அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் Fentanyl பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களின் தற்போதைய பணிகள் குறித்த செய்திகள்
ஜூன் 9, 2022
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் Fentanyl பிரச்சனையை எதிர்த்துப் போராடுவதற்கான எங்களின் தற்போதைய பணிகள் குறித்த செய்திகள்
ஜூன் 9, 2022
கடந்த ஆண்டு, fentanyl மற்றும் போலி மாத்திரையின் பரவலான தொற்றின் ஆபத்துகள் குறித்த இளைஞர்களின் விழிப்புணர்வைப் புரிந்து கொள்வதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நாங்கள் இளம் அமெரிக்கர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தி, கிட்டத்தட்டப் பாதி பேர் (46%) அவர்களின் சராசரி மன அழுத்தம் அளவு 10-க்கு 7 அல்லது அதற்கு மேற்பட்டதாக உள்ளது என்று கண்டறிந்தோம். பதிலளித்தவர்களில் 10 பேரில் சுமார் 9 பேர் (86%) அவர்களின் வயதிலுள்ளவர்கள் ஆட்கொள்ளப்பட்டது போல் உணர்வதாக ஒப்புக்கொண்டனர்.
இப்போது, அமெரிக்க. இளைஞர்கள் குறிப்பிடத்தக்க மனநல நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள் என்பது நன்கு புரிந்துகொள்ளப்பட்டு ஆவனப்படுத்தப் பட்டுள்ளது.. நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) இன் படி 2021 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி மானவர்களில் 37% மோசமான மனநலன் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர், அதே சமயம் 44% பேர் கடந்த ஆண்டில் தொடர்ந்து சோகமாகவோ அல்லது நம்பிக்கையற்றோ உணர்ந்ததாகத் தெரிவித்தனர்.
மனநலம் சார்ந்த அசாதாரண சவால்கள் நிறைந்த இந்த சகாப்தம், பதின்ம வயதினர் உட்பட இளைஞர்களின் கொள்ளை நோய்க்கு பங்களித்துள்ளது, இதை சமாளிக்கும் வழிமுறையாக சட்டவிரோத போதை மருந்துகள் பக்கம் கவனம் திரும்புகிறது. துரதிர்ஷ்டவசமாக, போதைப்பொருள் விற்பனையாளர்கள் மனஅழுத்தத்தைக் கையாள வழிகளைத் தேடும் இளம் வயதினரை வேட்டையாடுகின்றனர். அவர்கள் மேலும் சட்டவிரோத மலிவான பெரும்பாலும் fentanyl வைத்து நச்சாக்கப்பட்ட சக்திவாய்ந்த morphine ஐ விட 50-100 மடங்கு வலிமையானதாக இருக்கும் மருந்துகளை அதிக அளவில் விற்பனை செய்கின்றனர். அமெரிக்க போதைப்பொருள் முகமையின் படி 40% க்கும் அதிகமான சட்டவிரோத மாத்திரைகளை சோதித்த போது அவை ஆபத்தான அளவு fentanyl -ஐக் கொண்டிருந்தன.
பரிந்துரை மருந்து துஷ்பிரயோகம் தான் பதின்ம வயதினர் மத்தியில் மிக வேகமாக வளர்ந்து வரும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, மேலும் தங்களின் மனநிலையை மாற்ற அல்லது வேறு நோக்கங்களுக்கு பரிந்துரை மருந்துகளை, இளம் வயதினரில் ஆறில் ஒருவர் பயன்படுத்துகிறார். நாடு முழுவதும், வளர்ந்து வரும் இளம் அமெரிக்கர்கள் உட்பட அதிக அளவிலான அமெரிக்கர்கள் பாதுகாப்பான முறையான மாத்திரைகள் என நம்பி உட்கொண்ட பிறகு fentanyl காரணமாக மரணிக்கின்றனர்.
எங்கள் சொந்த ஆய்வின் படி, 13-24 வயதுடையவர்களில் சுமார் 15% பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர், ஐந்தில் ஒருவர் அவ்வாறு செய்வது பற்றி யோசித்திருக்கிறார் மற்றும் 40% அவ்வாறு செய்தவர் ஒருவரைத் தெரியும். எண்பத்து நான்கு% பேர் கவலை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கத் தான் தாங்களும் தங்கள் சகாக்களும் போதை மருந்து பயன்படுத்துவதற்கான காரணம் என்று கூறுகிறார்கள்.
Snap இல், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனைக்கு எங்கள் தளத்தை பயன்படுத்துவதற்கு எதிராக பூஜ்ய சகிப்புத்தன்மை கொள்கையை எப்போதும் கொண்டுள்ளோம் மற்றும் fentanyl பயன்பாட்டை மூன்று முக்கிய வழிகளில் எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த உள்ளடக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதற்கான எங்கள் தொழில்நுட்பங்களை தொடர்ந்து மேம்படுத்துவதன் மூலமும், எங்கள் தளத்தை தவறாகப் பயன்படுத்தும் போதைப்பொருள் விற்பனையாளர்களை முடக்குவதன் மூலமும்; சட்ட அமலாக்கத்திற்கான எங்கள் ஆதரவை வலுப்படுத்துவதன் மூலம்; மற்றும் fentanyl-இன் பயங்கரமான ஆபத்துகளைப் பற்றி எங்கள் பயன்பாட்டில் நேரடியாக Snapchat பயனர்களுக்குக் கற்பிக்க நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களுடன் கூட்டுசேர்வதன் மூலமும். முந்தைய பொது புதுப்பிப்புகளில் எங்கள் உத்தியைப் பற்றி நீங்கள் இங்கே மற்றும் இங்கே அறியலாம்.
எங்கள் செயலியில் உள்ள பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் படிகளை நாங்கள் அறிமுகம் செய்து ஒரு வருடம் ஆகிறது, மேலும் இந்த நெருக்கடியை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் சமாளிக்கும் தொடர் பணி பற்றிய மேலோட்டத்தை நாங்கள் வழங்க விரும்பினோம்.
இந்த முயற்சிகளில் எங்களுக்கு ஆலோசனை வழங்வும் போதை மருந்து நிபுணர்கள், சட்ட அமலாக்க சமூகம், fentanyl மற்றும் போலி மாத்திரைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும் நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களுடன் நெருக்கமாக பணியாற்றவும்.ஃபெடரல் போதைப்பொருள் அமலாக்க முகமைகளின் முன்னாள் தலைவர்களை நாங்கள் நியமித்துள்ளோம்.
சட்ட அமலாக்க விசாரணைகளுக்கான எங்கள் ஆதரவை மேலும் வலுப்படுத்த, கடந்த ஆண்டில் எங்கள் சொந்த சட்ட அமலாக்க செயல்பாடுகள் அணியை 74% அதிகரித்துள்ளோம், இந்த புதிய குழு உறுப்பினர்களில் பலர் இளைஞர் பாதுகாப்பில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளாக சேர்ந்துள்ளனர். கடந்த அக்டோபரில் கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் முகமைகளில் இருந்து 1700 க்கும் மேற்பட்ட சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் நாங்கள் எங்கள் முதல் வருடாந்திர சட்ட அமலாக்க உச்சிமாநாட்டை நடத்தினோம்.
Snapchat இல் ஆபத்தான போதைப்பொருள் செயல்பாட்டை முன்கூட்டியே கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் கருவிகளில் பெருமளவு முதலீடு செய்கிறோம் மற்றும் Snapchat-ஐக் குறிப்பிடும் பிற தளங்களில் சட்டவிரோத போதைமருந்து தொடர்பான உள்ளடக்கத்தைக் கண்டுபிடிக்க நிபுணர்களுடன் பணிபுரிகிறோம், இதன் மூலம் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கணக்குகளைக் கண்டறிந்து அவர்களை முடக்க உடனடி நடவடிக்கை எடுக்க முடியும். இதன் விளைவாக, நாங்கள் கண்டறியும் அளவுகள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 25% க்கு அதிகமாக அதிகரித்துள்ளது, மற்றும் Snapchat பயனர் மீறும் சட்டவிரோத போதைப்பொருள் உள்ளடக்கத்தைப் புகாரளிக்கும் முன் 90% முன்கூட்டியே கண்டறியப்பட்டுள்ளது.
எங்கள் தளத்தை சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையாளர்கள் பயன்படுத்துவதை நாங்கள் கண்டறியும் போது, அவர்கள் கணக்குகளை உடனடியாக முடக்கி அவர்கள் புதிய கணக்குகளைத் தொடங்குவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கிறோம். சரியான சட்ட கோரிக்கைகளுக்கு பதில் தரும் வகையில் தரவைப் பாதுகாத்தல் மற்றும் வெளிப்படுத்தல் உள்ளிட்ட நடைமுறைகளில் சட்ட அமலாக்க விசாரணைகளுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.
போதைப்பொருள் சார்ந்த வார்த்தைகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கான தேடல் முடிவுகளை Snapchat-இல் தடை செய்கிறோம், அதற்குப் பதிலாக செயலியில் உள்ள போர்ட்டலான ஹெட்ஸ் அப் மூலம் fentanyl குறித்த ஆபத்துகள் பற்றி நிபுணர்களின் கல்வி உள்ளடக்கத்தைக் காட்டுகிறோம். எங்கள் கூட்டாளர்களில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC), போதை மருந்து துஷ்பிரயோகம் மற்றும் மன நல சேவைகள் நிர்வாகம் (SAMHSA), அமெரிக்கா சமூக போதைப்பொருள் எதிர்ப்பு இணைப்புகள் (CADCA), Truth Initiative, மற்றும் தி SAFE புராஜெக்ட் ஆகியவை அடங்கும். ஹெட்ஸ் அப் அறிமுகம் செய்ததில் இருந்து, 25 மில்லியனுக்கும் அதிகமான Snapchat பயனர்களுக்கு இந்த அமைப்புக்களில் இருந்து உள்ளடக்கம் முன்னெச்சரிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குக் குறைவான Snapchat பயனர்கள் தேடல் முடிவுகள் அல்லது பொதுவான நண்பர்கள் இருந்தால் தவிர வேறு ஒருவருக்கு நண்பர் பரிந்துரையாகக் காட்டப்படுவதைக் குறைக்க கூடுதளாக புதிய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். பதின்ம வயதினர் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு மற்றொரு Snapchat பயனருடன் நண்பர்களாக இருக்க வேண்டிய, நீண்ட காலமாக நாங்கள் ஏற்படுத்தியுள்ள பாதுகாப்பை இது மேலும் கட்டமைக்கிறது.
Snapchat பயனர்களுக்கு fentanyl பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த எங்கள் செயலியில் பல வீடியோ விளம்பர பிரச்சாரத் தொடர்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். அதில் முதலாவது, கடந்த கோடை காலத்தில் Song for Charlie உடன் இணைந்து அறிமுக செய்த பிரச்சாரம், அது Snapchat இல் 260 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது கடந்த மாதம், தேசிய Fentanyl விழிப்புணர்வு தினத்தின் ஒரு பகுதியாக போது சேவை அறிவிப்புகள், லென்ஸஸ் வடிகட்டி ஆகியவற்றை செயலியில் மேற்கொண்டோம், அவை அனைத்தும் சுமார் 60 மில்லியன் முறை பார்க்கப்பட்டன.
Snapchat-இல் எங்களது உள்ளடக்கத் தளத்தில் விளம்பரப்படுத்தப்படும் மற்றும் ஹெட்ஸ் அப்பிலும் கிடைக்கும் குட் லக் அமெரிக்கா, என்ற எங்களது நிறுவன செய்தி நிகழ்ச்சி ஒரு சிறப்புப் பிரத்யேக தொடரின் வாயிலாக ஒரு ஆண்டுக்கும் மேலாக fentanyl நெருக்கடியை கவர் செய்கிறது, இதை இன்றுவரை 900,000 க்கும் மேலான Snapchat பயனர்கள் பார்த்துள்ளனர்.
எங்கள் பரந்த உத்தியின் ஒரு பகுதியாக நாங்கள் பிற தளங்களுடன் பணியாற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம். நாங்கள் சமீபத்தில் Meta உடன் ஒரு முன்னோடி திட்டத்தைத் தொடங்கினோம், அதில் சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான உள்ளடக்கம் மற்றும் நடவடிக்கையின் வடிவங்கள் மற்றும் அறிவிப்புக்குறிகளைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்த அறிவிப்புக் கூறி பகிரும் நிகழ்ச்சியானது சட்டவிரோத போதைப்பொருள் உள்ளடக்கம் மற்றும் விற்பனையாளர் கணக்குகளைக் கண்டறிந்து அகற்றுவதில் எங்கள் முன்கூட்டிய கண்டறிதல் முயற்சிகளை வலுப்படுத்த இரு தளங்களையும் அனுமதிக்கும். வளர்ந்து வரும் fentanyl பயன்பாட்டைத் தடுக்க உதவ பிற தலங்கள் அனைத்துடனும் சேர்ந்து பணியாற்றுவதை இலக்காகக் கொண்டு இந்தக் கூட்டுமுயற்சியைத் தொடர்வதை நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்.
கடந்த மாதம், fentanyl-இன் ஆபத்துகளைப் பற்றி இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் மேலும் அறிய இந்த கோடையில் தொடங்கப்படும் இதுவரை நடந்திராத பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தில், விளம்பர கவுன்சில் மற்றும் Google மற்றும் Meta உள்ளிட்ட பிற தொழில்நுட்ப தளங்களுடன் இணைந்து செயல்படுகிறோம் என்று அறிவித்தோம். . இந்த புதிய பிரச்சாரத்தைப் பற்றி இங்கே மேலும் அறிக.
மனநலச் சாவால்களைக் கையாளும் போது ஒருவருக்கொருவர் ஆதவாக இருக்கும் வகையிலான ஆதரவு அமைப்பான உண்மையான நண்பர்களுடன் தொடர்புகொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயலியாக, நாங்கள் மனநல தலைப்புகள் மீதான எங்கள் செயலில் உள்ள கருவிகள் மற்றும் வளங்களை தொடர்ந்து விரிவுபடுத்துவோம். - இது எங்களுக்கு நீண்ட கால மற்றும் தொடரும் முன்னுரிமையாகும். (இங்கே மற்றும் இங்கே மேலும் அறிக).
கூடுதலாக பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு புதிய கருவிகளை செயலியில் உருவாக்குகிறோம். இது Snapchat பயனர்களின் தனியுரிமையை மதிக்கும் அதே சமயம் தங்களுடைய பதின்ம வயது பிள்ளைகள் Snapchat-இல் யாருடன் பேசுகிறார்கள் என்பதைப் பற்றிய அதிகத் தகவலை வழங்கும். வரும் மாதங்களில் இந்த புதிய அம்சங்களை அறிமுகசெய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இந்த நடவடிக்கைகளை சேர்த்து எடுத்தால், போதை மருந்து விற்பனையாளர்களுக்கு எதிரான தளமாக Snapchat-ஐ இவை உருவாக்கும் என்று நம்புகிறோம், மேலும் விற்பனையாளர்கள் எப்பொழுதும் எங்கள் அமைப்புகளைத் தவிர்ப்பதற்கான வழிகளைத் தேடுவார்கள் என்பதை அறிந்து எங்கள் முயற்சிகளை எவ்வாறு அர்த்தமுள்ள வகையில் மேம்படுத்துவது என்பதை நாங்கள் தொடர்ந்து ஆராய்வோம்.
இந்தப் பிரச்சினை Snapchat க்கு அப்பாலும் செல்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம். இறுதியில், இந்தப் பரவலுக்கான தீர்வு, இந்த நெருக்கடியின் மூல காரணங்களை நிவர்த்தி செய்வதற்கான நாடு தழுவிய முயற்சியில் உள்ளது, இதில் இளைஞர்களுக்கு இத்தகைய ஆழ்ந்த மனநல சவால்களை உருவாக்கும் நிலைமைகளும் அடங்கும். இந்த முக்கியமான விஷயத்தில் எங்கள் சமூகத்துடன் இணைந்து செயல்பாடு அவர்கள் சொல்வதை தொடர்ந்து கவனிப்போம். ஒரு சமூகமாக எங்கள் நீண்டகால இலக்கு மன நலச் சவால்களை எதிர்கொள்ளும் குறைந்த எண்ணிக்கையிலான இளம் வயதினர் மற்றும் சட்டவிரோத போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய உணர்வு மிகுந்தவர்களை விட தகுந்த சேவைகள் மற்றும் கவனிப்புக்கு சமமான அணுகல் உள்ளவர்கள் நிறைந்த உலகம். இதற்கு அரசாங்கம், சட்ட அமலாக்கம், தொழில்நுட்பத் துறை, சுகாதார பராமரிப்புச் சேவைகள் மற்றும் பாவற்றின் இடையே ஒருங்கிணைந்த முயற்சி தேவைப்படும், மேலும் இந்த இலக்கை ஆதரிக்க நாங்கள் செய்யக்கூடிய அனைத்தையும் செய்ய உறுதிபூண்டுள்ளோம்.