Snapchat-இல் தவறான தகவல்கள் பரவுவதை நாங்கள் எவ்வாறு தடுக்கிறோம்

செப்டம்பர் 8, 2022

அமெரிக்காவில் நெருங்கி வரும் இடைக்கால தேர்தல்களுடன், Snapchat-இல் தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கான எங்களின் நீண்டகால அணுகுமுறையையும், எங்களின் தளத்தில், தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கான எங்களின் வலுவான அடித்தளத்தை கட்டமைக்க நாங்கள் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்க விரும்புகிறோம்.
எங்கள் முயற்சிகள் எப்போதும் எங்கள் தளத்தின் கட்டமைப்பு மூலம் தொடங்கியுள்ளது. Snapchat உடன், நிஜ-வாழ்க்கை உரையாடல்களின் தன்னிச்சையான தன்மை மற்றும் வேடிக்கையை கைப்பற்ற வேறு ஒன்றை நாங்கள் உருவாக்க விரும்பினோம்.. ஆரம்பத்தில் இருந்து எங்கள் தளத்தின் அடிப்படை வடிவமைப்பில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைக் கட்டமைத்துள்ளோம். அதனால்தான் Snapchat உள்ளடக்கத்தின் ஊட்டத்திற்குப் பதிலாக நேரடியாக கேமராவைத் திறக்கிறது. மேலும் நிஜ வாழ்க்கையில் ஏற்கனவே நண்பர்களாக இருப்பவரை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது. Snapchat பயனர்கள் தங்களுக்கான பின்தொடர்தலை அதிகரிக்கவோ, பார்வைகளைப் பெறவோ அல்லது விருப்பங்களைப் பெறும் அழுத்தமோ இல்லாமல் தங்களை வெளிப்படுத்தவும் தங்கள் நண்பர்களுடன் மகிழ்வாக இருக்கவேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் விரும்பினோம். நாம் இயல்பாக நேரடியாக அல்லது தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதை Snapchat பிரதிபலிக்கிறது ஏனெனில் Snapchat-இல் டிஜிட்டல் தகவல்தொடர்பு இயல்புநிலையில் அழிக்கப்படுகிறது. Snapchat முழுவதும், மதிப்பீடு செய்யப்படாத உள்ளடக்கம் அதிக அளவு பார்வையாளர்களை அடையும் திறனை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த, அதிகமாக பகிரப்பட்ட உள்ளடக்கத்தை உயர்ந்த தரத்தில் வைத்திருப்பதன் மூலம் இதைச் செய்கிறோம். Snapchat பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்தாலும், படைப்பாற்றலை செயல்படுத்தும் மற்றும் எங்கள் சமூகத்தின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்க நாங்கள் எப்போதும் முயற்சித்து வருகிறோம்.
எங்கள் அடிப்படைக் கட்டமைப்புக்குக் கூடுதலாக, Snapchat-இல் தவறான தகவல் பரவுவதைத் தடுக்க எங்களுக்கு உதவும் பல முக்கியக் கொள்கைகள் உள்ளன.
  • எங்கள் கொள்கைகள் தவறான தகவல் பரவுவதை நீண்ட காலமாக தடை செய்துள்ளன. அனைத்து Snapchat பயனர்களுக்கு சமமாகப் பொருந்தும் எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் மற்றும் எங்கள் Discover கூட்டாளர்களுக்கு பொருந்தும் எங்கள் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் இரண்டும் பின்வருவன உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் தவறானத் தகவல் பரவுவதைத் தடுக்கின்றன — உதாரணமாக சோக நிகழ்வுகள் இருப்பதை மறுத்து பேசுவது, சதிக் கோட்பாடுகள், மருத்துவ அல்லது குடிமை செயல்முறைகளின் ஒருமைப்பாட்டைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆதாரமற்ற கூற்றுகள். நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் (தீங்கு விளைவிக்கும் deepfakes அல்லது shallow-fakes உட்பட) பற்றி தவறாக வழிநடத்தும் வகையில் கையாளப்படும் ஊடகங்களைப் பகிர்வது இதில் அடங்கும்.
  • தவறான தகவல் உள்ளிட்ட உள்ளடக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எங்கள் அணுகுமுறை நேரடியானது: நாங்கள் அதை அகற்றுகிறோம். எங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை நாங்கள் கண்டறியும் போது, அதை நீக்குவது எங்களின் கொள்கையாகும், இவ்வாறு செய்வது அது மேலும் பரவலாக பகிரப்படும் ஆபத்தை உடனடியாகக் குறைக்கிறது.
  • எங்கள் செயலியில் சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை 'வைரலாகும்' வாய்ப்பை நாங்கள் அனுமதிப்பதில்லை. மக்கள் அல்லது வெளியீட்டாளர்கள் தவறான தகவலை ஒளிபரப்பக்கூடிய திறந்த செய்தி ஊட்டத்தை Snapchat வழங்குவதில்லை. எங்கள் Discover தளமானது சரிபார்க்கப்பட்ட ஊடக வெளியீட்டாளர்களிடமிருந்து உள்ளடக்கத்தைக் உள்ளடக்கியது, மேலும் ஸ்பாட்லைட்டில் உள்ளடக்கம் அதிக பார்வையாளர்களைச் சென்றடைவதற்கு முன், முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்படுகிறது. நாங்கள் குழு அரட்டைகளை வழங்குகிறோம், அவை அளவில் மட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் அவை நிரல் நெறிமுறைகளால் பரிந்துரைக்கப்படுவதில்லை, மேலும் நீங்கள் அந்தக் குழுவின் உறுப்பினராக இல்லாவிட்டால் அந்த குழுவை உங்களால் கண்டறிய இயலாது.
  • அனைத்து அரசியல் மற்றும் அவற்றை ஆதரிக்கும் விளம்பரங்களின் தகவல்களை சரிபார்க்க நாங்கள் மனித ஆய்வு செயல்முறைகளைப் பயன்படுத்துகிறோம். தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் மற்றும் பொது பிரச்சனை தீர்வுக்கு ஆதரிக்கும் விளம்பரங்கள் உட்பட அனைத்து அரசியல் விளம்பரங்களும் ஆதரவளிக்கும் அமைப்பைக் காட்டும் "பணம் செலுத்தப்பட்டது" என்ற செய்தியை கட்டாயம் உள்ளடக்கவேண்டும். மேலும் எங்களின் அரசியல் விளம்பர நூலகம் இல் எங்கள் மதிப்பாய்வை கடக்கும் அனைத்து விளம்பரங்கள் பற்றிய தகவலுக்கான அணுகலை வழங்குகிறோம். அமெரிக்கத் தேர்தல்கள் தொடர்பாக், அரசியல் விளம்பர அறிக்கைகளின் உண்மைத் தன்மையை சரிபார்க்க நாங்கள் பாரபட்சமற்ற Poynter Institute உடன் கூட்டு சேர்ந்துள்ளோம். கூடுதலாக, தேர்தல்களில் வெளிநாட்டு தலையீட்டின் அபாயங்களை குறைப்பதற்கு நாங்கள் விளம்பர இயங்கும் நாட்டின் வெளியிலிருந்து அரசியல் விளம்பரங்களை வாங்குவதை தடை செய்கிறோம்.
  • தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் முயற்சிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 2021-ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியை உள்ளடக்கிய எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கை உலகளவில் தவறானத் தகவல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான எங்கள் முயற்சிகள் பற்றிய தரவு உள்ளிட்ட பல புதிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், தவறான தகவல் குறித்த எங்கள் கொள்கைகளை மீறும் 14,613 உள்ளடக்கங்கள் மற்றும் கணக்குகளுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் — மேலும் எங்கள் எதிர்கால அறிக்கைகளில் இந்த மீறல்களின் விரிவான கூறுகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதை மேலும் கட்டமைக்க, இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, தகவல் பகிர்வு மற்றும் எங்கள் கொள்கைகளின் செயல்திறனைக் கண்காணிப்பதற்கும் மற்றும் பிற தீங்குகளைத் தணிக்கும் முயற்சிகளுக்கும் தேவைக்கேற்ப எங்கள் அணுகுமுறையை அளவீடு செய்வதை உறுதிசெய்யும் வகையில் பிரத்யேக உள்ளக செயல்முறைகளை நாங்கள் நிறுவியுள்ளோம். வளர்ந்து வரும் போக்குகளின் பரந்த சூழலில் எங்கள் பாதுகாப்புகள் பொறுப்புடன் தொகுக்கப்படுவதை உறுதிசெய்ய, தேர்தல் ஒருமைப்பாடு, ஜனநாயகம் மற்றும் தகவல் ஒருமைப்பாடு சமூகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.
அதிக தகவல் ஒருமைப்பாட்டைத் தூண்டுவதற்கு நிபுணர்களுடன் கூட்டு சேர்வதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் Discover உள்ளடக்க தளத்தின் மூலம் நாங்கள் எங்கள் சமூகத்திற்கு The Wall Street Journal, The Washington Post, VICE, and NBC News. போன்ற வெளியீட்டாளர்கள் இடமிருந்து நம்பகமான மற்றும் துல்லியமான செய்தி கவரேஜ் வழங்குவதில் கவனம் செலுத்துகிறோம்.
உள்ளூர் அலுவலக பதவிக்குப் போட்டியிட அல்லது வாக்கு பதிவு செய்யும் வாய்ப்புகள் பற்றி போன்ற குடிமக்கள் தகவலுடன் பயனர்களை இணைக்க வளங்களின் விரிவான வரிசையையும் செயலியில் நாங்கள் உருவாக்கியுள்ளோம்
பொறுப்பான தகவல் சூழலை மேம்படுத்துவதில் எங்களின் பங்களிப்பை வழங்குவது எங்கள் நிறுவனத்தின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது, மேலும் Snapchat பயனர்கள் இருக்கும் இடத்தை அடைவதற்கான புதுமையான அணுகுமுறைகளை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம், அதே நேரத்தில் Snapchat வைரலாக பரவக்கூடிய தவறான தகவல்களின் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கான எங்கள் முயற்சிகளை வலுப்படுத்துவோம்.
செய்திகளுக்குத் திரும்புக