தரவு தனியுரிமை தினம்: தனியுரிமை மற்றும் கணக்கு பாதுகாப்புக்கான எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு

26 ஜனவரி 2024

Snap எவ்வாறு இயங்குகிறது என்பதில் தனியுரிமை எப்போதும் முக்கியமானதாக இருந்து வந்துள்ளது மற்றும் தனியுரிமைக்கான எங்கள் அணுகுமுறை எளிமையானது: நேர்மையாக இருப்பது, தேர்வுகள் வழங்குவது மற்றும் எங்கள் சமூகத்திற்கே முன்னுரிமை என்பதை ஒருபோதும் மறக்காமல் இருப்பது. முதல் நாளில் இருந்தே, மக்கள் தங்கள் நண்பர்களுடன் தனிப்பட்ட உரையாடல் மூலம் இணைந்திருக்க உதவுவதன் மீது Snapchat கவனம் செலுத்திவருகிறது, Snapchat பயனர்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக்கொள்ள இது உதவுகிறது என்பதை நாங்கள் அறிவோம்.

தரவு தனியுரிமை தினத்தை கௌரவிக்கும் வகையில், எங்களின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையைப் பகிர்ந்துகொள்வதும், பெற்றோருக்கான எங்கள் வளங்களை முன்னிலைப்படுத்துவதும், கணக்குப் பாதுகாப்பு குறித்த உதவிக்குறிப்புகளை வழங்குவதும் எங்களுக்கு உற்சாகமளிக்கிறது.

நாங்கள் எவ்வாறு Snapchat பயனர்தரவை சேகரித்து பயன்படுத்துகிறோம் என்பது பற்றி தெளிவாகவும் வெளிப்படையாகவும் இருக்க எங்கள் தனியுரிமைக் கொள்கையை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். தனியுரிமைக் கொள்கைகள் பதின்ம வயதினர் மற்றும் பெரியவர்களுக்கும் என அனைத்துத் தரப்பினருக்கும் படிக்கவும் புரிந்துகொள்ளவும் எளிதாக இருக்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் சிக்கலான சொற்களைத் தவிர்த்து, தொழில்நுட்ப சொற்கள் தேவைப்படும் இடங்களில் வரையறைகளை வழங்குகிறோம், மேலும் ஒவ்வொரு பிரிவின் மேல் சுருக்கங்களைக் காட்டுகிறோம். தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு அணுகுவது, பதிவிறக்குவது மற்றும் நீக்குவது போன்றவற்றை எளிதாக அணுகக்கூடிய வகையில் கட்டுப்படுத்த விரும்புகிறோம், அதனால்தான் எங்கள் தனியுரிமைக் கொள்கை இப்போது Snapchat பயனர்கள் தங்கள் தகவல்களைக் கட்டுப்படுத்தக்கூடிய பல வழிகளில் வழிவகுக்கிறது. அதைப் படியுங்கள்! 

தனியுரிமைத் தகவலுக்கான மற்றொரு சிறந்த தளம் எங்களது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மையமாகும் - இது எங்கள் கொள்கைகள், ஆதாரங்கள் மற்றும் கருவிகளை மக்கள் எளிதாகப் புரிந்துகொள்வதற்கும், Snapchat பயனர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க நாங்கள் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்கள் என்ன செய்ய முடியும் என்பதைக் கற்றுக்கொள்வதற்கும் அனுமதிக்கும் ஒரே இடமாகும். வளங்களைப் பார்க்க எங்களது Snapchat-க்கான பெற்றோர்கள் வழிகாட்டி உள்ளிட்ட எங்களது அர்பணிக்கப்பட்ட பெற்றோர்கள் மீது கவனம் செலுத்தும் எங்களது இணையதளத்தைப் பார்த்து எங்களது பெற்றோர் கட்டுப்பாட்டு கருவியான குடும்ப மையத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை அறிந்துகொள்ளாம். விரைவில், தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மையத்தை My AI தகவல் குறிப்பு பக்கத்திலிருந்து நேரடியாக அணுகலாம் மற்றும் இந்த ஆண்டு, குடும்ப மையத்திலிருந்து பெற்றோர்கள் My AI -ஐ முடக்கலாம். 

பயனர் தனியுரிமையின் முக்கிய பிரிவான கணக்குப் பாதுகாப்பிற்குப் பிரத்யேகமான பல வளங்களையும் நாங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த வாரம், நாங்கள் எங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மையத்தில் ஒரு பிரத்யேக பக்கத்தை அறிமுகப்படுத்தினோம், இது எங்கள் சமூகத்திற்கு பாதுகாப்பு மூலம் தனியுரிமை குறித்த உதவிக்குறிப்புகளை வழங்குகிறது, இதில் உங்கள் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை Snapchat-இல் எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதற்கான வழிமுறைகளுடன் ஒரு பாதுகாப்பு ஸ்னாப்ஷாட் அத்தியாயம், மற்றும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு உதவிக்குறிப்புகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட தரவு தனியுரிமை தின லென்ஸ் ஆகியவை அடங்கும். இந்த லென்ஸ், Future Privacy Forum (FPF) என்ற முன்னணி தனியுரிமை அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டது, இது Snapchat பயனர்கள் தங்கள் தனியுரிமையை ஆன்லைனில் பாதுகாப்பதற்கான சிறந்த நடைமுறைகளை வழங்குகிறது.

இன்றே உங்கள் அமைப்புகளை மதிப்பாய்வு செய்ய நேரம் ஒதுக்கவும், உங்கள் கணக்குப் பாதுகாப்பை மேம்படுத்தவும் மற்றும் உங்க நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்கள் தனியுரிமை லென்ஸஸ் மற்றும் ஸ்டிக்கர்களை பகிரவும்! 

இனிய தரவு தனியுரிமை தின வாழ்த்துக்கள்!

செய்திக்குத் திரும்புக