2022-ஆம் ஆண்டின் முதலாவது அரை ஆண்டிற்கான எங்களுடைய வெளிப்படைத்தன்மை அறிக்கை

நவம்பர் 29, 2022

இன்று எங்களின் சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கையை வெளியிடுகிறோம், இது 2022-ஆம் ஆண்டின் முதல் பாதி உள்ளடக்கியுள்ளது.
Snap-இல் எங்கள் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எங்களின் முதல் முன்னுரிமையாகும். மேலும் எங்கள் எங்கள் முக்கியத் தகவலைப் பகிர்ந்து எங்களை பொறுப்பானவர்களாக நிலைநிறுத்த ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் அத்தியாவசியக் கருவிகளாகும்.
2015=ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட எங்கள் முதல் வெளிப்படைத்தன்மை அறிக்கையிலிருந்து ஒவ்வொரு அறிக்கையையும் கடந்த அறிக்கையை விட அதிகத் தகவல் நிறைந்ததாகவும், உட்கொள்ளத்தக்கதாகவும் திறன்மிக்கதாகவும் உருவாக்குதது தான் எங்கள் குறிக்கோளாகும். எங்கல்து சமீபத்திய அறிக்கையில், எங்கள் சமூகம் எங்களின் அறிக்கையிடுதலை நன்றாகப் புரிந்துகொள்ள உதவவும், இந்த அறிக்கைகள் மேலும் விரிவானதாகவும் தகவல் நிறைந்ததாகவும் ஆக்குவதற்கான எங்களின் உறுதிப்பாட்டைக் கட்டியெழுப்பவும் பல்வேறு கூடுதல் அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை செய்துள்ளோம்.
நாடு மட்டத்தில் தவறான தகவல் தரவுகளை கிடைக்கச் செய்தல்
முதன்முறையாக, "தவறான தகவல்" என்பதை, நாடு அளவில் தனியாகக் கிடைக்கும் வகையாக அறிமுகப்படுத்துகிறோம்,, இதன் மூலம் உலகளவில் தவறான தகவல்களை அறிக்கையிடும் எங்களின் முந்தைய நடைமுறையைக் கட்டியெழுப்புகிறோம். இந்தத் தகவலை நாடு வாரியாக வழங்குவதற்கான ஒரே தளம் நாங்கள் மட்டுமே. இந்த அரையாண்டில், மொத்தம் 4,877 தவறான அல்லது தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தை தீங்கிழைக்கக்கூடிய அல்லது தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை நடைமுறைப் படுத்தியுள்ளோம். Snapchat-இல் தவறான தகவல் பரவுவதைத் தடுக்க, எங்கள் தளத்தை வடிவமைப்பதில் தொடங்கி, எப்போதும் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்து வருகிறோம். Snapchat முழுவதும், சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை வைரல் ஆக நாங்கள் அனுமதிப்பதில்லை, மேலும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை நாங்கள் கண்டறியும்போது அது அதிகமாக பகிரப்படும் ஆபத்தைக் குறைக்க அதை உடனடியாக நீக்குவதுதான் எங்கள் கொள்கை ஆகும். தவறான தகவலை உள்ளடக்கிய உள்ளடக்கத்திற்கு எதிராகச் செயல்படுத்துவதற்கான எங்கள் அணுகுமுறையும் இதேபோல் நேரடியானது: நாங்கள் அதை அகற்றுவோம்.
சமீபத்திய அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் மற்றும் உலக அளவில் நடைபெறும் பிற தேர்தல்களுடன், தவறான தகவலுக்கு எதிரான எங்கள் அமலாக்கம் பற்றிய விரிவான நாடு சார்ந்த தகவல் மதிப்புமிக்கது என நாங்கள் நம்புகிறோம். Snapchat-இல் தவறான தகவல்கள் பரவுவதை நாங்கள் எவ்வாறு தடுக்கிறோம் என்பது பற்றி நீங்கள் இங்கே மேலும் படிக்கலாம்.
சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் தவறான பயன்பாட்டை எதிர்கொள்ளுதல்
எங்கள் சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரையும், குறிப்பாக சிறார்களை பாலியல் சுரண்டல் செய்வது சட்டவிரோதமானது, வெறுக்கத்தக்கது மற்றும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களால் தடைசெய்யப்பட்டுள்ளது. குழந்தை பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் இமேஜரி (CSEAI)-ஐ எங்கள் தளத்தில் தடுப்பது, கண்டறிவது மற்றும் ஒழிப்பது ஆகியவை தான் எங்களின் முதல் முன்னுரிமை, மேலும் நாங்கள் எங்கள் தளத்தில் இந்த வகையான துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராட எங்கள் திறன்களை தொடர்ந்து மேம்படுத்துகிறோம். 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இந்த அறிக்கையில் புகாரளிக்கப்பட்ட சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் துர்பிரயோக மீறல்களின் 94 சதவீதத்தினை நாங்கள் தீவிரமாக கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளோம் - இது எங்கள் முந்தைய அறிக்கையிலிருந்து ஆறு சதவிகிதம் அதிகமாகும்.
கூடுதலாக நாங்கள் CSEAI-ஐ எதிர்த்துப் போராடுவதற்கான எங்களின் முயற்சிகளில் புதுப்பிக்கப்பட்ட மொழியையும் அதிகரிக்கப்பட்ட உள்நுணுக்கங்களையும் வழங்குகிறோம். நாங்கள் நீக்கிய CSEAI உள்ளடக்கத்தின் மொத்த எண்ணிக்கை மற்றும் தொலைந்து போன மற்றும் சுரந்தப்பட்ட குழந்தைகளுக்கான அமெரிக்க தேசிய மையத்திற்கு (NCMEC) எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அணிகள் அளித்த CSEAI அறிக்கைகளின் மொத்த எண்ணிக்கையை நாங்கள் இப்போது பகிர்கிறோம்.
கொள்கை மற்றும் தரவு வரையறைகள் சொற்களஞ்சியம் அறிமுகம்
இனிமேல் வெளியிடப்படும் அனைத்து அறிக்கைகளிலும் சேர்க்க கொள்கை மற்றும் தரவு வரையறைகள் சொற்களஞ்சியத்தை நாங்கள் சேர்த்துள்ளோம். இந்த சொற்களஞ்சியத்தை அறிமுகம் செய்வதன் காரணம், நாங்கள் பயன்படுத்தும் படங்கள் மற்றும் அளவீடுகளில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்குவதாகும், இது ஒவ்வொரு வகையின் கீழும் எந்த வகையான மீறல் உள்ளடக்கம் சேர்க்கப்பட்டுள்ளது மற்றும் செயல்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவாகக் கோடிட்டுக் காட்டும். உதாரணமாக "அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறை," வெறுப்புப் பேச்சு," "பிற ஒழுங்குபடுத்தப்பட்ட சரக்குகள்," அல்லது பிற உள்ளடக்க வகைகள் என்பவற்றுக்கான நாங்கள் வழங்கும் அர்த்தம் என்ன என வாசகர்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றாள், அவர்கள் அவற்றுக்கான விளக்கத்திற்கு சொற்களஞ்சியத்தைப் பார்க்கலாம்.
மீறும் உள்ளடக்கத்தை முன்கூட்டியே நீக்குவது
அறிக்கையில் உள்ள தரவைப் பார்க்கும்போது, மொத்த அறிக்கைகள் மற்றும் அமலாக்கத்திற்கான புள்ளிவிவரங்கள் எங்களிடம் புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்தை மட்டுமே கணக்கிடுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்வது முக்கியமாகும். உள்ளடக்கம் குறித்து எங்களிடம் புகாரளிக்கும் முன்பே Snap முன்கூட்டியே அதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்த நிகழ்வுகள் இதில் கணக்கிடப்படவில்லை. எங்களது முன்கூட்டிய கண்டறிதல் முயற்சிகளில் நாங்கள் செய்த மேம்பாடுகள் மொத்த புகார்கள், அமலாக்க எண்ணிக்கை மற்றும் முக்கியப் பிரிவுகளில் எங்கள் சமீபத்திய அறிக்கையில் இருந்து மீள்வரு நேரங்கள் ஆகியவற்றைக் குறைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளது என நாங்கள் நம்புகிறோம். Snapchat பயனர்களை உள்ளடக்கம் அடையும் வாய்ப்பு கிடைப்பதற்கு முன் எங்கள் மேம்படுத்தப்பட்ட தானியங்கு கண்டறிதல் கருவிகள் உள்ளடக்கத்தை அடையாளம் கண்டு நீக்கியதால், எதிர்வினை உள்ளடக்க அமலாக்கம் குறைவதைக் கண்டோம். (அதாவது Snapchat பயனர்களிடமிருந்து புகார்கள்).
குறிப்பாக எங்கள் கடைசி அறிக்கையிலிருந்து Snapchat பயனர்களிடமிருந்து அறிக்கைகளில் அச்சுறுத்தும் மற்றும் வன்முறையான உள்ளடக்க அமலாக்கங்களில் 44% குறைந்துள்ளதையும், போதைப்பொருள் உள்ளடக்க அமலாக்கங்களில் 37% குறைவு மற்றும் வெறுப்பூட்டும் பேச்சு உள்ளடக்க அமலாக்கங்களில் 34% குறைந்துள்ளதையும் நாங்கள் கவனித்தோம். சராசரியாக, மீறும் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான எங்கள் சராசரி திருப்புமுனை நேரம் கடந்த பாதியில் இருந்து ஒரு நிமிடத்திற்கு மேல் 33% அதிகரித்துள்ளது
Snapchat பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்தாலும், வெளிப்படைத்தன்மை மற்றும் எங்களது சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்பு மாறாமல் உள்ளது. நாங்கள் தொடர்ந்து அதற்குப் பொறுப்பேர்ப்போம் மற்றும் எனல் முன்னேற்றம் குறித்த புதுப்பிப்புகளைத் தெரிவிப்போம்.
செய்திகளுக்குத் திரும்புக