வெளிப்படையாகப் பேசவும், எங்களின்-மற்றும் அவர்களின்-எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்கு வகிக்கவும் Snapchat பயனர்களுக்கு அதிகாரம் அளித்தல்

அக்டோபர் 29, 2021

இன்று, நைட் அரக்கட்டளையின் மெய்நிகர் கருத்தரங்கு Lessons from the First Internet Ages-இன் ஒரு பகுதியாக Snap-இன் சி‌இ‌ஓ இவான் ஸ்பீகல் நாங்கள் கட்டமைக்கும் ஒரு தொழில்நுட்பம் மீதான ஒரு கட்டுரையை வெளியிட்டார். அந்தத் தொழில்நுட்பமானது இளைஞர்கள் வாக்களிப்பதையும், அவர்கள் அக்கறை கொண்டுள்ள பிரச்சனைகளைப் பற்றி அவர்களே அறிந்துகொள்ளவும், எங்கள் Run for Office Mini மூலம் அவர்களின் சமூகங்களில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளூர் தேர்தலில் போட்டியிடுவதையும் எளிதாக்கும்.
முதலில் நைட் அறக்கட்டளை வெளியிட இவானின் முழு கட்டுரையை நீங்கள் இங்கேபடிக்கலாம்.
***
என் இணை நிறுவனர் பாபி மர்பி மற்றும் நான் பத்தாண்டுகளுக்கு முன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்தோம். அப்போது நான் தயாரிப்பு வடிவமைப்பைப் படிக்கும் ஃபிரெஷராகவும் பாபி கணிதம் மற்றும் கணினி அறிவியல் படிப்பவராகவும் இருந்தோம். நாங்கள் இணைந்து செய்த முதல் திட்டம் Future Freshman ஆகும், அது உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் விதத்தை மாற்றும் என நம்பினோம். ஆனால் எங்கள் எண்ணம் தவறானது, அந்தத் திட்டம் முழுத் தோல்வியுற்றது, ஆனால் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்ற விரும்புகிறோம் என்ற முக்கியமான விஷயத்தை அதிலிருந்து காற்றோம்.
சில காலத்திற்குப் பிறகு இறுதியில் Snapchat ஆனா ஒரு திட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினோம். அந்த நேரத்தில், பெரும்பாலான சமூக ஊடக தளங்கள் நான்கு நிலைநாட்டப் பட்டிருந்தன, ஆனால் அவை எங்கள் நண்பர்கள் தங்களை உண்மையாக வெளிப்படுத்த இடம் வழங்கவில்லை. மக்கள் தங்கள் நண்பர்களுடன் முழு அளவிலான மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் ஒன்றைக் கட்டமைக்க விரும்பினோம்—பார்க்க மட்டும் அழகாகத் தோன்றும் ஒன்றை அல்ல. எனவே, அந்த நேரத்தில் இருந்த மற்ற சமூக ஊடகத் தளங்களைப் விட Snapchat-ஐ வித்தியாசமாக வடிவமைத்தோம்: எங்கள் செயலி செய்தி ஊட்ட உள்ளடக்கத்தை மிகவும் பரவலாக ஒளிபரப்ப மக்களை அழைப்பதற்கு பதிலாக மக்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் பேச உதவும் கேமராவைத் திறக்கும்.
எங்கள் செயலியை வெகு சிலரே புரிந்துகொண்ட எங்கள் ஆரம்ப நாட்களைத் திரும்பிப் பார்க்கும்போது, Snapchat சமூகம் இறுதியில் எவ்வளவு பெரியதாக மாறும் என்பதை நாங்கள் கற்பனை செய்திருக்க முடியாது. இன்று, உலகம் முழுவதும் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு மாதமும் Snapchat ஐப் பயன்படுத்துகின்றனர். எங்கள் வணிகம் உருமாறியிருந்த போதிலும், எங்கள் சமூகத்தின் பிரச்சனையைத் தீர்க்கும் எங்கள் ஆசை மாறவேயில்லை. எங்கள் குழுவின் ஆர்வம் மற்றும் படைப்பாற்றலுடன் சேர்ந்து இந்தத் தீர்மானம் எங்கள் மிக வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் சிலவற்றை உருவாக்கியுள்ளன—தற்காலிக உள்ளடக்கம், கதைகள், இணைப்பு நிஜமாக்கம் ஆகிய முக்கிய அம்சங்கள் அடங்கும்.
அமெரிக்க ஜனநாயகத்தில் பங்கேற்கும் அமெரிக்காவில் உள்ள எங்கள் சமூக உறுப்பினர்களுக்காக குறிப்பாக- சுய வெளிப்பாட்டின் மிகவும் சக்திவாய்ந்த வடிவங்களில் ஒன்று வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது என நாங்கள் நம்புகிறோம். எங்களின் சிக்கல் தீர்க்கும் மனோபாவத்துடன் இணைந்து இந்தப் பேரார்வத்தின் காரணமாகத் தான் இளைஞர்கள் வாக்களிக்க, அவர்கள் கவலைப்படுகின்ற சிக்கல்களைப் பற்றி அவர்களே தெரிந்துகொள்ள, போது அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்க மற்றும் பதவிகளுக்குப் போட்டியிடுவதை சுலபமாள்ள தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம்.
Snapchat பயனர்கள் தங்கள் சமூகங்களில் ஒரு மாற்றம் ஏற்படுத்த தொடர்ந்து ஈடுபடுவதில் எப்போதும் ஆர்வமாக உள்ளனர், ஆனால் நம் ஜனநாயக நடைமுறைகள் இளைய வாக்காளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உருமாறவில்லை. இளைஞர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமான விளைவுகளில் ஈடுபடும் விதத்தில் —தங்கள் தொலைபேசிகள் மூலம் மற்றும் அவர்களின் நெருங்கிய நண்பர்களுடன் — குடிமை ஈடுபாடு இல்லை கல்லூரி வளாகங்களில் வாக்களிப்பது பற்றி தெரிந்து கொள்ளும் அல்லது கல்லூரிக்குச் செல்லாததால் பல வளாகங்கள் வழங்கும் பொது உள்கட்டமைப்பிலிருந்து பயன்பெறாத முதல் முறை வாக்காளர்களுக்கு அவர்கள் எங்குள்ளனரோ அங்கு அவர்களை சென்றடைவது முக்கியமானது மற்றும் எப்போதையும் விட மிக சவாளநாதும் கூட. 2020 ஆம் ஆண்டுத் தேர்தலில் பல நேரடி வாக்காளர்களின் முயற்சிகள் கோவிட் -19 நோய்ப்பரவல் காரணமாக தடையுற்ற போது, மொபைல் அனுபவங்கள் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துவதாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டோம்.
அமெரிக்காவில் 13-24 வயதடைய 90 சதவிகித மக்களை Snapchat அடைகிறது, இதன் மூலம் நமது ஜனநாயகத்தில் பங்கேற்பதை எளிதாக்கும் வகையில், இந்த வயதினருக்கு குடிமைப் பாதையை வழங்குவதற்கான அர்த்தமுள்ள வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது. 2016 ஆம் ஆண்டு முதல், தொழில்நுட்பத் தடைகளை அகற்றவும், வாக்காளர் பதிவு, வாக்காளர் கல்வி மற்றும் வாக்காளர் பங்களிப்பு உள்ளிட்ட அனைத்து படிநிலையிலும் Snapchat பயனர்களுக்கு உதவவும் பல மொபைல் கருவிகளை உருவாக்கியுள்ளோம். சமீபத்திய தேர்தல் சுழற்சியில், Snapchat பயனர்கள் வாக்களிக்க பதிவுசெய்ய, அவர்களின் மாதிரி வாக்குச்சீட்டைப் பார்க்க மற்றும் அவர்கள் வாக்களிக்கும் இடத்தைப் பார்க்க மற்றும் அவர்கள் நண்பர்கள் இவற்றைச் செய்வதற்கு உதவ TurboVote மற்றும் BallotReady உடன் கூட்டு சேர்ந்துள்ளோம். NAACP, ACLU, நாம் அனைவரும் வாக்களிக்கும்போது, சட்டத்தின் கீழ் சிவில் உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் குழு, லத்தீன் சமூக அறக்கட்டளை மற்றும் APIAVote ஆகியவற்றின் ஆதாரங்களுடன் Snapchat பயனர்களை இணைக்கும் வாக்காளர் வழிகாட்டியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
இந்தப் பணி ஊக்கப்படுத்துவதாக உள்ளது: 2020 ஆம் ஆண்டில் மட்டும் எங்கள் குழு 1.2 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்கள் வாக்களிக்க பதிவு செய்ய உதவியது. டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் குடிமைக் கற்றல் மற்றும் ஈடுபாடு குறித்த தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (CIRCLE) தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் பதிவுசெய்ய நாங்கள் உதவிய Snapchat பயனர்களின் பாதி பேர் முதல்முறை வாக்காளர்கள் மற்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள்.
ஆனால் அடுத்த தலைமுறைத் தலைவர்களை ஊக்குவிப்பது எப்போது செய்யவேண்டிய பணி, முக்கியத் தேர்தலின் போது மட்டுமல்ல என்பதை நாங்கள் அறிவோம். எனவே, Snapchat பயனர்கள் தங்கள் பதினெட்டாவது பிறந்தநாளில் வாக்களிக்கப் பதிவுசெய்யத் தூண்டும் அம்சத்தை நாங்கள் உருவாக்கினோம். எங்கள் வாக்காளர் ஈடுபாடு கருவிகள் வருடம் முழுவதும் கிடைக்கின்றன, மேலும் அவை போது ஈடுபாடுகளின் மூலம் வாழ்நாள் முழுவதுமான சுய வெளிப்பட்டிற்கான அடித்தளத்தை அமைக்க அவை உதவும் என்பது எங்களின் நம்பிக்கை.
எதிர்காலத்தில், Snapchat பயனர்களிடமிருந்து பெறும் கருத்து அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து புதுமைகளை உருவாக்குவோம். 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு Snapchat பயனர்கள் அக்காரரி கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கவலைக்கொள்ளும் வேட்பாளர்கள் இல்லை என்பது குறித்து கவலைப்பட்டதாகக் கேள்விப்ப்ட்டோம். இது அர்த்தமுள்ளது. பிரதிநிதித்துவம் முக்கியமானது, ஆனால பல இளைஞர்களளுக்கு தேர்தலைல் நிற்பதென்பது சாத்தியமற்றது, குழப்பமான மற்றும் நிதி ரீதியில் சாத்தியமற்றது போல் தெரிகிறது. மாநில சட்டமன்றங்களின் தேசிய மாநாட்டின் (NCSL) கூற்றுப்படி, பேபி பூமர்(20வது நூற்றாண்டின் மத்தியில் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவின் சட்டமன்றங்களில் பொருத்தமற்ற செல்வாக்கைக் கொண்டுள்ளனர், அமெரிக்க மக்கள்தொகையில் அவர்களின் ஒட்டுமொத்த பங்கை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இதன் விளைவாக, நம்மை ஆள்பவர்களுக்கும் அடுத்த தலைமுறை அமெரிக்கர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும், பைப்லைன் முன்முயற்சியின் படி, பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நம்பத்தகுந்த சக ஊழியரால் நியமிக்கப்படும் வரை அல்லது ஊக்கம் பெறும் வரை பதவிக்குப் போட்டியிடுவது குறித்து யோசிக்கவில்லை.
Snapchat பயனர்கள் தங்கள் உள்ளூர் சமூகங்களில் பதவிக்குப் போட்டியிடுவதன் மூலம் அவர்கள் அதிகம் கவலைப்படுகின்ற சிக்கல்களில் மாற்றம் ஏற்படுக்துவதை சுலபமாக்க எங்கள் பங்கை செய்ய விரும்புகிறோம். சமீபத்தில், இளைஞர்கள் தங்கள் சமூகத்தில் எதிர்வரும் தேர்தல் குறித்து கற்க உதவ மற்றும் அவர்கள் தலைவர்களாகப் பார்க்க விரும்பும் நண்பர்களை நியமிக்க Snapchat-இல் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தினோம், Snapchat பயனர்கள் பல்வேறு கொள்கை சிக்கல்களால் வரிசைப்படுத்தப்பட்ட உள்ளூர் வாய்ப்புகளை ஆராயலாம், ஒவ்வொரு பதவியும் எதை உள்ளடக்கியது என்பதைப் பார்க்கலாம் மற்றும் பொது அலுவலகத்திற்கு வெற்றிகரமாக போட்டியிடுவதற்கு முன் வேட்பாளர் நிறைவேற்ற வேண்டிய அனைத்து கூறுகளின் "சரிபார்ப்புப் பட்டியலை" உள்ளடக்கிய ஒரு மையப்படுத்தப்பட்ட பிரச்சார டாஷ்போர்டை உருவாக்கலாம். நாங்கள் ஆரம்பத்தில் பத்து வேட்பாளர் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் இருதரப்புக் குழுவுடன் கூட்டு சேர்ந்துள்ளோம், அவை சாத்தியமான வேட்பாளர்களுடன் தலைமைத்துவப் பட்டறைகள் மற்றும் பிரச்சாரப் பயிற்சி உட்பட அவர்கள் தொடங்குவதற்குத் தேவையான ஆதாரங்களை வழங்க பணிபுரியும். நண்பர்களிடமிருந்து ஊக்கம் மற்றும் இந்த பங்குதாரர் நிறுவனங்களில் இருந்து பயிற்சி மூலம், Snapchat பயனர்கள் தலைவர்களாகவும் அவர்கள் குரல்களைக் கேட்கச் செய்யவும் இது ஒரு வேடிக்கையான தாக்கம் விளைவிக்கும் வழியாகும்.
எங்கள் செயலியில் ஒவ்வொரு நாளும் Snapchat தலைமுறை, உலகத்தை சிறந்த இடமாக மாற்ற உதவும் நம்பமுடியாத ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் புதுமையை வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம். இளைஞர்கள் வாக்களிக்க வருவதை வரலாற்று ரீதியாக தடுத்துள்ள தடைகளை அகற்றுவதற்கு எங்களின் பங்களிப்பை நாங்கள் தொடர்ந்து செய்வோம், மேலும் வருங்கால சந்ததியினர் பேசுவதற்கும் எங்களின் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்களிப்பதற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்.
செய்திகளுக்குத் திரும்புக