எங்களின் உலகளாவிய தளப் பாதுகாப்பின் தலைவரைச் சந்தியுங்கள்

வணக்கம், Snapchat சமூகமே! என் பெயர் ஜாக்குலின் போஷர், நான் கடந்த இலையுதிர் காலத்தில் நிறுவனத்தின் முதல் உலகளாவிய தளப் பாதுகாப்பின் தலைவராக Snap-இல் சேர்ந்தேன்.
ஆன்லைன் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் புதிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை உருவாக்குவது பாதுகாப்பிற்கான Snap இன் ஒட்டுமொத்த அணுகுமுறையை மேம்படுத்துவது; உள் கொள்கைகள், தயாரிப்பு கருவிகள் மற்றும் அம்சங்கள் பற்றிய ஆலோசனை; மற்றும் வெளிப்புற பார்வையாளர்ககள் சொல்வதைக் கேட்பது மற்றும் அவர்களுடன் ஈடுபடுவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்- இவை அனைத்தும் Snapchat சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வை ஆதரிக்க உதவுகின்றன.
பாதுகாப்பு ஆலோசகர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிற முக்கியப் பங்குதாரர்களுக்கு Snapchat எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் கருத்தைப் பெறுவதற்கும் உதவுவதே எனது பணி என்பதால், நீங்கள் அல்லது உங்களுக்கு நெருக்கமான ஒருவர் ஆர்வமுள்ள Snapchat பயனராக இருந்தால், செயலியைப் பற்றிய எனது ஆரம்பக் கற்றல்கள்; என்னை ஆச்சரியப்படுத்தியது என்ன; மற்றும் சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் ஆகிய சிலவற்றைப் பகிர்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன்
ஆரம்ப கற்றல்கள் – Snapchat மற்றும் பாதுகாப்பு
Microsoft-இல் ஆன்லைன் பாதுகாப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பிறகு, ஆபத்து சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். 2000 களின் முற்பகுதியில், ஸ்பேம் மற்றும் ஃபிஷிங் போன்ற சிக்கல்கள், நுகர்வோருக்கு கல்வி கற்பதற்கும் சமூக ரீதியாக வடிவமைக்கப்பட்ட அபாயங்களைக் குறைப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டின. சமூக ஊடக தளங்களின் வருகை மற்றும் பொதுவெளியில் பதிவு செய்யக்கூடிய மக்களின் திறன் ஆகியவை சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டின் வெளிப்பாட்டைக் குறைக்க உதவ உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உள்ளடக்க கட்டுப்பாடு ஆகியவற்றின் தேவையை அதிகரித்தது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, Snapchat அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனம் மற்றும் செயலி இடந்தும் வெவ்வேறு என்று எனக்குத் தெரியும் ஆனால் நான் இங்கு வேலை செய்யத் தொடங்கும் வரை அவை எவ்வாறு வேறுபடுகின்றன எனபதை நான் உணரவில்லை. அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து மக்கள் தங்கள் உண்மையான நபர்களுடம் தொடர்புகொள்ள உதவும் வகையில் Snapchat வடிவமைக்கப்பட்டது. அதாவது பெரிய எண்ணிக்கையிலான அறியப்பட்ட (அல்லது அறியப்படாத) பின்தொடர்பவர்களை விட அவர்கள் "உண்மையான வாழ்க்கையில்" அவர்கள் அறிந்தவர்கள் என்று அர்த்தம். Snapchat கேமராவை சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. உண்மையில், முதல் தலைமுறை Snapchat பயனர்கள் அல்லாதவர்களுக்கு (என்னைப் போன்றவர்கள்) செயலியின் இடைமுகம் சிறிது குழப்பமாகத் தோன்றலாம்ஏனெனில் பாரம்பரிய சமூக ஊடகத் தலங்கள் உள்ளடக்க ஊட்டத்தைத் திறப்பது போலல்லாமல் அது நேரடியாக கேமராவைத் திறக்கும்.
ஒருவர் எதிர்பார்ப்பதை விட Snapchat இன் வடிவமைப்பில் பல விஷயங்கள் உள்ளன, மற்றும் அந்த பரிசீலிக்கப்பட்ட அணுகுமுறை நிறுவனம் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீது வைக்கும் மிகப்பெரிய மதிப்பிலிருந்து உருவாகிறது. பாதுகாப்பு நிறுவனத்தின் உள்ளமைந்த ஒரு பகுதியாக உள்ளது, மேலும் மக்கள் தங்களை வெளிப்படுத்த அதிகாரிமளிக்க, இக்கணத்தில் வாழ, உலகப் பற்றி அறிய மற்றும் ஒன்றாக மகிழ்வுடன் இருப்பது ஆகிய அதன் நோக்கத்தில் உள்ளமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக உணராத போது நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் தங்களை வெளிபடுத்தத் தயங்குவார்கள்.
நிஜ-வாழ்க்கையில் மனித நடத்தை மற்றும் இயக்க நிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்க தொழில்நுட்பம் கட்டமைக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கை Snap-இன் இயங்கு விசையாகும். பாதுகாப்பு கண்ணோட்டத்தில் இருந்தும் இது மிக முக்கியமானது. எடுத்துக்காட்டாக, இயல்புநிலையில் யார்வேண்டுமானாலும் உங்களை Snapchat-இல் தொடர்பு கொள்ள முடியாது, நிஜ வாழ்வில் நண்பர்கள் தொடர்புக்கொள்வது போலவே இங்கும் நண்பர்கள் நேரடியாகத் தொடர்புகொள்ளும் முன் ஒருவரையொருவர் நண்பராக ய்ற்றுக்கொள்ள வேண்டும்.
புதிய அம்சங்களை உருவாக்கும் போது Snap வடிவமைப்பின் மூலம் தையுரிமை என்ற கொள்கைகளைப் பயன்படுத்துகிறது, மேலும் வடிவமைப்பின் மூலம் பாதுகாப்பு என்பதை ஆதரித்து தாழ்வுய்ய தளங்களில் முதல் தளம் இது தான். அதாவது எங்கள் அம்சங்களின் வடிவமைப்புக் கட்டத்திலேயே பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்படுகிறதேயன்றி வடிவமைத்த பின் பொருத்தப்படுவதில்லை. ஒரு தயாரிப்பு அல்லது அம்சம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப் படலாம் என்பது பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இருந்து உருவாக்கத்தின் ஆரம்பக் கட்டங்களிலேயே கருத்தில் கொல்லப்படுகிறது.
என்னைச் ஆச்சரியப்படுத்திய விஷயம் – சில முக்கிய அம்சங்களுக்கு பின்னால் உள்ள சில சூழல்கள்
இணையப் பாதுகாப்பு பற்றி யோசிக்கும் போது மற்றும் தொழில்துறையில் பணிபுரியும் நான் Snapchat பற்றிய சில கவலைகளைக் கேள்விப்பட்டேன். கீழே சில உதாரணங்களும் கடந்த சில மாதங்களில் கற்றுக்கொண்டவையும் உள்ளன.
இயல்புநிலையில் நீக்கப்படும் உள்ளடக்கம்
Snapchat அதன் ஆரம்பகால கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இயல்புநிலையில் நீக்கப்படும் உள்ளடக்கம் அறியப்பட்டிருக்கலாம். மற்றவர்களை போலவே, இந்த அம்சத்தைப் பற்றிய எனது சொந்த ஊகங்களைக் கொண்டிருந்தேன், ஆனால் நான் முதலில் கற்பனை செய்ததைப் போல் இல்லாமல் இது வேறு ஒன்றாக இருக்கிறது. மேலும், இது நிஜ-வாழ்க்கை நண்பர்களின் ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
Snapchat இன் அணுகுமுறை மனிதனை மையமாகக் கொண்ட வடிவமைப்பில் வேரூன்றி உள்ளது. நிஜ வாழ்க்கையில், நண்பர்களுக்கு இடையேயான உரையாடல்கள் சேமிக்கப்படுவதில்லை, படியெடுக்கப் படுவதில்லை அல்லது நிரந்தரமாக பதிவு செய்யப் படுவதில்லை. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அல்லது நாம் உருவாக்கும் ஒவ்வொரு உள்ளடக்கமும் எடையிடப் படாது என்று தெரியும் போது நாம் இயல்பாக உணர்கிறோம் மற்றும் நம் உண்மையான இயல்புதான் இருக்க முடியும்.
நான் கேள்விப்பட்ட ஒரு தவறான கருத்து என்னவெனில் Snapchat-இன் இயல்புநிலையில் நீக்கப்படும் அணுகுமுறையானது குற்றவியல் விசாரணைகளுக்கான சட்டவிரோத நடத்தையின் ஆதாரங்களை அணுகுவதை சாத்தியமற்றதாக ஆக்குகிறது. இது தவறானது. சட்ட அமலாக்கம் எங்களுக்கு ஒரு சட்டப்பூர்வ பாதுகாப்பு கோரிக்கையை அனுப்பும்போது, ஒரு கணக்கில் உள்ள தற்போதைய உள்ளடக்கத்தை பாதுக்கக்கும் திறன் Snap-க்கு இருக்கிறது மற்றும் அது அவ்வாறு பாதுகாக்கிறது. Snapகள் மற்றும் அரட்டைகள் எவ்வாறு நீக்கப்படுகின்றன என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்கு, இந்தக் கட்டுரையைக் காண்க..
இளம் வயதினரை அந்நியர்கள் கண்டறிவது
இணையவழி கலந்துரையாடகள் என வரும் போது அந்நியர்கள் தங்களின் பதின்ம வயது பிள்ளைகளை எவ்வாறு கண்டறிவார்கள் என்பது எந்தப் பெற்றோருக்குமான ஒரு இயல்பான கவலையாகும். Snapchat உண்மையான நண்பர்களிடையே மற்றும் நண்பர்களுக்கு மத்தியிலான தகவல்தொடர்புகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது; அது சில சமூக ஊடக தளங்களைப் போல் அறிமுகமற்ற நபர்களுடனான இணைப்புகளை ஏற்படுத்தாது. இந்த செயலி ஏற்கனவே அறிமுகமான நபர்களுடன் தொடர்புகொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், அந்நியர்கள் குறிப்பிட்ட நபர்களைக் கண்டுபிடித்து தொடர்பு கொள்வது கடினமானதாகும். பொதுவில், Snapchat-இல் தொடர்புகொள்ளும் நபர்கள் ஏற்கனவே ஒருவரையொருவர் நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் தான். கூடுதலாக, 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு பொது சுயவிவரங்களை தடை செய்வது போன்ற கூடுதல் பாதுகாப்புகளை சேர்ப்பதன் மூலம் அந்நியர்கள் மைன்ர்களைக் கண்டறிவதை Snap மேலும் கடினமாக்கியுள்ளது. Snapchat மைனர்களுடன் பொதுவான நண்பர்கள் இருந்தால் மட்டுமே அவர்களை நண்பர் பரிந்துரை பட்டியல்களில் (விரைவாகச் சேர்ப்பது) அல்லது தேடல் முடிவுகளில் வெளிவர அனுமதிக்கிறது.
நண்பர் செக்-அப் என்பது பெற்றோர்களும் பராமரிப்பாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என நாங்கள் நினைக்கும் ஒரு புதிய கருவியாகும். Snapchat பயனர்கள் தங்கள் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டவர்களுடன் இன்னும் தொடர்பில் இருக்க இரும்புகிறார்களா என்பதை மதிப்பாய்வு செய்ய அவர்களைத் தூண்டும். நீங்கள் இனி தொடர்பு கொள்ள விரும்பாதவர்களை எளிதாக அகற்றிவிடலாம்.
Snap வரைபடம் மற்றும் இருப்பிடம் பகிர்தல்
அதே போல், Snap வரைபடம் பற்றிய சிக்கல்கள் சில்வாற்றை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், Snap வரைபடம் என்பது Snapchat பயனர்கள் தங்கள் இருப்பிடத்தைப் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கும், மேலும் உணவகங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்ற தங்கள் இருப்பிடம் சார்ந்த பொருத்தமான இடங்கள் மற்றும் நிகழ்வுகளை கண்டுபிடிக்க அனுமதிக்கும். இயல்பு நிலையில், Snap வரைபடத்தில் உள்ள இருப்பிட அமைப்புகள் தனிப்பட்டது (Ghost பயன்முறை) என அனைத்து Snapchat பயனர்களுக்கும் அமைக்கப்பட்டிருக்கும். Snapchat பயனர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பகிர்வதற்கான விருப்பம் இருக்கிறது, ஆனால் அதை அவர்கள் ஏற்கனவே நண்பர்களாக ஏற்றுக் கொண்டுள்ளவர்களிடம் மட்டுமே செய்யமுடியும் – மேலும் அவர்கள் ஒவ்வொரு நண்பருக்கும் இருப்பிடத்தை பகிரலாமா வேண்டாமா என்று தேர்வு செய்யலாம். நண்பர்களுடன் இருப்பிடத்தைப் பகிர்வது, "அனைவருக்கும் பகிரவேண்டும் அல்லது ஒருவருக்கும் பகிரமுடியாது" என்ற அணுகுமுறை அல்ல. பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கு Snap வரைபடத்தின் கூடுதல் அம்சம்: ஒருவர் Snapchatஐப் பல மணி நேரம் பயன்படுத்தவில்லை என்றால், அவர்கள் நண்பர்களுக்கு வரைபடத்தில் தென்பட மாட்டார்கள்.
பாதுகாப்பு கண்ணோட்டத்தில் இருந்து மிகவும் முக்கியமாக, Snapchat பயனர் தன் நபராக இல்லாத ஒருவருடன் தன் இருப்பிடத்தைப் பகிரும் விருப்பம் இல்லை, எந்த நண்பருடன் இருப்பிடத்தைப் பகிரவேண்டும் அல்லது இருப்பிடத்தைப் பகிராமலேயே இருப்பது போன்றவற்றில் Snapchat பயனர்களுக்கு முழு கட்டுப்பாடு இருக்கிறது.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம்
ஆரம்பத்தில் நண்பர்கள் இடையேயான தனிப்பட்ட தகவல் தொடர்புகள் மற்றும் பரந்த பார்வையாளர்களுக்கு கிடைக்கக்கூடிய பொது உள்ளடக்கத்தை வித்தியாசமாக கையாள்வது என்ற திட்டமிட்ட முடிவை நிறுவனம் எடுத்தது. உள்ளடக்கம் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்படும் சாத்தியமுள்ள Snapchat இன் அதிகமான பொதுப் பகுதிகளில், சாத்தியமான தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் "வைரலாக ஆவதைத்" தடுக்க உள்ளடக்கம் தொகுக்கப்படுகிறது அல்லது முன்கூட்டியே கட்டுப்படுத்தப்படுகிறது. Snapchat-இன் இரண்டு பகுதிகள் இந்த வகைப்பிரிவில் வருகின்றன, அவையாவன: Discover, இதில் சரிபார்க்கப்பட்ட ஊடக வெளியீட்டாளர்கள் மற்றும் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் உள்ளடக்கம் மற்றும் ஸ்பாட்லைட் இதில் Snapchat பயன்ர்க்கால் தங்கள் சொந்த பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை பெரிய சமூகத்துடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஸ்பாட்லைடில் அனைத்து உள்ளடக்கமும் தானியங்கு கருவிகள் மூலம் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, அதை பிறர் பார்க்கத் தகுதி பெறும் முன் கூடுதல் பாதுகாப்புக்கு மனிதக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது, தற்போது ஒன்றிரண்டு டஜனுக்கும் மேலானவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது உள்ளடக்கம் Snapchat இன் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது மற்றும் தானியங்கு கட்டுபாடு தவறவிட்டிருக்கக் கூடிய ஆபத்துகளைத் தணிக்க உதவுகிறது. வைரலாகுவதைக் கட்டுப்படுத்டுவதால், மற்ற சமூக ஊடக தளங்களுடன் ஒப்பிடுகையில் உதாரணமாக சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பகிரங்கமாக பதிவிடுவதற்கான வேண்டுகோளை Snap குறைக்கிறது. .
போதைப்பொருள் வெளிப்பாடு
போதைப்பொருள் விற்பனையாளர்கள் உலகளவில் தவறாகப் பயன்படுத்தும் பல இணையவழி தளங்களில் Snapchat ஒன்றாகும். தங்கள் குழந்தைகளை fentanyl கலந்த போலி மாத்திரைகளுக்குப் பறிகொடுத்த பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய ஊடக செய்தி எதையேனும் நீங்கள் பார்த்திருந்தால், இந்தச் சூழல் எவ்வளவு வேதனை தருவதாகவும் திகிலூட்டுவதாகவும் இருக்கும் என்பது உங்களுக்கு புரியும். எங்களுக்கு கட்டாயம் புரிகிறது மற்றும் இந்த திகிலூட்டும் பரவலுக்கு தங்கள் அனுபுக்குரியவர்களைப் பறிகொடுத்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
கடந்த ஆண்டில், Snap fentanyl மற்றும் போதைப்பொருள் தொடர்பான உள்ளடக்கச் சிக்க்லை மூன்று முக்கிய வழிகளில் தீய்விரமாகவும் விரிவாகவும் கையாள்கிறது:
  • Snapchat இல் போதைப்பொருள் தொடர்பான செயல்பாட்டைக் கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்குதல் மற்றும் பயன்படுத்துதல், இதையொட்டி, தளத்தை தவறாகப் பயன்படுத்தும் போதைப்பொருள் விற்பனையாளர்களைக் கண்டறிந்து அகற்றுதல்;
  • சட்ட அமலாக்க விசாரணைகளுக்கான எங்கள் ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், இதன் மூலம் அதிகாரிகள் விரைவில் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியும்; மற்றும்
  • பொது சேவை அறிவிப்புகள் மற்றும் செயலில் நேரடியாக உள்ள கல்வி உள்ளடக்கம் மூலம் Snapchat பயனர்களுடன் fentanyl பற்றிய ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் (இந்த முயற்சிகள் குறித்து மேலும் இங்கேதெரிந்துகொள்ளலாம்)
போதைப்பொருள் தொடர்பான செயல்பாட்டுக்கு எதிரான தளமாக Snapchat-ஐ உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம், மேலும் வரும் மாதங்களில் இந்தப் பணிகளை மேலும் விரிவாக்குவோம். இதற்கிடையில், ஆன்லைன் தளங்களில் பரவும் அபாயகரமான போலி மருந்துகளின் பரவலான அச்சுறுத்தலை பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் புரிந்துகொள்வதும், ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பேசுவது முக்கியம்.
Snap 2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக் களங்களில் புதிய ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அம்சங்களைத் தொடங்குதல், அத்துடன் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் நடைமுறைகளைப் பின்பற்றுவதை எங்கள் சமூகத்திற்குத் தெரிவிக்கும் மற்றும் அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய ஆதாரங்கள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல் உட்பட பலவற்றைத் திட்டமிட்டுள்ளது. செயல்திறமிக்க புதிய ஆண்டு, கற்றல், ஈடுபாடு, பாதுகாப்பு மற்றும் வேடிக்கை நிறைந்த தொடக்கம்!
- ஜேக்லின் பியூஷர், தளப் பாதுகாப்பின் உலகத் தலைவர்
செய்திகளுக்குத் திரும்புக