2023-ஆம் ஆண்டின் முதலாவது அரை ஆண்டிற்கான எங்களுடைய வெளிப்படைத்தன்மை அறிக்கை

25 அக்டோபர் 2023

இன்று எங்களின், 2023- ஆம் ஆண்டின் முதல் பாதியை உள்ளடக்கிய, சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கையைவெளியிடுகிறோம்.

எங்கள் நோக்கம் மக்கள் தங்களை வெளிப்படுத்தவும், ஒவ்வொரு நொடிப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழவும், உலகைப் பற்றி அறிந்து கொள்ளவும், ஒன்றாகக் கூடி மகிழ்ந்திருக்கவும் அதிகாரம் அளிப்பது ஆகும். Snapchat பயனர்களுக்கு இவை அனைத்தையும் செய்வது இலகு என்று உணர எங்கள் சமூகத்தவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு அவசியம் ஆகும். எங்களின் அரை ஆண்டு வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் எங்களை பொறுப்புள்ளவர்களாக வைப்பதற்கும் எங்கள் தளத்தில் விதிகளை மீறும் உள்ளடக்கங்கள் மற்றும் கணக்குகளை எதிர்த்துப் போராடும் எங்களின் முயற்சிகள் குறித்த தகவல்கள் மற்றும் அவை குறித்த தற்போதைய செய்திகளைப் பகிர்வதற்குமான முக்கியக் கருவியாகும்.

ஒவ்வொரு வெளிப்படைத்தன்மை அறிக்கையையும் போல இந்த அறிக்கையையும் நாங்கள் இன்னும் மேம்படுத்த உழைத்துள்ளோம். எனவே எங்கள் அறிக்கை எங்கள் குழுமத்திற்கும் பங்கேற்பாளர்களுக்கும் சிறந்த சேவை செய்யும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நாங்கள் பல புதிய தரவு குறிப்புகளை, குறிப்பாக ஐரோப்பிய டிஜிட்டல் சேவைகள் சட்டம் தொடர்பானவற்றைச் சேர்த்துள்ளோம். அவையாவன 

கணக்கு வேண்டுகோள்

எங்கள் கணக்கு தொடக்க வேண்டுகோள் பற்றிய தகவலை நாங்கள் சேர்த்துள்ளோம். கணக்கு முறையீடுகள் பயனர் அனுமதி மறுக்கப்பட்ட Snapchat பயனர்கள் முதல் முடிவில், பிழை செய்யப்படவில்லை என்று எங்கள் தீர்வுகாணும் குழு தீர்மானித்தால் மீண்டும் அனுமதி பெற வகை செய்யும். எதிர்கால வெளிப்படைத்தன்மை அறிக்கையில் இன்னும் அதிகமான பிரிவுகளைச் சேர்ந்த முறையீடுகளை உள்ளடக்கியதாக நாங்கள் உருவாக்குவோம்.

விளம்பரம் செய்தல் தீர்வுகாணும் செயல்கள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் விளம்பர உள்ளடக்க தீர்வு காணும் முயற்சிகளின் வெளிப்படைத் தன்மையை நாங்கள் விரிவுபடுத்துகிறோம். இப்போது ஸ்னாப்சாட் விளம்பர கேலரியின் (ஐரோப்பிய ஒன்றியத்திற்கானது) வெளியீட்டுடன் கூடுதலாக நாங்கள் ஸ்னாப்சாட்டில் இருந்து தரமிறக்கப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கையை வழங்குகிறோம். வெளிப்படைத்தன்மை அறிக்கையில், Snapchat க்கு புகாரளிக்கப்பட்ட மொத்த விளம்பரங்களின் எண்ணிக்கையையும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக தளத்திலிருந்து அகற்றப்பட்ட விளம்பரங்களின் மொத்த எண்ணிக்கையையும் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

டிஜிட்டல் சேவைகள் சட்டம் வெளிப்படைத்தன்மை

எங்கள் DSA கடமைகளுக்கு இணங்க இந்த கோடைகாலத்தில் முதன்முதலில் சேர்க்கப்பட்ட எங்கள் ஐரோப்பிய ஒன்றியப் பக்கத்தை நாங்கள் கூடுதல் தகவல்கள் மற்றும் எங்கள் தீர்வுகாணும் நடைமுறைகள் குறித்த EU தொடர்பான தகவல்களுடன் புதுப்பித்துள்ளோம், உதாரணமாக உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்யும் போது எங்கள் தீர்வாளர்கள் ஆதரிக்கும் மொழிகள் குறித்த விவரங்களைச் சேர்த்துள்ளோம். மற்றவைக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தில் எங்கள் தானியங்கி உள்ளடக்கத்தை தீர்வுகாணும் கருவிகள், உள்ளடக்க பாதுகாப்பு மற்றும் எங்களின் Snapchat செயலியின் சராசரி மாதாந்திர செயலில் உள்ள பெறுநர்கள் குறித்த கூடுதல் விவரங்களையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.

விளக்கமளிக்கும் கையேடு மற்றும் சொற்களஞ்சியம்

இந்த அறிக்கைகள் மூலம் எங்கள் முக்கிய நோக்கம் பங்குதாரர்களுக்கு ஏராளமான தகவல்களை கொடுக்க வேண்டியது என்பதால், எங்களின் வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் மிக நீண்டதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இதை எளிதாக்க, "Snap's-இன் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளுக்கான வழிகாட்டியை" நாங்கள் தொடர்ந்து சேர்த்துள்ளோம், மேலும் எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் குறித்த கூடுதல் தகவல்களையும் விளக்கங்களையும் சேர்க்கசொற்களஞ்சியத்தைவிரிவுபடுத்தியுள்ளோம். இந்த தகவல் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், எங்கள் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் குறிப்பாக உள்ளடக்கத்தின் ஒவ்வொரு வகையும் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ளவும், எங்களின் முந்தைய அறிக்கைகளுடன் புதியவற்றை எளிதாக ஒப்பிட்டுப் பார்க்கவும் அனுமதி அளிக்கிறது. இப்போது மக்கள் அறிக்கையில் உள்ள விரைவான வரையறையை விட கூடுதலாக ஆராய விரும்பினால், கூடுதல் தகவலுக்கு கிளிக் செய்வதன் மூலம் அவர்கள் விரைவாக ஆழமாகச் செல்லலாம்.

எங்கள் சமூகத்தினர் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையை ஈட்டவும் அதை தற்காத்து வைத்துக் கொள்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் சமூகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்கள் முன்னேற்றத்தை தெரியப்படுத்தவும் பொறுப்பான வகையில் பணியாற்றவும் தொடர்ந்து பணியாற்றுவோம்.

செய்திக்குத் திரும்புக