யு.கே பொதுத் தேர்தலில் Snap குடிமைப்பணி பங்களிப்புச் செயல்பாடுகள் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 3000 இளைஞர்கள் வாக்களிக்கப் பதிவுசெய்ய உதவியுள்ளது

ஜூலை 28, 2024

Snapஇல், நாங்கள் குடிமைப் பங்களிப்பு என்பது சுய வெளிப்பாட்டின் வலிமையான வடிவங்களுள் ஒன்று என நம்புகிறோம் - இது Snapchatஇல் எங்களின் முக்கியமான மதிப்புகளுள் ஒன்றாகும். ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் யு.கே பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நாளுக்கு முன்பாக வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்த இளம் வாக்காளர்களை ஒன்றுதிரட்டி கற்பிப்பதற்கான எங்களின் தனித்துவமான பொறுப்பை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் - நாங்கள் 13-24 வயதில் உள்ளவர்களில் 90% பேர்களை எட்டுகிறோம் மேலும் யு.கேவில் மாதந்தோறும் 21 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்கள் Snapchat பயன்படுத்துகின்றனர்.

இளைஞர்கள் மத்தியில் வாக்காளர் பதிவினை ஊக்குவிக்கச் செயலாற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான My Life My Say (MLMS) உடன் இணைந்து, வாடகை உயர்வு மற்றும் காலநிலை மாற்றம் போன்ற இளைஞர்களை அதிகம் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேச இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘Give an X’ பரப்புரையை ஆதரிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக Snap பிரத்தியேக இணைப்பு நிஜமாக்க (AR) தேர்தல் வடிகட்டியை உருவாக்கியுள்ளது, இது ஜூன் 18 தேசிய வாக்காளர் பதிவு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இது யு.கேவில் 18-34 வயதில் உள்ள 1.64 மில்லியன் பேர்கள் வாக்காளர்களாகப் பதிவுசெய்த சாதனைக்கு வழிவகுத்தது. இந்தப் பரப்புரை, வடிகட்டி மூலமாக ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் 3000 பேர்கள் Snapchat வழியாக வாக்காளராகப் பதிவுசெய்தனர்!

தேர்தல் நாளை முன்னிட்டு, MLMS உடன் இணைந்து இன்டராக்டிவ் லென்ஸஸை அறிமுகப்படுத்தியுள்ளோம், இந்த லென்ஸஸ் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வாக்குப்பதிவு மையத்திற்குச் சென்று வாக்களிக்க ஊக்குவிக்கும், உள்ளூர் வாக்குப்பதிவு மையம் போன்ற அவர்கள் வாக்களிக்கத் தேவையான தகவல்களை வழங்கும். ஜூலை 4 அன்று, வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முகமாக யு.கே Snapchat பயனர்கள் அனைவருடனும் இந்த லென்ஸஸை நாங்கள் பகிர்வோம். 

Snapஇன் முக்கிய செய்திக் கூட்டாளரான BBC உடன் இணைந்து தேர்தல் நாள் உற்சாகத்தை உருவாக்க கவுண்ட்டவுன் AR வடிகட்டியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். BBC பொதுத்தேர்தலுக்காக பிரத்தியேக மையத்தை உருவாக்கியுள்ளது, அது யு.கே முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கான முக்கியத் தகவல் மூலமாக உள்ளது — இந்த வடிகட்டி BBCஇன் வாக்களித்தல் கையேட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது தேர்தல் பற்றி அறிந்துகொள்ளவும் வாக்குப்பதிவு நாளில் செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை பற்றி புரிந்துகொள்ளவும் இளைஞர்களுக்கு உதவும்! எங்கள் AR கூட்டாண்மை வடிகட்டி ஜூலை 4 வரை BBCஇன் அனைத்துச் சேனல்களிலும் பகிரப்படும்.

இந்தக் கூட்டாண்மை தேர்தல் குறித்த பல்வேறு செயல்பாடுகளைப் பின்தொடரவும் அவற்றில் பங்கேற்கவும் உதவும் வகையில் எங்கள் சமூகத்திற்குத் தேவையான நம்பகமான தகவல் மூலங்களாக இயங்கும் The Rest is Politics, The Telegraph, Sky News UK & Sky Breaking News, The Guardian, The Mirror உள்ளிட்ட செய்தி நிறுவனங்களுக்குக் கூடுதலானதாக இருக்கும். 

பொதுத் தேர்தல் சூழலில் ஏற்படும் தவறான தகவல்களைக் கையாளுதல்


2024 என்பது உலகளாவிய தேர்தல் வருடமாகும், இந்த வருடத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளன, இதில் ஜூலை 4 யு.கே தேர்தலும் அடங்கும்.  Snapஇல், தேர்தல்களின் நேர்மைத்தன்மையைத் தக்கவைக்கவும் தவறான தகவல்களிலிருந்து Snapchat பயனர்களைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல்களுக்கு ஆயத்தமாகும் முகமாக நாங்கள் செய்ய இருப்பவற்றை வரையறை செய்தோம். இந்தப் புதுப்பிப்பு எங்கள் அணுகுமுறையின் செயல்திறத்தை நிரூபித்த எங்கள் சமீபத்திய EU தேர்தல் வலைப்பதிவின் தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது.

தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தவறான தகவல்கள், வேண்டுமென்றே தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தைப் பகிர்வதை எப்போதும் தடைசெய்துள்ளன – இதில் டீப்ஃபேக்ஸ், AI அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏமாற்றும் வகையில் கையாளப்பட்ட உள்ளடக்கம் ஆகியவை அடங்கும். 

தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளைக் குறித்த தவறான தகவல்கள் பரவக்கூடும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்,  Snapஇன் தளக் கட்டமைப்பு தவறான தகவல்கள் பரவுதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், யு.கேவில் உள்ள எங்கள் சமூகத்தினரைப் பாதுகாப்பாகவும் தகவலறிந்தவர்களாகவும் வைக்க நாங்கள் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதில் அடங்குபவை:

  • Logically Facts என்ற முன்னணி உண்மைச் சரிபார்ப்பு அமைப்புடன் இணைந்து, இது பன்னாட்டு உண்மைச் சரிபார்ப்பு வலைப்பின்னலில் (IFCN)அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்ட அமைப்பு ஆகும், யு.கே முழுவதிலும் அரசியல் விளம்பரங்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கிறோம்.

  • அரசியல்ரீதியான தலைப்புகள் மற்றும் நபர்களில் எங்கள் உரையாடி My AIஇன் ஈடுபாட்டைத் தவிர்க்கக் கட்டளையிட்டுள்ளோம்.

  • யு.கே Snap ஸ்டார்ஸுக்காக Snapchatஇல் அரசியல் உள்ளடக்கத்தைக் குறித்த தெளிவான கொள்கையை வரையறுத்துள்ளோம் மற்றும் அவர்களின் பதிவுகள் மற்றும் தேர்தல் தொடர்பான வினவல்களை மேல்நிலைக்குக் எடுத்துச் செல்வதற்கான தொடர்புப் புள்ளிகளையும் வழங்கியுள்ளோம். 

இந்த நடவடிக்கைகள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த எங்கள் சமூகத்தை ஊக்குவிக்கவும், பாதுகாப்பான, பொறுப்பான, துல்லியமான, உதவிகரமான செய்தி மற்றும் தகவலுக்கான இடமாக Snapchatஐ வைக்கவும் உதவும் என நாங்கள் நம்புகிறோம். 

செய்திக்குத் திரும்புக