குடும்ப மையம் குறித்த உள்ளடக்க கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்கிறோம்

மார்ச் 14, 2023

கடந்த ஆண்டு, Snapchat-இல் தங்கள் டீனேஜ் பிள்ளைகள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பற்றிய உள்நுணுக்கங்களைப் பெற்றோருக்கு வழங்குவதற்காகவும், அவர்களின் டீனேஜ் பிள்ளைகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையிலும் பெற்றோருக்கு குடும்ப மையத்தை அறிமுகப்படுத்தினோம். பெற்றோர்கள் தங்கள் டீனேஜ் பிள்ளைகளின் தனிப்பட்ட அனுபவங்களையும், தேவைகளையும் தனிப்பயனாக்க உதவும் வகையில் காலப்போக்கில் கூடுதல் கருவிகளை சேர்க்கும் திட்டங்களையும் பகிர்ந்து கொண்டோம்.
இன்று குடும்ப மையத்தில் எங்கள் சமீபத்தியக் அம்சமான உள்ளடக்கக் கட்டுப்பாடை அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம், அது Snapchat-இல் தங்கள் டீனேஜ் பிள்ளைகள் பார்க்கக்கூடிய உள்ளடக்கத்தை வரையறுக்க பெற்றோர்களை அனுமதிக்கிறது.
Snapchat பாரம்பரிய சமூக ஊடகத் தளங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது, மேலும் இது மக்கள் உள்ளடக்கத்தைப் பயனபடுத்தும் வகைக்கும் நீடிக்கிறது. பெருமளவுப் பார்வையாளர்களை அடையும் வகையில் எங்கள் செயலியில் இரண்டு பாகங்கள் உள்ளன:
  • கதைகள் எங்களது உள்ளடக்கத் தளமாகும், இங்கு உள்ளடக்கம் உருவாக்குபவர்கள், Snap நட்சத்திரங்கள் மற்றும் NBC செய்திகள், Axios, ESPN Le Monde and People போன்ற 900 மேற்பட்ட ஊடக கூட்டாளர்கள் நம்பகமான செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் பிற வகைகளை வழங்குகின்றனர். கதைகள் திறந்த தளம் அல்ல, மேலும் படைப்பாளிகள் மற்றும் கூட்டாளர்கள் எங்கள் உள்ளடக்க தலையங்க வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்.
  • ஸ்பாட்லைட் எங்கள் பொழுதுபோக்குத் தளமாகும், அங்கு Snapchat பயனர்கள் எங்கள் சமூகத்தின் உறுப்பினர்கள் உருவாக்கிய வேடிக்கையான மற்றும் ஆக்கபூர்வமான உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். ஸ்பாட்லைடில் Snapchat பயனர்கள் சமர்ப்பிக்கும் எந்த உள்ளடக்கமும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைக் கடைபிடிக்க வேண்டும்.
எந்த வகையான உள்ளடக்கத்தை ஒளிபரப்ப அனுமதிக்கிறோம் என்பது குறித்து நாங்கள் திட்டமிட்டுள்ளோம். எங்கள் தளம் மற்றும் கொள்கைகள் சரிபார்க்கப்படாத உள்ளடக்கங்கள் வைரலாவதை தடுக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன, மேலும் கதைகள் அல்லது ஸ்பாட்லைட்டை அடையத் தகுதி பெறும் முன் படைப்பாளிகள் மற்றும் Snapchat பயனர்களிடமிருந்து பொது மக்களை எதிர்கொள்ளும் உள்ளடக்கத்தை நாங்கள் முன்கூட்டியே மட்டுப்படுத்துகிறோம்.
குடும்ப மையத்தில் உள்ள எங்களின் புதிய உள்ளடக்கக் கட்டுப்பாடுகள், உணர்ச்சிகரமான அல்லது பரிந்துரைக்கக்கூடியவை என அடையாளம் காணப்பட்ட வெளியீட்டாளர்கள் அல்லது படைப்பாளர்களின் கதைகளை வடிகட்ட பெற்றோரை அனுமதிக்கும். உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை செயல்படுத்த, பெற்றோர்கள் தங்கள் டீனேஜ் பிள்ளைகளுடன் ஏற்கனவே ஒரு குடும்ப மையத்தை அமைத்திருக்க வேண்டும்.
தகுதிப் பரிந்துரைக்கான எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்களை வெளியிடுகிறோம் 
சமூக வழிகாட்டுதல்கள் எங்கள் முழு தளத்திலும் கண்டிப்பாக தடை செய்யப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் நடத்தைகள் குறித்து விவரிக்கும் அதே சமயம், கதைகள் அல்லது ஸ்பாட்லைட்டில் Snapchat பயனர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் பொது உள்ளடக்கத்திற்கு இன்னும் அதிக தரக் கட்டுப்பட்டை அமைத்துள்ளோம்.
முதல் முறையாக, கதைகள் அல்லது ஸ்பாட்லைட்டில் எந்த சமூக உறுப்பினர்களின் உள்ளடக்கம் தோன்றுகிறதோ அவர்களுக்கான எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்களைநாங்கள் வெளியிடுகிறோம். இந்த வழிகாட்டுகள் விவரிப்பவை:
  • எங்கள் சமூக வழிகாட்டுதல்களுக்கு இணங்கதடைசெய்யப்பட்ட உள்ளடக்கம்;
  • கதைகள் அல்லது ஸ்பாட்லைட் ஆகியவற்றில் எந்த உள்ளடக்கம் பரிந்துரைக்கப்படுவதற்குத் தகுதியானது, அதாவது அது பெரும்பாலானவர்களை சென்றடையும் என்று அர்த்தம்.
  • எந்த உள்ளடக்கம் கூருணர்வுமிக்கது மற்றும் எங்கள் புதிய உள்ளடக்கக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம்.
எங்கள் ஊடகக் கூட்டாளர்கள் மற்றும் Snap நட்சத்திரங்களுடன் இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் எப்போதும் பகிர்ந்து வருகிறோம். அனைவரும் படிக்க இந்த முழு உள்ளடக்க வழிகாட்டுதல்களை வெளியிடுவதன் மூலம், பொது உள்ளடக்கம் மற்றும் விநியோகத்திற்கான எங்கள் தகுதித் தேவைகள் ஆகியவற்றிற்கு நாங்கள் அமைத்துள்ள வலுவான தரநிலைகளில் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்க விரும்புகிறோம்.
இந்தப் புதிய கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், நம்பகமான பெரியவர்கள் மற்றும் டீனேஜர்களுக்கு அவர்களின் Snapchat அனுபவத்தைத் தனிப்பயனாக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் ஆன்லைன் அனுபவங்களைப் பற்றிய பயனுள்ள உரையாடல்களை மேற்கொள்ள அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் என்று நம்புகிறோம். இந்த உரையாடல்களை நீங்கள் உங்கள் டீனேஜ் பிள்ளைகளுடன் துவங்க உதவத் தேவையான வளங்களை எங்கள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
இறுதியாக, My AI ஐச் சுற்றியுள்ள எங்கள் குடும்ப மையத்தில் கூடுதல் கருவிகளைச் சேர்ப்பதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம், இது பெற்றோருக்கு அவர்களின் டீனேஜ் பிள்ளையின் My AI செயலியைச் சுற்றி அதிகத் தெரிவுநிலையையும் கட்டுப்பாட்டையும் வழங்கும் எங்களது சோதனை சாட்பாட் ஆகும்.
— டீம் Snap
செய்திகளுக்குத் திரும்புக