AI நிபுணர்கள் Snap இன் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் சேர்கிறார்கள்

ஜூலை 31, 2023

இந்த வருடம் தொடக்கத்தில், எங்கள்பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் (SAB) இல் இணைய செயற்கை நுண்ணறிவு (AI)-இல் தகுதிபெற்ற நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்பதாக Snap அறிவித்ததுஇப்போது 16 வல்லுநர்கள் மற்றும் மூன்று இளை வழக்கறிஞர்கள் அடங்கிய குழு தளப் பாதுகாப்பு சிக்கல்களில் Snap இன் பிரதிபலிப்புக் குழுவாக செயல்படுகிறது. இரண்டு AI நிபுணர்கள் எங்கள் நிர்வாகக் குழ்வுல் இணைந்து எங்களது புதிய SAB முதல் நேரடி கூட்டத்தில் பங்கேற்றனர் என்பதைப் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

பின்லாந்து நாட்டைச் சாந்த சாய்டாட்-இன் தலைமை நிர்வாக அதிகாரியான மீரி ஹாடாஜா மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த வழக்கறிஞர் மற்றும் Machine See, Machine Do-இன் ஆசிரியரான பேட்ரிக் கே. லின்ஆகிய இருவரும் Snap SAB-இல் பல விண்ணப்பதாரர்களில் AI நிபுணர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். மீரி மற்றும் பேட்ரிக் பெருமளவு அனுபவ அறிவு மற்றும் அனுபவத்தை எடுத்து வந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றின் சந்திப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து நமது சிந்தனைகளுக்கு உதவுகிறார்கள். மீரி மற்றும் பேட்ரிக் அவர்களின் சொந்த வார்த்தைகளில் சில கருத்துகள் இதோ:

மீரி: “இந்தக் குழுவில் இணைந்து Snap நிறுவனத்துடன் அவர்களின் AI பயணத்தில் இணைந்து பணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் சமூக ஊடக நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி அவற்றின் மதிப்பு மற்றும் சேவைகளை மேம்படுத்தும் முக்கியமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்த அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதால், Snap இந்த புதிய AI வாய்ப்புகளை கவனமாக ஆராய்ந்து, அதன் இளம் பயனர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து, சாத்தியமான அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் முக்கியமான பொறுப்பைக் கொண்டுள்ளது. பலதுறை ஆலோசனைக் குழுவின் மூலம் Snap-உடன் இணைவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன், அது பாதுகாப்பான மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை உறுதி செய்ய உதவுவதற்கும், சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான பொறுப்பான தொழில் நடைமுறைகளை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்வதற்கும் உதவும்.”

பேட்ரிக்: "சமூக ஊடகத்தில் புதிய ஊடாடுதல்கள் மற்றும் அம்சங்களை அறிமுகம் செய்ய AI உற்சாகமூட்டும் வாய்ப்புகளை வழங்குகிறது. எனினும், இந்த தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் குறித்து ஆழ்ந்த மற்றும் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இல்லாமல், AI இன் சாத்தியமான நன்மைகளை முழுமையாக உணர முடியாது. குறிப்பாக டீனேஜர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் இடத்தை உருவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய வழிகளைக் கருத்தில் கொண்டு, Snap அந்த அபாயங்களை அங்கீகரிப்பதைப் பார்ப்பது உறுதியளிக்கிறது. Snap-இன் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவில் உள்ள ஒரு AI நிபுணராக இந்தத் தொடர் முயற்சிகளுக்குப் பங்களிப்பதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.”

2022 ஆம் ஆண்டு பல்வேறு பிராந்தியங்கள், துறைகள் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான பணிகளில் இருந்து பல்வேறு தொழில்முனைவோர் குழுவை உள்ளடக்க எங்கள் SAB-ஐ நாங்கள் விரிவாக்கினோம் மற்றும் மீண்டும் உருவாக்கினோம். இந்த மூலோபாய அளவில் - அனைத்து முக்கிய இளைஞர்களின் குரலின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக, Snapchat ஆற்றல்-பயனர்களான ஜெனரேஷன் Z இன் மூன்று உறுப்பினர்களையும் நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். My AI இன் வருகை, இந்தத் தனித்துவமான மற்றும் வளர்ந்து வரும் துறையில் நிபுணர்களை உள்ளடக்க எங்கள் SAB ஐ மேலும் விரிவுபடுத்த எங்களைத் தூண்டுகிறது.

கடந்த மாத Snap தலைமையகத்தின் தொடக்க நேரடி கூட்டத்தில் தங்கள் ஆழிந்த சிந்தனைகள் மற்றும் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கோண மீரி மற்றும் பேட்ரிக் மற்றும் எங்கள் அனைத்து SAB உறுப்பினர்களுக்கும் நன்றி கூறுகிறோம். புதிய மற்றும் ஏற்கனவே உள்ள தயாரிப்பு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள், சிக்கலான உலகளாவிய சட்ட மற்றும் ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் Snapchat பயனர்கள் மற்றும் எங்கள் இளம் பயனர்களின் பெற்றோரை சென்றடைவதற்கான யோசனைகள் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கான முக்கிய விழிப்புணர்வு மற்றும் தகவல் தரும் உதவிக்குறிப்புகள் ஆகியவற்றை நாங்கள் கூட்டாக விவாதித்தோம்.

வரவிருக்கும் பல மாதங்களுக்கும் மற்றும் ஆண்டுகளுக்கும் எங்கள் SAB உடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.

- ஜாக்குலின் பியூச்சர், Snap தளத்தின் பாதுகாப்புக்கான உலகளாவிய தலைவர்

செய்திக்குத் திரும்புக
1 Member until November 10, 2023