logoSnap Values

முன்-ஆர்டர் (pre-order) செய்வதற்கான விவரக்குறிப்புகள் தொடர்பான உங்கள் தரவைச்

சேகரிக்க, பயன்படுத்த மற்றும் தக்கவைப்பதற்கான ஒப்புதல்

நீங்கள் SPECS செயலி அல்லது இணையதளத்தில் கேமராவை அணுகும்போது, Specs Inc. (“Specs”) உடல் வசதிக்கு உதவும் வகையில் பொருத்தமான SPECS அளவை பரிந்துரைக்க உங்கள் தலையின் அளவை மதிப்பிடுவதற்காக, உங்கள் முகம் மற்றும் தலையைப் பற்றிய விரிவான அளவீடுகள் உட்பட உங்கள் தகவல்களை சேகரிக்கிறது. 

SPECS-ஐ இயக்க, வழங்க, பராமரிக்க மற்றும் மேம்படுத்த, உங்கள் அனுபவத்தைத் தனிப்பயனாக்க Specs இந்தத் தகவலை சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது மற்றும் தக்க வைத்துக் கொள்கிறது. நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் உங்கள் முகம் மற்றும் தலையின் அளவைக் கண்டறிய கேமராவில் இருந்து பெறப்பட்ட சமிக்ஞைகள் அடங்கலாம். இந்த அளவீடுகள் அளவெடுக்கும் அமர்வின் போது மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, அமர்வு முடிவடைந்த பிறகு சேமிக்கப்படுவதில்லை, மேலும் ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் நீக்கப்படுகின்றன. தக்கவைக்கப்படும் ஒரே தகவல் உங்கள் ஆர்டருக்கான இறுதியில் பரிந்துரைக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட தலை அளவு மட்டுமே.


எங்கள் தனியுரிமைக் கொள்கையில் தனிப்பட்ட தகவல் மற்றும் உங்கள் உரிமைகளை நாங்கள் எவ்வாறு செயலாக்கிறோம் என்பது பற்றி நீங்கள் மேலும் படிக்கலாம். 

இங்கே விவரிக்கப்பட்டுள்ளபடி உங்கள் தகவல் பயன்படுத்தப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அல்லது இந்தக் கொள்கை அல்லது எங்கள் தனியுரிமை நடைமுறைகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் எங்களை இங்கே தொடர்பு கொள்ளலாம். 

நீங்கள் கேமராவை அணுகும் போது "அனுமதி" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், மேலே விவரிக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் காலத்திற்கு உங்கள் தலை தொடர்பான தரவின் சேகரிப்பு, பயன்பாடு, சேமிப்பு மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றிற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.