நாங்கள் சேகரிக்கும் தகவல்களில் மூன்று அடிப்படை பிரிவுகள் உள்ளன:
நீங்கள் வழங்கும் தகவல்கள்.
நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது நாங்கள் பெறும் தகவல்கள்.
மூன்றாம் தரப்பினர்களிடமிருந்து நாங்கள் பெறும் தகவல்கள்.
இந்த வகைகள் ஒவ்வொன்றைக் குறித்த சற்று கூடுதல் விவரம் இங்கே உள்ளது.
நீங்கள் வழங்கும் தகவல்கள்
நீங்கள் எங்கள் சேவைகளுடன் ஊடாடும்போது, நீங்கள் எங்களுக்கு வழங்கும் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். உதாரணத்திற்கு, எங்களின் பல சேவைகளுக்கு நீங்கள் ஒரு கணக்கை அமைக்க வேண்டும், எனவே, உங்களின் பெயர், பயனர் பெயர், கடவுச்சொல், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மற்றும் பிறந்த தேதி போன்ற, உங்களைக் குறித்த முக்கியமான சில தகவல்களை நாம் சேகரிக்க வேண்டியிருக்கும். தகவல் பக்கப் படம் அல்லது Bitmoji அவதார் போன்ற எங்கள் சேவைகளில் பொதுவில் தெரியும் சில கூடுதல் தகவல்களையும் எங்களுக்கு வழங்கும்படி நாங்கள் உங்களிடம் கேட்கலாம். வணிகத் தயாரிப்புகள் போன்ற சில சேவைகளுக்கு, நீங்கள் உங்களது பற்று அல்லது கடன் அட்டை எண் மற்றும் அதனுடன் தொடர்புடைய கணக்கு விவரத் தகவல்களை எங்களுக்கு வழங்க வேண்டியிருக்கலாம்.
மேலும் எங்கள் சேவைகள் மூலம் நீங்கள் அனுப்பும் Snapகள் அரட்டைகள் போன்ற எந்தத் தகவல்களையும் எங்களுக்கும் நீங்கள் வழங்குவீர்கள். உங்கள் Snapகள், அரட்டைகள் மற்றும் பிற எந்த உள்ளடக்கத்தைப் பார்க்கும் பயனர்களால் அந்த உள்ளடக்கத்தைச் சேமிக்க அல்லது செயலிக்கு வெளியே நகலெடுக்க எப்போதும் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இணையத்திற்குப் பொருந்தும் அதே பொது அறிவு எங்கள் சேவைகளுக்கும் பொருந்தும்: வேறொருவர் சேமிப்பதையோ பகிர்வதையோ நீங்கள் விரும்பாத உள்ளடக்கத்தைச் செய்திகளில் அனுப்பவோ பகிரவோ வேண்டாம்.
நீங்கள் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளும்போது அல்லது வேறு ஏதேனும் வழியில் எங்களைத் தொடர்புகொள்ளும்போது, நீங்களாக அளிக்கும் அல்லது உங்கள் கேள்வியைத் தீர்க்க எங்களுக்குத் தேவைப்படும் எந்தத் தகவலையும் சேகரிப்போம்.
நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது எங்களுக்குக் கிடைக்கும் தகவல்
நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, நீங்கள் எந்தச் சேவைகளைப் பயன்படுத்தினீர்கள், அவற்றை எப்படிப் பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிப்போம். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட கதையைப் பார்த்தீர்கள், குறிப்பிட்ட விளம்பரத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பார்த்தீர்கள், மற்றும் சில Snapகளை அனுப்பினீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கலாம். நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது நாங்கள் சேகரிக்கும் தகவல்களின் வகைகள் பற்றிய முழுமையான விளக்கம் இதோ:
பயன்பாட்டுத் தகவல்கள். எங்கள் சேவைகளில் உங்கள் செயல்பாடு குறித்த தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். எடுத்துக்காட்டாக, நாங்கள் பின்வருபவை பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்:
நீங்கள் எந்த வடிகட்டிகள் அல்லது லென்ஸ்களைப் பார்க்கிறீர்கள் அல்லது Snaps க்குப் பயன்படுத்துகிறீர்கள், Discover ல் எந்தக் கதைகளைப் பார்க்கிறீர்கள், கண்ணாடியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லையா அல்லது எந்தத் தேடல் வினவல்களைச் சமர்ப்பிக்கிறீர்கள் போன்ற எங்கள் சேவைகளுடன் நீங்கள் செய்யும் பரிமாற்றங்களை பற்றிய தகவல்களைச் சேகரிக்கலாம்.
பிற Snapchat பயனர்கள் எப்படித் தொடர்பு கொள்கிறீர்கள், அதாவது அவர்களின் பெயர்கள், உங்கள் தகவல் தொடர்புகளின் நேரம் தேதி, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பரிமாறிக்கொள்ளும் செய்திகளின் எண்ணிக்கை, எந்த நண்பர்களுடன் நீங்கள் அதிகம் செய்தி பரிமாறிக்கொள்கிறீர்கள், செய்திகளுடனான உங்களின் ஊடாடும் விதம் (செய்திகளை எப்போது திறக்கிறீர்கள் அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுக்கிறீர்கள்) போன்றவை.
உள்ளடக்கத் தகவல்கள். சொந்த ஸ்டிக்கர்கள் போன்ற எங்கள் சேவைகளில் நீங்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தையும், நீங்கள் உருவாக்கிய அல்லது வழங்கும் உள்ளடக்கத்தைப் பற்றிய தகவல்களான, பெறுநர் உள்ளடக்கத்தைப் பார்த்தாரா என்பதையும் உள்ளடக்கத்துடன் வழங்கப்பட்ட மேனிலை தரவுகளையும் நாங்கள் சேகரிக்கிறோம்.
சாதனத் தகவல்கள். நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களிலிருந்தும் சாதனங்களைப் பற்றியும் தகவல்களை நாங்கள் சேகரிக்கிறோம். எடுத்துக்காட்டாக, நாங்கள் சேகரிப்பவை:
உங்கள் வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய தகவல், வன்பொருள் மாதிரி, இயக்க முறைமை பதிப்பு, சாதன நினைவகம், விளம்பர அடையாளங்காட்டிகள், தனிப்பட்ட பயன்பாட்டு அடையாளங்காட்டிகள், நிறுவப்பட்ட பயன்பாடுகள், தனிப்பட்ட சாதன அடையாளங்காட்டிகள், சாதன பயன்பாட்டுத் தரவு, உலாவி வகை, நிறுவப்பட்ட விசைப்பலகைகள், மொழி, பேட்டரி நிலை மற்றும் நேர மண்டலம் போன்றவை;
முடுக்கமானிகள், கைரோஸ்கோப்புகள், திசைகாட்டிகள், ஒலிவாங்கிகள் போன்ற சாதன உணர்விகளிடமிருந்து கிடைக்கிற தகவல்கள், நீங்கள் ஹெட்ஃபோன் இணைத்துள்ளீர்களா என்பது; மற்றும்
மொபைல் போன் எண், சேவை வழங்குநர், IP முகவரி மற்றும் சமிக்ஞை வலிமை போன்ற உங்கள் வயர்லெஸ் மற்றும் மொபைல் இணைய இணைப்புகள் பற்றிய தகவல்கள்.
சாதன தொலைபேசிப் புத்தகம். நண்பர்களுடன் தொடர்புகொள்வதற்கானது தான் எங்களின் சேவைகள் அனைத்தும் என்பதால், நாங்கள் — உங்களின் அனுமதியுடன் — உங்கள் சாதனத்தின் தொலைபேசிப் புத்தகத்திலிருந்து தகவல்களைச் சேகரிக்கக்கூடும்.
கேமரா, புகைப்படங்கள் மற்றும் ஒலி அமைவு. எங்களுடைய பல சேவைகளுக்கு உங்கள் சாதனத்தின் கேமரா, புகைப்படங்களிலிருந்து படங்களையும் பிற தகவல்களையும் சேகரிக்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, உங்கள் கேமரா அல்லது புகைப்படங்களை எங்களால் அணுக முடிந்தாலொழிய, உங்கள் கேமரா சுருளிலிருந்து உங்களால் Snaps ஐ அனுப்பவோ, புகைப்படங்களைப் பதிவேற்றவோ முடியாது.
இருப்பிடத் தகவல்கள். நீங்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். உங்கள் அனுமதியுடன், GPS, வயர்லெஸ் நெட்வொர்க்குகள், செல்பேசி கோபுரங்கள், வை-பை அணுகல் மையங்கள் மற்றும் பிற உணர்விகளான கைரோஸ்கோப்புகள், முடுக்கமானிகள் மற்றும் திசைகாட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய முறைகளைப் பயன்படுத்தி உங்கள் துல்லியமான இருப்பிடத் தகவலையும் நாங்கள் சேகரிக்கலாம்.
குக்கீகள், பிற தொழில்நுட்பங்களால் சேகரிக்கப்படுகிற தகவல்கள். பெரும்பாலான இணையச் சேவைகளையும் மொபைல் செயலிகளையும் போலவே, உங்கள் செயல்பாடு, உலாவி, சாதனம் பற்றிய தகவல்களைச் சேகரிக்கக் குக்கீகள் மற்றும் வெப் பீக்கான்கள், இணையச் சேமிப்பகம், தனித்துவ விளம்பர அடையாளங்காட்டிகள் போன்ற பிற தொழில்நுட்பங்களையும் நாங்கள் பயன்படுத்தலாம். எங்கள் கூட்டாளர்களில் ஒருவர் மூலம் நாங்கள் வழங்கும் விளம்பரம், வணிக அம்சங்கள் போன்ற சேவைகளுடன் ஊடாடும் போது தகவல்களைச் சேகரிக்க நாங்கள் இந்தத் தொழினுட்பங்களைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக உங்களுக்கு அதிக பொருத்தமான விளம்பரங்களைக் காட்ட பிற வலைத்தளங்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். பெரும்பாலான இணைய உலாவிகள் இயல்பாக குக்கீகளை ஏற்க அமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பினால், உங்கள் உலாவி அல்லது சாதனத்தில் உள்ள அமைப்புகள் மூலம் உலாவியின் குக்கீகளை அகற்றலாம் அல்லது நிராகரிக்கலாம். இருப்பினும் நினைவில் கொள்ளுங்கள், குக்கீகளை அகற்றுவது அல்லது நிராகரிப்பது எங்கள் சேவைகளின் கிடைக்கும் தன்மையையும் செயல்பாட்டையும் பாதிக்கலாம். நாங்களும் எங்கள் கூட்டாளர்களும் எங்கள் சேவைகளில் குக்கீகளை எப்படிப் பயன்படுத்துகிறோம் மேலும் உங்களின் வாய்ப்புகள் பற்றி மேலும் அறிய எங்கள் குக்கீக் கொள்கையைப் பாருங்கள்.
பதிவுத் தகவல்கள். நீங்கள் எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்தும்போது பதிவுத் தகவலையும் சேகரிக்கிறோம், எடுத்துக்காட்டுகள்:
எங்கள் சேவைகளை எப்படிப் பயன்படுத்தினீர்கள் என்பது பற்றிய விவரங்கள்;
உங்கள் இணைய உலாவி வகை மற்றும் மொழி போன்ற சாதனத் தகவல்;
உங்கள் சாதனம் அல்லது உலாவியை தனித்து அடையாளம் காணக்கூடிய குக்கீகள் அல்லது பிற தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய அடையாளங்காட்டிகள்; மற்றும்
எங்கள் இணையதளத்திற்கு செல்லும் முன் அல்லது சென்ற பின் நீங்கள் பார்வையிடுகிற பக்கங்கள்.
மூன்றாம் நபர்களிடமிருந்து நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்
நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைப் பிற பயனர்கள், எங்கள் துணை நிறுவனங்கள் மற்றும் மூன்றாம் நபர்களிடமிருந்து சேகரிக்கலாம். சில எடுத்துக்காட்டுகள் இதோ:
நீங்கள் உங்கள் Snapchat கணக்கை வேறொரு சேவையுடன் இணைத்தால் (Bitmoji அல்லது மூன்றாம்-நபர் செயலி போன்றவை), நீங்கள் அந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது போன்ற தகவல்களைப் பிற சேவையிலிருந்து பெறலாம்.
விளம்பரதாரர்கள், செயலி வடிவமைத்தவர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பிற மூன்றாம் நபர்களும் எங்களுடன் தகவல்களைப் பகிரலாம். விளம்பரங்களின் செயல்திறனை இலக்குவைக்க அல்லது அளவிட, நாங்கள் இந்தத் தகவல்களை வேறு வழிகளில் பயன்படுத்தலாம். இந்த வகையான மூன்றாம் நபர் தரவுகளின் எங்கள் பயன்பாடு குறித்து எங்கள் உதவி மையத்தில் மேலும் அறியலாம்.
மற்றொரு பயனர் தனது தொடர்புப் பட்டியலைப் பதிவேற்றினால், நாங்கள் உங்களைப் பற்றி சேகரித்துள்ள பிற தகவல்களுடன் அந்த பயனரின் தொடர்புப் பட்டியலின் தகவல்களை ஒருங்கிணைக்கலாம்.