டிஜிட்டல் நல்வாழ்வு அட்டவணையை அறிமுகப்படுத்துகிறோம்

பிப்ரவரி 6, 2023

இன்றைய தினம், 2023 ஆம் ஆண்டின் கருப்பொருளான "ஒரு சிறந்த இணையத்திற்காக ஒன்றாக" என்பதன் கீழ், ஒவ்வொரு பிப்ரவரியிலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்க உலகம் ஒன்று கூடும் பாதுகாப்பான இணைய தினத்தைக்(SID) குறிக்கிறது: SID இன் 20வது ஆண்டு நிறைவையொட்டி, எங்கள் அறிமுக டிஜிட்டல் நல்வாழ்வு குறியீட்டை (DWBI) வெளியிடுகிறோம், இது Generation Z இன் ஆன்லைன் உளவியல் நல்வாழ்வின் அளவீடு ஆகும்.

டீனேஜர்கள் மற்றும் இளைஞர்கள் அனைத்துத் தளங்கள் மற்றும் சாதனங்களில் ஆன்லைனில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பது பற்றிய பார்வையைப் பெறவும் சமீபத்தில் வெளியிடப்பட்ட எங்கள் குடும்ப மைய அம்சத்திற்குத் தெரிவிக்க உதவவும், ஆறு நாடுகளில் இருந்து மூன்று வயதுக் குழுக்களில் 9000 க்கும் மேற்பட்டவர்களிடம் நாங்கள் கருத்துக்கணிப்பு மேற்கொண்டோம். நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அகநிலை நல்வாழ்வு ஆராய்ச்சியின் அடிப்படையில் மற்றும் ஆன்லைன் சூழலுக்கு ஏற்றவாறு, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஐக்கிய ராச்சியம் மற்றும் அமெரிக்காவில் டீனேஜர் (13-17 வயது), இளைஞர்கள் (18-24 வயது) மற்றும் 13 முதல் 19 வயது வரை உள்ள டீனேஜரின் பெற்றோர்களின் பதில்களின் அடிப்படையில் ஒரு DWB குறியீட்டை உருவாக்கினோம். பல ஆன்லைன் அபாயங்களுக்கு இளைஞர்கள் வெளிப்படுவதைப் பற்றி நாங்கள் கேட்டோம், அவற்றிலிருந்து மற்றும் பிற பதில்களிலிருந்து, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு DWB குறியீட்டையும் ஆறு நாடுகளில் இருந்து ஒருங்கிணைந்த மதிப்பெண்ணையும் கணக்கிட்டோம்.

அறிமுக DWBI அளவீடு

ஆறு நாடுகளுக்கான முதல் டிஜிட்டல் நல்வாழ்வு குறியீடு 62 ஆக உள்ளது, இது 0 இலிருந்து 100 என்ற அளவுகோளில் சராசரி அளவீடாகும். நாடு வாரியாக, இந்தியாவின் DWBI மிக அதிகமாக 68 ஆக பதிவாகியுள்ளது, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆறு நாடுகளின் சராசரியாய் விட குறைவாக 60 இல் உள்ளன, ஆஸ்திரேலியாவின் DWBI 63, யுனைடெட் கிங்டம் ஆறு நாடுகளில் சராசரியான 62 உடன் பொருந்தியது மற்றும் அமெரிக்காவின் குறியீடு 64 ஆகும்.

இந்தக் குறியீடு ஏற்கனவே உள்ள நல்வாழ்வுக் கோட்பாட்டின் மாறுபாடான PERNA மாதிரியைப் பயன்படுத்துகிறது1இந்த மாதிரியில் ஐந்து வகைப்பாடுகளைச் சேர்ந்த 20 உணர்வு சார்ந்த கூற்றுக்கள் அடங்கியுள்ளன: நேர்மறை உணர்வு, டுபாடு, றவு, திர்மறை உணர்வு மற்றும் சாதனைகள் எந்த ஒரு சாதனம் அல்லது செயலியிலும், வெறும் Snapchat-இல் மட்டுமல்லாமல் கடந்த மூன்று மாதங்களில் அவர்களின் அனைத்து ஆன்லைன் அனுபவங்களையும் கணக்கில் கொண்டு2பதிலளித்தவர்கள் ஒவ்வொரு 20 அறிக்கைகளுடனும் தங்கள் உடன்பாட்டின் அளவைக் குறிப்பிடும்படி கேட்கப்பட்டனர் உதாரணமாக, ஈடுபாடு வகையின் கீழ் ஒரு கூற்றானது: "ஆன்லைனில் நான் செய்யும் செயலில் முற்றிலும் மூழ்கிவிட்டேன்" மற்றும் உறவுகளின் கீழ்: "என்னுடைய ஆன்லைன் உறவுகள் மிகவும் திருப்தியளிக்கின்றன". (DWBI கூற்றுக்களின் முழு பட்டியலுக்கு, இந்த இணைப்பைப் பார்க்கவும்.)

சமூக ஊடங்கங்களின் பங்கு

20 உணர்வுக் கூற்றுக்களுடன் பதிலளிப்பவர்களின் ஒப்பந்த நிலை அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒரு DWBI மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அவற்றின் மதிப்புகள் நான்கு DWBI குரூப்களாக பிரிக்கப்படுகிறது: செழிப்பு (10%); விருத்தி (43%), நடுநிலை (40%) மற்றும் போராட்டம்(7%) (விவரங்களுக்கு கீழே உள்ள விளக்கப்படம் மற்றும் வரைபடத்தைப் பார்க்கவும்.)

ஆராய்ச்சியில் பார்க்கும்போது சமூக வலைத்தளங்கள் Gen Z's டிஜிட்டல் நல்வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது, அதில் நான்கில் மூன்று பங்கிற்கும்(78%) மேலான பதிலளிப்பவர்கள் சமூக வலைத்தளங்கள் தங்கள் வாழ்கை தரத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லை. இந்த நம்பிக்கை Gen Z இளைஞர்கள் (71%) பெண்களோடு (75%) பார்க்கும்போது டீனேஜர்கள்(84%) மற்றும் ஆண்கள் (81%) மத்தியில் அதிகம் என்று தெரிகிறது. சமூக ஊடகங்களின் செல்வாக்கு குறித்த பெற்றோரின் கருத்து (73%) Gen Z இளைஞர்களின் கருத்துடன் மிகவும் நெருக்கமாக பொருந்துகிறது. செழிப்பு DWBI பிரிவில் உள்ளவர்கள் சமூக ஊடகங்கள் தங்கள் வாழ்வில் (95%) நேர்மறையான விளைவை ஏற்படுத்துவதைக் கண்டனர், அதே சமயம் போராடுபவர்கள் இது மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறினர் (43%) செழிப்புக்குழுவில் உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (36%) "சமூக ஊடகங்கள் இல்லாமல் என்னால் என் வாழ்க்கையை வாழ முடியாது" என்ற கூற்றை ஏற்றுக்கொண்டனர், அதே சமயம் போராடுபவர்களில் 18% மட்டுமே அந்த கூற்றுடன் உடன்பட்டனர். இந்த சதவீதங்கள், "சமூக வலைத்தளங்கள் மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் சிறப்பாக இருக்கும்" என்ற கூற்றுக்கு நேரெதிராக இருக்கிறது. (செழிப்பு: 22% உடன்பட்டது, போராடு: 33%)

குடும்ப மையத்துக்குத் தெரிவிப்பது

பெற்றோருக்கு கேள்விகளில் தங்கள் டீனேஜ் பிள்ளைகள் ஆன்லைனுக்கு ஆபத்துக்கு வெளிப்படுவதை அளவிட சொல்லிக் கேட்பது அடங்கும் - இதன் விளைவாக பெற்றோர் தங்கள் டீனேஜ் பிள்ளைகளின் ஆன்லைன் நல்வாழ்வுடன் இணைந்துள்ளார்கள் என்று தெரிகிறது. சொல்லப்போனால், எந்த டீனேஜர்களுடைய பெற்றோர்கள் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளின் ஆன்லைன் மற்றும் சமூக வலைதள செயல்களை செக் செய்கிறார்களோ அவர்கள் வலுவான டிஜிட்டல் நல் வாழ்வையும் பெற்றோர்களின் நம்பிக்கையையும் சம்பாதித்திருக்கிறார்கள். மாறாக , தங்கள் டீனேஜர்களை வழக்கமாக கண்காணிக்காத பெற்றோர்கள் தங்கள் டீனேஜர்கள் ஆபத்தில் சிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறார்கள் (கிட்டத்தட்ட 20 புள்ளிகள்). சராசரியாக 62% டீனேஜர்கள் (13-19 வயது) ஆன்லைனில் ஆபத்தை அனுபவித்தபின் என்ன நடந்தது என்று தங்கள் பெற்றோர்களிடம் கூறினார்கள். ஆயினும், அந்த ஆபத்துக்கள் மேலும் தீவிரமாக வளர்ந்துள்ளதால், டீனேஜர்கள் பெற்றோரிடம் சொல்வதற்கான விருப்பம் குறைந்ததுள்ளது என்றும் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.

Snapchat இல் தங்கள் டீனேஜ் பிள்ளைகள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய பார்வையை பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் பிற நம்பகமான பெரியவர்களுக்கு வழங்கும் அம்சங்களின் தொகுப்பான Snap இன் புதிய குடும்ப மையத்தின் வளர்ச்சிக்கு இதுவும் பிற ஆராய்ச்சியும் பயன்படுத்தப்பட்டது. அக்டோபர் 2022 இல் உலகம் முழுவதும் தொடங்கப்பட்ட குடும்ப மையம், டீனேஜ் பிள்ளைகளின் நண்பர் பட்டியலைப் பார்க்கவும், கடந்த ஏழு நாட்கள் அவர்கள் யாருடன் தொடர்பு கொண்டார்கள் என்பதைப் பார்க்கவும், அதேசமயம், டீனேஜர்களின் தனியுரிமை மற்றும் சுயாட்சிக்கு மதிப்பளித்து, அந்தச் செய்திகள் எதையும் வெளியிடாமல் இருக்கவும் உதவுகிறது. குடும்ப மையம் மேற்பார்வையிடும் பெரியவர்கள் கவலை கொள்ளும் கணக்குகள் பற்றி புகாரளிக்கவும் ஊக்குவிக்கிறது புதிய குடும்ப மையம் அம்சங்கள் விரைவில் வருகின்றன.

குடும்ப மையம், டீனேஜர்களுக்கும் அவர்களது பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் பிற நம்பகமான பெரியவர்களுக்கும் இடையே ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வை வளர்ப்பது குறித்து அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இணைய தினத்தை விட அந்த உரையாடல்களுக்கு எது சிறந்த நேரமாக இருக்க முடியும்!

ஜேக்லின் பியூஷர், தளப் பாதுகாப்பின் உலகத் தலைவர்

Gen Z-க்களின் ஆன்லைன் ஆபத்துகளுக்கான வெளிப்பாடு, அவர்களின் உறவுகள் குறிப்பாக தங்கள் பெற்றோர்களுடன் மற்றும் முந்தைய மாதங்களில் அவர்களின் நடவடிக்கைகள் பற்றி எங்கள் டிஜிட்டல் நல்வாழ்வு ஆராய்ச்சி குறித்த கண்டுபிடிப்புகளை வழங்குகின்றன. ஒரு வலைப் பதிவில் எங்களால் பகிர முடிவதை விட ஆராய்ச்சி குறித்த தகவல் அதிகம் உள்ளது. டிஜிட்டல் நல்வாழ்வுக் குறியீடு மற்றும் ஆராய்ச்சி பற்றி மேலும் தெரிந்துகொள்ள எங்கள் வலைத்தளம், மற்றும் இந்த விளக்கம், முக்கிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளின் தொகுப்பு, முழு ஆராய்ச்சி முடிவுகள், மற்றும் ஆறு நாடுகளின் விளக்கப்படங்கள் ஒவ்வொன்றும்: ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா.

செய்திக்குத் திரும்புக
1 தற்போதைய ஆராய்ச்சிக் கோட்பாடு ஒரு PERMA மாதிரியாகும், இது பின்வருமாறு பிரிக்கப்படுகிறது: நேர்மறை உணர்வு (P), ஈடுபாடு (E), உறவுகள் (R), அர்த்தம் (M) மற்றும் சாதனை (A)
2 இந்த ஆய்வு ஏப்ரல் 22, 2022 முதல் மே 10, 2022 வரை இயங்கியது.