சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் நாங்கள் எப்படி வேலை செய்கிறோம்

ஜனவரி 24, 2023

Snap இல், பாதுகாப்பான மற்றும் வேடிக்கையான சூழலை பராமரித்து Snapchat பயனர்களை தங்களை வெளிப்படுத்த மற்றும் தங்கள் உண்மையான நண்பர்களுடன் தொடர்பில் இருக்க உதவுவதே எங்கள் குறிக்கோள். பல ஆண்டுகளாக, எங்கள் தளத்தில் சட்டவிரோத அல்லது தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளில் முக்கிய கூட்டாளர்களாக உலகம் முழுவதும் இருக்கும் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் நல்ல உறவை வைத்துக்கொள்ள வேலைசெய்கிறோம். இந்த இடுகையில், நம் சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் இணைந்து எப்படி வேலைசெய்கிறோம் என்பதை பற்றி சில பயனுள்ள தகவலை நாங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
எங்கள் பிரத்யேக சட்ட அமலாக்க செயல்பாடுகள் (LEO) குழு பாதுகாப்பு கோரிக்கைகள், சரியான சட்ட செயல்முறை மற்றும் சட்ட அமலாக்க விசாரணைகளுக்கு பதிலளிக்க கவனம் செலுத்துகிறது. இந்த அணி ஒரு நாளில் 24 மணி நேரம், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்குகிறது, மேலும் இந்த குழுவின் உறுப்பினர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். ஒரு குழு உறுப்பினர் சட்ட அமலாக்கம் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையையும் கையாளுகிறார். எனவே ஒவ்வொரு முறையும் சட்ட அமலாக்க முகமை எங்களோடு தொடர்பு கொள்ளும்போது ஒரு கணினியோடு அல்லாமல் ஒரு மனிதனோடு தொடர்பு கொள்கிறார். Snapchat இல் உள்ள உள்ளடக்கம் இயல்பாக நீக்கப்படும், சட்ட அமலாக்க முகவர் எங்களுக்கு பாதுகாப்பு கோரிக்கையை அனுப்புவதன் மூலம் கணக்கு தரவை பாதுகாக்கலாம், மேலும் பொருத்தமான சட்ட செயல்முறை வழங்குவதன் மூலம் மற்றும் பொருந்தும் சட்டங்கள் மற்றும் தனியுரிமை தேவைகள் படி தரவை பெறலாம்.
பள்ளி துப்பாக்கிச்சூடு அச்சுறுத்தல்கள், குண்டு அச்சுறுத்தல்கள் மற்றும் காணாமல் போன நபர்களின் வழக்குகள் போன்ற உயிருக்கு உடனடி அச்சுறுத்தல்களை கொண்ட உள்ளடக்கத்தை சட்ட அமலாக்க முகமைகளுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த நாங்கள் வேலை செய்கிறோம், உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் உள்ள வழக்குகளுக்கு தரவு வெளிப்படுதல் கோரிக்கையை சட்ட அமலாக்க கோரிக்கையை நாங்கள் பெறும்போது அதற்கு பதிலளிக்கிறோம். சட்ட அமலாக்க முகமைகளிடமிருந்து அவசரகால தரவு வெளிப்படுத்தல் கோரிக்கை பெறப்பட்டால், எங்கள் 24/7 குழு வழக்கமாக 30 நிமிடங்களுக்குள் பதிலளிக்கும்.
Snapchat பாரம்பரிய சமூக ஊடக தளங்களை விட வித்தியாசமாக கட்டப்பட்டதால், எங்கள் தளம் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் நாங்கள் அவர்களுக்கு ஒரு ஆதாரமாக எவ்வாறு பணியாற்ற முடியும் என்பதை சட்ட அமலாக்க முகமைகளுக்கு கற்பிப்பது முக்கியம் என்பதை நாங்கள் அறிகிறோம். அதனால் தான் நாங்கள் சமீபத்தில் நடத்திய இரண்டாவது சட்ட அமலாக்க உச்சி மாநாட்டில் Snapchat எவ்வாறு செயல்படுகிறது, அமெரிக்க சட்ட அமலாக்க முகமைகள் எங்களிடமிருந்து முறையான வகையில் எவ்வாறு தரவை பெற முடியும் மற்றும் எப்படி எங்களோடு சேர்த்து வேலை செய்வது மற்றும் அவர்கள் கேள்விகளுக்கான பதில்கள் சொல்லப்பட்டது.
3,000 க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகள் அதில் கலந்துகொண்டு Snapchat பற்றிய முக்கிய தகவல்கள், தகவல் கோரும் அல்லது புகாரளிக்கும் செயல்முறை மற்றும் சமூகத்தில் பாதிக்கும் புதிய மற்றும் தற்போதைய பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்க்க எங்கள் தொடர்ச்சியான வேலையில் ஒன்றாக நாங்கள் எப்படி வேலை செய்கிறோம் என்பது பற்றி முக்கியமான தகவலை கற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின் செயல்திறனை அளவிட மற்றும் கற்பித்தலுக்கான எந்த பகுதிகளையும் அடையாளம் காண பங்கேற்பாளர்கள் மீது கணக்கெடுப்பு செய்து கண்டறிந்துள்ளது:
  • 88% பங்கேற்பாளர்கள் இப்போது Snapchat சட்ட அமலாக்க முகமைகளுடன் எவ்வாறு இணைந்து வேலை செய்கிறது என்பதை பற்றிய நன்கு புரிதல் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
  • 85% பேர் Snapchat இலிருந்து சட்டப்பூர்வமாக தகவலை கோருவதற்கான செயல்முறை குறித்து நல்ல புரிதலோடு மாநாட்டை விட்டு கிளம்புகிறோம் என்றார்கள்.
சட்ட அமலாக்கத்துடனான எங்களின் உறவு Snapchat பயனர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அவசியம், மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்த முக்கியமான உரையாடலை தொடர்வதை நாங்கள் எதிர்நோக்குகிறோம், மேலும் நாங்கள் அமெரிக்காவிற்கு வெளியே இருக்கும் சட்ட அமலாக்க தொடர்பான எங்கள் கடமைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளபடி உலகம் முழுவதும் சட்ட அமலாக்க பங்குதாரர்களுடன் பணியாற்ற கடமைப்பட்டுள்ளோம்.
செய்திகளுக்குத் திரும்புக