கள் பகிர மாட்டோம்.

My AI இல் விளம்பரங்கள்

My AI இல் காட்டப்படும் விளம்பரங்கள் Snapchat இல் உள்ள பிற விளம்பரங்களில் இருந்து சற்றே மாறுபட்டு செயல்படுகின்றன: அவை உங்கள் My AI உரையாடல் மற்றும் ஏதுவாக இருந்தாலும் அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன, எடுத்துக்காட்டாக, நீங்கள் எந்த தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கானப் பரிந்துரைகளைத் தேடுகிறீர்கள். இவற்றை நாங்கள் “சூழ்நிலை விளம்பரங்கள்” என்கிறோம் Snapchat இல் உள்ள மற்ற விளம்பரங்களில் இருந்து மற்றொரு வித்தியாசம்: My AI விளம்பரங்கள் Snap இன் விளம்பரக் கூட்டாளர்களால் வழங்கப்படுகின்றன. உங்களுக்குப் பொருத்தமான மற்றும் ஏற்ற விளம்பரங்களை வழங்க எங்கள் விளம்பரக் கூட்டாளர்கள் உங்கள் கேள்விகள் (வணிகரீதியான நோக்கம் இருப்பதாக நாங்கள் தீர்மானித்தால்) மற்றும் உங்கள் வயது வரம்பு (அதாவது நீங்கள் 18 வயதுக்குட்பட்டவரா இல்லையா), நாடு.மொழி, இயக்கமுறைமை வகை (அதாவது iOS/Android) மற்றும் IP முகவரி உள்ளிட்ட கூடுதல் சூழலைப் பெறுவார்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் My AI-இடம் “யார் சிறந்த எலக்ட்ரிக் கிட்டாரை தயாரிக்கிறார்கள்?” என்று கேட்டால் கிட்டார் தயாரிப்பாளருக்கான "ஸ்பான்சர் செய்யப்பட்ட" விளம்பரப் பிரிவை நீங்கள் பார்க்கலாம். இவை அனைத்தும் நான்கு தெரிந்தவைபோல் தோன்றலாம், ஏனெனில் My AI விளம்பரங்கள் பிற தளங்களில் உள்ள தேடல் விளம்பரங்களைப் போல் அதிகம் வேலை செய்கின்றன.