Fentanyl-இன் ஆபத்துகள் குறித்து Snapchatter-களுக்கு கற்பித்தல்

ஜூலை 19, 2021

கடந்த வாரம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) புதிய தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் போதைமருந்து ஓவர்டோஸ் காரணமான இறப்புகள் 2020 ஆம் ஆண்டில் 30% அதிகமாக அதிகரித்து புதிய அளவை எட்டியுள்ளதாகவும் இந்த திடீர் அதிகரிப்பு fentanyl என்ற கொடிய பொருளின் பரவலால் இயக்கப்பட்டது மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்களின் அழுத்தங்களால் கூட்டப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
fentanyl ஆபத்துகள் குறித்து இளைஞர்களுக்கு கற்பிப்பதன் மீது கவனம் செலுத்தும் ஒரு தேசிய அமைப்பான Song for Charlie -இன் படி இந்த மரணங்களில் பல முறையான பரிந்துரைக்கப்பட்ட மருந்தின் பெயரில் ஒளிந்திருக்கும் ஒரு மாத்திரையின் காரணமாக ஏற்படுகிறது, ஆனால் அது உண்மையில் fentanyl கொண்ட போலி மாத்திரையாகும். மேலும் Xanax மற்றும் Percocet போன்ற பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை வைத்து அடிக்கடி சோதனை செய்து பார்க்கும் இளைஞர்கள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள்.
fentanyl பரவலை நன்கு புரிந்துகொள்ளவும் நாங்களும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளை அடையாளம் காணவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Song for Charlie உடன் பணியாற்றத் தொடங்கினோம், இன்று அவர்கள் இளைஞர்கள் வியாபித்துள்ள தொழில்நுட்பத் தளங்களின் மூலம் அவர்களை அடைய புதிய நாடு தழுவிய பொது விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடங்குகிறார்கள். மேலும் fentanyl உள்ள இந்த போலி பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகள் குறித்த மறைந்துள்ள ஆபத்துகள் குறித்து அவர்களுக்கு கற்பிக்கிறார்கள். தங்களையும் தங்கள் அன்புக்குரியவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து எங்கள் Snapchat சமூகத்திற்குத் தெரிவிக்க Song for Charlie-உடன் கூட்டு சேர்ந்ததற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, எங்கள் நிறுவன செய்தி நிகழ்ச்சியான குட் லக் அமெரிக்கா ஒரு சிறப்பு அத்தியாயத்தை fentanyl பரவலுக்காக அர்ப்பணிக்கிறது. அதில் போலி பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை எடுத்துக் கொண்ட காரணத்தால் தனது 22 வயது மகன் சார்லியை துயரமான முறையில் இழந்த Song for Charlie -இன் நிறுவனர் எட் டெர்னான் உடனான ஒரு நேர்காணல் இடம்பெற்றுள்ளது. நீங்கள் கீழே அல்லது எங்கள் Discover உள்ளடக்க தளத்தில், முழு அத்தியாயத்தையும் பார்க்கலாம்.
கூடுதலாக, Snapchat பயனர்கள் இப்போது எங்கள் Discover தளத்தில் Song for Charlie உருவாக்கியுள்ள PSA களை இப்போது பார்க்கலாம், மேலும் fentanyl ஆபத்துகள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய புதிய இணைப்பு நிஜமாக்கம் (AR) லென்ஸஸ் பயன்படுத்தலாம். லென்ஸஸ் "மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துககளை வேண்டாம் என்ற உறுதிமொழியை எடுக்க மக்களை ஊக்குவிக்கிறது மற்றும் அவர்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு கற்பிக்கவும் தெரிவிக்கவும் அதிகத் தகவலுடன் இணைக்கிறது. இந்த ஆரம்ப அறிமுகம் Song Charlie மற்றும் Snap இடையே தொடர்ச்சியான கூட்டு முயற்சியில், முதலாவதாகும், இதில் கூடுதல் செயலியில் உள்ள கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு முயற்சிகள் அடங்கும்.
விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் பணியாற்றும்போது, Snapchat இல் போதைப்பொருள் தொடர்பான செயல்பாட்டை சிறப்பாகத் தடுக்கவும், கண்டறியவும் மற்றும் எதிர்த்துப் போராடவும் எங்கள் முயற்சிகளை வலுப்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்கள் வழிகாட்டுதல்கள் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை அல்லது விளம்பரத்தை தடுக்கிறது, மேலும் இந்த வகை உள்ளடக்கத்தை நாங்கள் முன்கூட்டியே கண்டறியும் போது அல்லது எங்களிடம் அது குறித்து புகாரளிக்கப்படும் போது எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு அணிகள் விரைவான நடவடிக்கை எடுக்கின்றன.
வட்டார மொழி உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பான சொற்களை Snapchat-இல் பயனர்பெயர்களாகப் பயன்படுத்த அல்லது தேடக்கூடியதாக இருப்பதை நாங்கள் தடை செய்கிறோம், மேலும் மூன்றாம் தரப்பு நிபுணர்களுடன் நெருக்கமாகப் பணிபுரிந்து சமீபத்திய மொழியுடன் இந்தத் தடைப் பட்டியல்களைத் தவறாமல் தணிக்கை செய்கிறோம். படங்கள், வார்த்தைகள், எமோஜிகள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான கணக்குகளின் பிற சாத்தியமான குறிகாட்டிகள், போதைப்பொருள் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து நிறுத்துவதற்கான பிற திறன்களை முன்கூட்டியே அடையாளம் காண எங்கள் இயந்திர கற்றல் கருவிகளை நாங்கள் தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம்.
எங்கள் சமூகம் தங்களையும் தங்கள் நண்பர்களையும் பாதுகாக்க உதவ எங்கள் பங்கினை தொடர்து ஆற்றுவதில் உறுதியாக இருக்கிறோம், அதே சமயம் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான உள்ளடக்கத்தை ஆன்லைனில் எதிர்த்துப் போராடுவதற்காக எங்கள் திறன்களை மேம்படுத்துகிறோம்.
செய்திகளுக்குத் திரும்புக