Snap Values

மூன்றாம் ஆண்டு தேசிய ஃபென்டானில் விழிப்புணர்வு தினத்தைக் கவுரவித்தல்

மே 7, 2024

Snap-இல் போலி மாத்திரைகள் உட்பட சட்டவிரோத மருந்துகளை விநியோகிக்க முயலும் குற்றவாளிகள் எங்கள் சேவையை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இன்று, நாம் பொது சுகாதார நிபுணர்கள், சட்ட அமலாக்கம் மற்றும் பெற்றோர் மற்றும் குடும்ப குழுக்கள் ஆகிய ஹீரோக்களுடன் இணைந்து மூன்றாவது வருடாந்திர தேசிய ஃபென்டானில் விழிப்புணர்வு தினத்தை நினைவுகூருவதற்கு இணைந்து பணியாற்றுவதில் பெருமைப்படுகிறோம்.

இந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்தப் பேரழிவு மற்றும் அவசர பொது நெருக்கடியை எதிர்த்துப் போராடும் எங்கள் தற்போதைய பணிகள் குறித்து நமது சமூகத்திற்கு ஒரு புதுப்பிப்பை வழங்க விரும்புகிறோம்.

தொழில்நுட்பம் மற்றும் தள பாதுகாப்பு

Snapchat என்பது நேரடியாக உரையாடுவது அல்லது தொலைபேசி மூலம் பேசுவது போன்று யதார்த்த வாழ்க்கையில் தங்களுக்கு மிகவும் முக்கியமான நபர்களிடம் தனிப்பட்ட முறையில் தொடர்புகொள்வதன் மூலம் மக்களை நெருக்கமாகக் கொண்டுவருவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு செயலியாகும். செய்திகள் இயல்பாக நீக்கப்பட்டாலும், நாங்கள் சட்டவிரோத அல்லது துஷ்பிரயோக உள்ளடக்கத்தை முன்கூட்டியே கண்டறிந்துவிட்டதால் அல்லது அது குறித்து எங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டதால் அதன் மீது நடவடிக்கை எடுத்தால், அந்த உள்ளடக்கத்தை நாங்கள் கூடுதல் காலத்திற்குத் தக்க வைப்போம். எங்கள் தளத்தை இயக்க முயற்சி செய்யும் போதை மருந்து விற்பனையாளர்களை அகற்ற நாங்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம், இது மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முயல்பவர்கள் உட்பட.

  • முன்கூட்டியே கண்டறியும் கருவிகள்: போதை மருந்து விற்பனையாளர்களின் கணக்குகளை முன்கூட்டியே கண்டறிந்து முடக்க எங்களுக்கு உதவும் தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம் மற்றும் தொடர்ந்து மேம்படுத்துகிறோம். எங்களது மிகவும் மேம்பட்ட மாடல்கள் தற்போது கண்டறியப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் செயல்பாடுகளில் சுமார் 94 சதவீதத்தை முன்கூட்டியே அடையாளம் காண உதவுகின்றன மேலும் இது எங்களுக்கு புகாரளிக்கப்படும் முன்னரே இந்த உள்ளடக்கத்தை அகற்ற அனுமதிக்கின்றன. 

  • புகார்கள் மீதான விரைவான நடவடிக்கை: எங்களது நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழு இயன்றளவு விரைவாக போதை மருந்து தொடர்பான உள்ளடக்கத்தின் மீது எங்களுக்கு வரும் எந்தப் புகார்களுக்கும் பதிலளிக்க இருபத்தி நான்கு மணி நேரமும் வேலை செய்கிறது. எங்களது குழு போதை மருந்து தொடர்பான புகார்களுக்கு பொதுவாக ஒரு மணி நேரத்திற்குள் பதிலளிக்கிறது என எங்களது மிகச் சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கைக் காட்டுகிறது. 

  • தேடல்களைத் தடுப்பது: போதை மருந்து தொடர்பான சொற்களுக்கான பரந்த வரம்பிலான தேடல் முடிவுகளை நாங்கள் தடைசெய்கிறோம். அதற்குப் பதிலாக ஃபென்டானில் குறித்த ஆபத்துகள் குறித்த நிபுணர்களின் ஆதாரங்களுக்கு Snapchat பயனர்களை வழிநடத்துகிறோம். 

  • பிற தளங்களுடன் ஒருங்கிணைதல்: போதை மருந்து விற்பனையாளர்கள் தொடர்புகொள்ள பல வகையான சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரிந்ததால், நாங்கள் போதை மருந்து தொடர்பான உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டின் முறைகள் மற்றும் சிக்னல்களைப் பகிர்ந்துகொள்ள நிபுணர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிகிறோம். இது நாங்கள் போதை மருந்து தொடர்பான உள்ளடக்கம் மற்றும் விற்பனையாளர் கணக்குகளை முன்கூட்டியே கண்டறிந்து அகற்றும் முயற்சிகளை மேம்படுத்த அனுமதிக்கிறது. 

சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைப்பு 

எங்கள் சட்ட அமலாக்க செயல்பாடுகள் குழு குற்றவாளிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற உதவ சட்ட அமலாக்க விசாரணைகளுக்கு விரைவாக பதிலளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் சட்ட அமலாக்கத்துடன் வலுவான உறவுகளை பேணிவருவதன் மூலம் அவர்கள் எங்கள் தளத்தில் சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து விரைவாக மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதை உறுதி செய்கிறோம். எங்கள் முக்கிய முன்னுரிமைகளில் அடங்குபவை:

  • எங்கள் குழுவை விரிவுபடுத்துதல்: சட்ட அமலாக்க செயல்பாடுகள் குழு கடந்த 5 ஆண்டுகளில் 200% அதிகமாகவும், 2020 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 80% வளர்ச்சியடைந்துள்ளது. நாங்கள் பொதுவாக சரியான சட்டக் கோரிக்கைகளுக்கு இரண்டு முதல் மூன்று வாரங்களிலும், அவசரகால வெளிப்படுத்தல் கோரிக்கைகளுக்கு 30 நிமிடங்களுக்குள்ளாகவும் பதிலளிக்கிறோம். 

  • செயலூக்கமுள்ள மேல்முறையீடுகள்: உயிருக்கு உடனடி அச்சுறுத்தல் உள்ளது என்று நாங்கள் நம்பும் சூழ்நிலைகளில், சட்ட அமலாக்கத்திற்கு ஒரு வழக்கை முன்கூட்டியே நாங்கள் மேல்முறையிடுகிறோம். போதைப்பொருள் தொடர்பான எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறிய கணக்குகளை நாங்கள் முடக்கிய பிறகு, சட்ட அமலாக்கம் அவற்றைப் பின்தொடர விரும்பினால் நாங்கள் சட்டத்தை மீறும் உள்ளடக்கத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைப்போம். 

  • சட்டங்களுக்கு ஆதரவளித்தல்: கூடுதலாக, நாங்கள் செனட் உறுப்பினர்களுடன் இரு கட்சி சட்டமான, கூப்பர் டேவிஸ் சட்டம் குறித்து பணியாற்றினோம், இது ஃபென்டானில்க்கு எதிரான போராட்டத்தில் சமூக வலைப்பின்னல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்கத்துறைகளுக்கு இடையில் அதிக ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது.

கல்வி மூலம் ஃபென்டானில் நெருக்கடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் 

Snapchat பயனர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஃபென்டானில் ஆபத்துகளைப் பற்றி கல்வி பயில்விக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில், நாங்கள் போலி மாத்திரைகள் ஆபத்துகள் பற்றிய எச்சரிக்கை விடுக்கும் செயலியில் உள்ள கல்வி வீடியோக்கள் மற்றும் செய்தி உள்ளடக்கம் ஆகியவற்றை விளம்பரப்படுத்தியுள்ளோம் மற்றும் Snapchat பயனர்களை நம்பகமான நிபுணர்களின் ஆதாரங்களுக்கு திசைதிருப்பியுள்ளோம். இது ஒரு தொடர் முயற்சியாகும், இதில் உள்ளடக்கப்படுபவை:

  • Snapchat பயனர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலியில் உள்ள உள்ளடக்கம்: நாங்கள் முன்னணி ஃபென்டானில் விழிப்புணர்வு அமைப்பான Song for Charlie உடன் PSA களை இயக்குவதற்கு கூட்டு சேர்ந்துள்ளோம் மற்றும் எங்கள் அசல் செய்தி நிகழ்ச்சியான குட்லக் அமெரிக்காவுடன் சிறப்புத் தொடர்களை செய்திருக்கிறோம். ஃபென்டானில் விழிப்புணர்வு தினத்தை கவுரவிப்பதில் வெளியிடப்பட்ட Song for Charlie-இன் நிறுவனரான எட் டெர்னான் உடன் ஒரு புதிய நேர்காணலை நீங்கள் காணலாம்.

  • அர்ப்பணிக்கப்பட்ட செயலியில் உள்ள கல்வி போர்ட்ல்: நாங்கள் செயலியில் ஹெட்ஸ் அப் என்ற கருவியையும் அறிமுகப்படுத்தியுள்ளோம். Snapchat பயனர்கள் போதை மருந்து தொடர்பான உள்ளடக்கம் அல்லது ஃபென்டானில் நெருக்கடி தொடர்பான பல சொற்களைத் தேட முயன்றால் இந்தக் கருவி நிபுணர்களிடமிருந்து கல்வி உள்ளடக்கத்தை அவர்களுக்குக் காட்டும். எங்கள் நிபுணத்துவ கூட்டாளர்களில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), போதை மருந்து துஷ்பிரயோகம் மற்றும் மன நல சேவைகள் நிர்வாகம் (SAMHSA), அமெரிக்கா சமூக போதைப்பொருள் எதிர்ப்பு இணைப்புகள் (CADCA), Truth Initiative, Shatterproof மற்றும் தி SAFE புராஜெக்ட் ஆகியவை அடங்கும்.

  • விளம்பர கவுன்சிலுடன் பணிபுரிதல்: பல ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் ஃபென்டானில் ஆபத்துகளைப் பற்றி முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தை உருவாக்க விளம்பர கவுன்சிலுடன் பணிபுரியத் தொடங்கினோம். இந்தப் பிரச்சாரம் இப்போது பிற முன்னணி தொழில்நுட்ப தளங்களைக் கொண்டுள்ளது மற்றும் பெற்றோர்கள் மற்றும் டீனேஜர்கள் இருக்கும் இடங்களைச் சென்றடைவதில் கவனம் செலுத்துகிறது. 

Snapchat சமூகத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதே எங்களது முதல் முன்னுரிமை ஆகும். எங்களுக்கு எப்போதும் செய்வதற்கு அதிக வேலை இருக்கும் மற்றும் பெற்றோர்கள், அரசாங்கம், பிற தளங்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து எங்கள் தளத்திலிருந்து போதை மருந்து விற்பனையை ஒழிப்பதற்கும் ஃபென்டானில் நெருக்கடியின் ஆபத்தான பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொடர்ந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.

செய்திக்குத் திரும்புக