உலக கருணை தினத்தில் மரியாதை மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தல்

13 நவம்பர் 2023

இன்று உலக கருணை தினம், மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டு இடங்களிலும் அனைத்து தகவல் தொடர்புகளிலும் மரியாதை, பரிவு மற்றும் இரக்கத்துடன் முன்னணி வகிப்பதன் மூலம் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் செயல்களை ஊக்குவிப்பதற்கு இதை விட சிறந்த நேரம் ஏதுவாக இருக்கமுடியும். கருணை Snap நிறுவனத்தின் ஒரு மதிப்பாகும். அது நம் தொழிலுக்கு அத்தியாவசியமானது மற்றும் நமது பாதுகாப்பு வேலையில் முக்கியக் பங்கு வகிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, எதிர்மறையான அல்லது கருணையற்ற நடத்தைகள் காரணமாக ஆன்லைன் பாதுகாப்புச் சிக்கல்கள் பல எழக்கூடும்.

ஒரு எடுத்துக்காட்டானது அந்தரங்கமான படத்தை சம்மதமில்லாமல் உருவாக்கி ஆன்லைனில் பகிர்வது — பல தளங்கள் மற்றும் சேவைகளில் துரதிர்ஷ்டவசமான வளர்ந்து வரும் போக்கு ஆகும். 

Snap இல் சம்மதமில்லாத அந்தரங்கப் படங்களின் பரவலைத் (NCII) StopNCII இன் ஹாஷ் தரவுத்தளத்தின் உதவியுடன் தடுக்க உதவ சமீபத்தில் SWGfL’s StopNCII கூட்டுறவில் இணைந்தது. சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டவிரோத புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை “hash-matching" என்பதன் மூலம் கண்டறிந்து, அகற்றி, புகாரளிப்பதற்கான எங்கள் நீண்டகால மற்றும் தொடர்ச்சியான பணிகளைப் போலவே, StopNCII ஆனது NCII படங்களின் “ஹேஷ்களின்“ பிரத்யேக தரவுத்தளத்தை வழங்குகிறது. இந்த ஹேஷ்களை உட்செலுத்தி, ஸ்கேன் செய்வதன் மூலம், மீறும் உள்ளடக்கத்தின் ஆன்லைன் பரவலை நிறுத்த உதவலாம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மிகவும் அந்தரங்க மற்றும் தனிப்பட்ட தரவுகளின் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஆதரவளிக்கலாம். 

“சம்மதமில்லாத அந்தரங்கப் படங்களை” ஆன்லைனில் பகிர்வதை எதிர்த்துப் போராட StopNCII இல் Snap எங்களுடன் இணைந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது,” என ஐக்கிய ராச்சியத்தில் உள்ள SWGfL NGO இன் CEO டேவிட் ரைட் கூறினார். “டிசம்பர் 2021 இல் நாங்கள் தொடங்கியதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாட்டை மீண்டும் பெறவும் தங்கள் அச்சங்களைத் தணிக்கவும் நாங்கள் அவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளோம். எங்கள் வெற்றி Snap போன்ற தளங்களுடனான கூட்டுறவைச் சார்ந்துள்ளது, ஏனெனில் அதிகப் பங்கேற்பு உலகளவில் பாதிக்கப்பற்றவர்களின் அச்சத்தை நேரடியாகக் குறைக்கிறது.” 

Snap NCII ஐத் தடைசெய்கிறது மற்றும் இதை எங்களது துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்தலுக்கான விதிகளில் தெளிவாக்குகிறது. இந்தத் தடைகள் பாலியல் ரீதியாக வெளிப்படையான, குறிப்புணர்த்தும் அல்லது நிர்வாணப் படங்கள் உள்ளிட்ட “அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கும்” நீடிக்கிறது என்பதை எங்களது சமூக வழிகாட்டுதல்கள் குறிப்பாகத் தெரிவிக்கின்றன. இந்த வகையான உள்ளடக்கம் அல்லது நடத்தை எங்கள் தளத்திற்கு வேண்டாம்; இது உண்மையான வெளிப்பாட்டின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் இடமாக இருக்க வேண்டும் என்ற Snapchat இன் நோக்கத்துடன் ஒத்துப்போகவில்லை. சம்மதமில்லாத அந்தரங்கப் படத்தின் உருவாக்கம், பகிர்வு அல்லது விநியோகம் உட்பட ஒருவர் எங்கள் கொள்கையின் சாத்தியமான மீறலை அனுபவித்தாலோ அல்லது பார்த்தாலோ, அதை உடனடியாக எங்களிடமும் உள்ளூர் அதிகாரிகளிடமும் புகாரளிக்குமாறு ஊக்குவிக்கிறோம்.

புதிய Snap ஆராய்ச்சி 

Snapchat மட்டுமல்லாமல், அனைத்து தளங்கள் மற்றும் சேவைகளில் எங்கள் ஆராச்சியானது 18 இலிருந்து 24 வயதான 54% இளைஞர்கள் இந்த வருட தொடக்கத்தில் அந்தரங்கப் படங்களை எதிர்கொண்டனர் மற்றும் அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் (35%) பாலியல் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை ஆன்லைனில் பகிருமாறு கேட்கப்பட்டனர். கிட்டத்தட்ட பாதி நபர்கள் (47%) தேவையற்ற பாலியல் படங்களைப் பெற்றதாகக் கூறினர், 16% அத்தகைய உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததாக ஒப்புக்கொண்டனர். அத்தகைய படங்களை உண்மையில் பகிர்ந்தவர்கள் தங்கள் நடத்தையை குறைவாகப் புகாரளித்த சாத்தியம் உள்ளது, அதாவது அந்தரங்கப் படங்களைப் பகிர்ந்ததாக ஒப்புக்கொண்டவர்களை விட அவற்றைப் பெற்றதாகக் கூறியவர்கள் மூன்று மடங்கு அதிகம்.

இந்த கண்டுபிடிப்புகள் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, ஐக்கிய ராச்சியம், மற்றும் அமெரிக்கா ஆகிய ஆறு நாடுகளில் நடைபெற்ற Snap டிஜிட்டல் நல்வாழ்வு ஆராய்ச்சியின் இரண்டாம் ஆண்டில் இருந்து வந்தவை. இந்த ஆராய்ச்சியில் நாங்கள் டீனேஜர்கள் (13 முதல் 17 வயது), இளைஞர்கள் (18 முதல் 24 வயது), மற்றும் 13 முதல் 19 வயது வரையிலான இளைஞர்களின் பெற்றோர்கள் ஆகியோரிடம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, அவர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வு ஏப்ரல் 28 முதல் மே 23 2023 வரை நடந்தது. நாங்கள், மொத்தம் 9010 பங்கேற்பாளர்களிடம் ஆய்வு செய்தோம், மேலும் அவர்களின் பதில்கள் தோராயமாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை அவர்கள் ஆன்லைன் அனுபவங்களைப் பற்றியதாகும். நாங்கள் அனைத்து உலகளாவிய கண்டுபிடிப்புகளையும் பிப்ரவரி மாதம் பாதுகாப்பான இணைய தினம் 2024 அன்று வெளியிடுவோம், ஆனால் இந்தத் தரவை உலக கருணை தினத்தில் முன்னோட்டம் பார்க்கிறோம்.

அவர்கள் யாருடன் பகிர்ந்துகொண்டார்கள்

டீனேஜர்கள் மற்றும் இளைஞர்கள் அவர்கள் உண்மையான வாழ்க்கையில் தெரிந்தவர்களுடன் நெருக்கமான அல்லது பாலியல் குறிப்புணர்த்தும் கொண்ட படங்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், அந்தப் படங்கள் யாருக்கு அனுபப்பட்டதோ அதைத் தாண்டி வேகமாகப் பரவும் என்பது எங்களுக்குத் தெரியும். அந்தரங்கப் படத்தில் ஈடுபட்ட 42% ஜெனரேஷன் Z பதிலளித்தவர்களில் (54% இளம் வயதுவந்தோர் மற்றும் 30% டீனேஜர்கள்) சுமார் நான்கில் மூன்று பங்கு நபர்கள் (73%) அவர்களது யதார்த்த வாழ்வில் தெரிந்த ஒருவருக்கு படங்கள் அனுப்பியதாகத் தெரிவித்தனர், அதே சமயம் 44% அவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே தெரிந்த ஒருவருக்கு அந்தரங்கப் புகைபடங்கள் அல்லது வீடியோக்களை அனுப்பியுள்ளார்கள். மூன்றில் ஒரு பங்கு நிகழ்வுகளில் (33%) அந்த உள்ளடக்கம் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவரைத் தாண்டி பகிரப்பட்டுள்ளது. ஆன்லைன் தொடர்புகளுடன் பகிர்ந்து கொண்டவர்களின் முடிவுகளை கீழே உள்ள வரைபடம் விவரிக்கிறது. 

பகிராமல் இருப்பதைக் கொண்டாடுங்கள்

எங்கள் ஆய்வில், அவர்களிடம் அந்தரங்கப் படங்களை ஆன்லைனில் பகிர்ந்து கொள்ளுமாறு யார் கேட்டார்கள் என்று அந்த இளைஞர்களிடம் கேட்க ஆர்வமாக இருந்தோம், ஆனால் விமர்சன சிந்தனை மற்றும் பிரதிபலிப்பைத் தூண்டுவதற்கான நம்பிக்கையில் அவ்வாறு செய்யவில்லை. அவர்களுக்குப் பல காரணங்கள் இருந்தன, இரண்டு வயதுக் குழுவினரும் பகிர்வது அவர்களுக்கு சங்கடமாக இருந்ததாகத் தெரிவித்தனர். கூடுதலாக, தங்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பது பற்றி டீனேஜர்கள் கவலைப்பட்டார்கள், மேலும் 18 முதல் 24 வயதுள்ளவர்கள் இத்தகைய செயல்கள் கல்லூரியில் நுழைவது அல்லது வேலையில் சேருவது போன்ற தங்கள் எதிர்கால சாத்தியங்களைப் பாதிக்கும் எனக் கவலைப்பட்டார்கள். பகிராமல் இருந்ததற்கான முக்கியக் காரணங்களாக பதிலளித்தவர்கள் கூறியது பற்றி:

  • இந்தப் படத்தைப் பகிர்வது சங்கடம் விளைவிக்கும்: இளைஞர்கள்: 55% டீனேஜர்கள்: 56%

  • படம் பொதுவெளிக்குச் செல்வது குறித்து கவலை: இளைஞர்கள்: 27%, டீனேஜர்கள்: 25% 

  • இது எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்பது குறித்து கவலை (எ.கா, கல்லூரி சேர்க்கை, வேலைகள், உறவுகள்): இளைஞர்கள்: 23%, டீனேஜர்கள்: 18% 

  • யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரைத் தாண்டி படங்கள் பரவக்கூடும் என்பது பற்றி கவலை: இளைஞர்கள்: 21%, டீனேஜர்கள்: 20%

  • பெற்றோர்கள்/பராமரிப்பார்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற கவலை: இளைஞர்கள்: 12%, டீனேஜர்கள்: 20%


Snapchat இன் கருவிகள் மற்றும் வளங்கள் 

பயனர்கள் குற்றவாளிகளைத் தடைசெய்யவும் குறிப்பிட்ட Snapகளை (புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்) மற்றும் கணக்குகளை புகாரளிக்கவும் Snap இல் செயலியில் உள்ள கருவிகள் உள்ளன. Snapchat பயனர்கள் எங்களிடம் ஒரு உள்ளடக்கத்தைப் புகாரளிக்க அதன் மீது அழுத்திப் பிடித்தால் போதும் அல்லது எங்கள் உதவித் தளத்தில் உள்ள இந்த ஆன்லைன் படிவத்தை நிரப்பலாம். ஒருவரிடம் Snapchat கணக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தப் படிவத்தை அவர் சமர்ப்பிக்கலாம். (Snapchat-ல் புகாரளிதல் எவ்வாறு வேலை செய்கிறது என்பது குறித்து இங்கு மேலும் அறியவும்.) உலகம் முழுவதும் 24/7 இயங்கும் Snap இன் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக்கு குழுக்களால் புகார்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அமலாக்கத்தில் சட்டத்தை மீறுபவரை எச்சரிப்பது, கணக்கை இடைநிறுத்துவது அல்லது கணக்கை முற்றிலுமாக நிறுத்துவது ஆகியவை அடங்கும். 

எங்கள் கருவிகளைப் பயன்படுத்துமாறு அனைவரையும் நாங்கள் தூண்டுகிறோம், ஆவாறு செய்வது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சம்பவங்கள் புகாரளிக்கும் நிலைக்குச் செல்லாமல் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம் — இதுவே StopNCII இன் ஒரு பகுதியாக இருக்க நாங்கள் விரும்பிய மற்றொரு காரணம், ஆனால் புகாரளிப்பது ஒரு முக்கியமான நோக்கத்திற்கு உதவுகிறது. 

பாலியல் ரீதியான செய்திகளை அனுப்புதல் மற்றும் நிர்வாணப் படங்களைப் பகிர்வது குறித்த எங்கள் புதிய பாதுகாப்பான ஸ்னாப்ஷாட் அத்தியாயத்தைப் பார்க்க இளைஞர்கள், மற்றும் அனைத்து Snapchat பயனர்களையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். பாதுகாப்பான ஸ்னாப்ஷாட் என செயலியில் தேடவும். பல பாலியல் ரீதியான அபாயங்களைப் பற்றி நான்கு புதிய அத்தியாயங்களை சமீபத்தில் சேர்த்தோம். இவை அனைத்தும் U.S. National Center for Missing and Exploited Children ஆல் பரிசீலிக்கப்பட்டன. மற்றும் இடைநிறுத்தம் செய்வதை வலியுறுத்துகிறது, ஒருவரின் உந்துதல் மற்றும் தீவிர சிந்தனையை கேள்விக்குட்படுத்துகிறது.

எங்களது ஆராய்ச்சி மற்றும் தொடர்ச்சியான பணிகள் மூலம், Snapchat ஐப் பாதுகாப்பான, ஆரோக்கியமான, மற்றும் படைப்பாற்றல் மற்றும் இணைப்புக்கான சுவாரஸ்யமான சூழலாக மாற்றுவது குறித்து மேலும் பகிர்ந்து கொள்வதை நாங்கள் எதிர்நோக்குகிறோம். அதுவரை உலக கருணை தின வாழ்த்துக்கள், நவம்பர் 13 அன்று மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் கருணையைப் பின்பற்றுவோம். 

- ஜேக்லின் பியூஷர், Snap தளப் பாதுகாப்பின் உலகத் தலைவர்

செய்திக்குத் திரும்புக