Snapchat தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: அடிப்படைகள்
ஏப்ரல் 21, 2021

பாதுகாப்பு மற்றும் தாக்க வலைப்பதிவிற்கு வரவேற்கிறோம்! நான் ஜென் ஸ்டௌட், பொதுக் கொள்கையின் துணை தலைவர், இன்று எங்களின் அணுகுமுறையை விளக்கும் இந்த இடுகையுடன் இவானின் அறிமுகத்தைப் பின்தொடர்வதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயல்பாகவே Snapchat ஒரு வித்தியாசமான தளமாக இருப்பதால், நீங்கள் அதை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என்றாலும், பயன்படுத்துவதைக் குறித்து யோசிக்கவில்லை என்றாலும் (பரவாயில்லை!) அதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் தயாரிப்பை இளைஞர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய விரும்புபவர்களுக்கும், அல்லது பாதுகாப்பு மற்றும் நம்பிக்கைத் தொடர்பான முக்கியமான சிக்கல்களை நாங்கள் எவ்வாறு அணுகுகிறோம் என்பதை அறிய விரும்பும் பல பங்குதாரர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் இந்த வலைப்பதிவு பயனுள்ள ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
எங்கள் Snapchat சமூகத்தின் பாதுகாப்பே எங்களுக்கு மிகவும் முக்கியமானது, மேலும் எங்கள் தயாரிப்புகளை பயன்படுத்தும்போது அவர்களின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நல்வாழ்வை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி எங்கள் சமூகத்துக்கு கற்றுக் கொடுப்பது எங்களின் பொறுப்பு என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இதை இன்றுவரை வலைத்தள வளங்கள் மற்றும் செயலியில் உள்ள கல்வி முயற்சிகள் மூலம் செய்து வருகிறோம், இந்த முயற்சிகளை இருமடங்கு அதிகரிக்க டிஜிட்டல் கல்வியறிவு பிரச்சாரத்தை மிகவும் பிரம்மாணடமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் செய்துள்ளோம். Snapchat பயனர்களுக்கு இன்னும் சிறப்பாக ஆதரவு அளிப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம், மேலும் அவர்களை ஆதரிப்பவர்களாக இருக்கிற அவர்களின் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்கள், வழிநடத்துபவர்கள், அவர்கள் மீது அதிக அக்கறை செலுத்தும் பிற மக்கள் ஆகியோருடன் பேசுகின்ற சிறந்த பணியை நாங்கள் செய்ய விரும்புகிறோம்:.
ஆரம்பமாக, Snapchat வழக்கமான சமூக ஊடகத் தளங்களிலிருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள விவரங்களை நாம் பார்ப்போம். இவான் விளக்கியதுபோல, எங்கள் இலக்கு நலமான, பாதுகாப்பான, வேடிக்கையான சூழலில் உண்மையான நட்புகளை வளர்த்தெடுக்கும் மற்றும் ஆதரிக்கும் தயாரிப்புகளை வடிவமைப்பதும் மற்றும் தொழில் நுட்பத்தை உருவாக்குவதும் ஆகும். இந்த இலக்கு எங்கள் தளத்தை எவ்வாறு கட்டமைப்பது மற்றும் இயக்குவது மற்றும் புதிய தயாரிப்புகளை எவ்வாறு உருவாக்குவது, எதிர்காலத்தைப் பற்றி நாங்கள் எவ்வாறு நினைக்கிறோம் மற்றும் இறுதியில் தொழில்நுட்பத் துறையில் எங்கள் பங்கு குறித்து நாங்கள் எடுக்கும் முடிவுகளை இயக்குகிறது.
Snapchat செயலியின் கட்டமைப்பு
வடிவமைப்பு செயல்முறையின் முன்முனையில் உள்ள புதிய அம்சத்தின் தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் நெறிமுறை தாக்கங்களை கருத்தில் கொள்ளும் தயாரிப்பு வளர்ச்சி செயல்முறைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். மேலும் எங்கள் தீவிர மீளாய்வில் தேர்ச்சியடையாத தயாரிப்புகளை நாங்கள் அறிமுகம் செய்வதில்லை.
முழு உலகிற்கும் சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை எவராலும் பரப்பக்கூடிய திறந்த செய்தி ஊட்டத்தை நாங்கள் கொண்டிருக்கவில்லை. சொல்லப்போனால், Snapchat செயலியை நீங்கள் முதன்முதலில் முயற்சிக்கும்போது வித்தியாசமாக இருக்கும், ஏனெனில் இது கேமராவிற்கு திறக்கும் - அடிப்படையில் இது ஒரு வெற்று கேன்வாஸ் - நகர்த்தி பார்க்கும் ஒரு ஊட்டம் அல்ல.
Snapchat செயலியில் சரிபார்க்கப்படாத உள்ளடக்கத்தை ‘வைரலாகும்' வாய்ப்பை நாங்கள் அனுமதிப்பதில்லை. எங்கள் உள்ளடக்கத் தளமான, Discover, சரிபார்க்கப்பட்ட ஊடகப் பதிப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்கிகளிடமிருந்து மட்டுமே உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது. எங்கள் பொழுதுபோக்கு தளமான, Spotlight, உள்ளடக்கமானது அதிக பார்வையாளர்களைச் சென்றடைவதற்கு முன், மனித மதிப்பாய்வைப் பயன்படுத்தி முன்கூட்டியே மதிப்பிடுகிறது.
Snapchat செயலியில், குழு அரட்டைகள் வரம்பிடப்பட்டுள்ளன. எங்கள் தளத்தில் ஏற்கனவே உறுப்பினராக இல்லாத எவராலும் இந்த குழுக்களைக் கண்டறிய முடியாது. 1: 1 அரட்டைகள் போல, சேர விரும்பும் குழுவில் உங்களுக்கு ஏற்கெனவே நண்பர்கள் இல்லாவிட்டால், உங்களால் அந்தக் குழு உரையாடலில் சேர முடியாது.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமை
Snapchat செயலியில் பொது கருத்துகளையோ அல்லது சுயவிவர புகைப்படங்களைத் தேடவோ முடியாது -- இது செயலியில் தெரியாத நபர்களால் தொடர்பு கொள்ளப்படுவதை வேண்டுமென்றே மிகவும் கடினமாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வழிகளில் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக 18 வயதிற்குட்பட்ட Snapchat பயனர்களின் பாதுகாப்புக்கு உதவும் வகையில் அவர்கள் பொது சுயவிவரத்தை உருவாக்குவதை நாங்கள் அனுமதிப்பதில்லை, மேலும் Snap செயலியில் புதிய நண்பர்களைத் தேடும்போது, நாங்கள் அந்தப் பயனரின் உண்மையான புகைப்படத்தை அல்ல, Bitmoji அவதாரை மட்டுமே காண்பிப்போம்.
நீங்கள் வேறொரு பயனருடன் உரையாடுவதற்கு முன், இருவழி தொடர்பு அங்கீகாரம் தேவைப்படும், ஏனெனில் நட்பு பரஸ்பரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். இது ஒருவர் மற்றொருவரை பின்தொடர்வதற்காகவோ, அல்லது அனுமதி இல்லாமல் அல்லது அழைப்பு இல்லாமல் தெரியாத நபர்கள் நம் வாழ்வில் நுழைவதற்காகவோ இல்லை. Snap வரைபடம் போன்ற Snapchat செயலியில் மற்ற அம்சங்களுக்கும் கூட இது உண்மையானதே. நீங்கள் வரைபடத்தில் எவரையும் பார்க்க முடியாது, மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாக இருந்தால் தவிர அவர்களால் உங்களைப் பார்க்க முடியாது, அதோடு உங்கள் இருப்பிடத்தைப் பகிர்வது உங்களின் விருப்பத்திற்குரியது.
எங்கள் அம்சங்களை இயல்பாகவே தனிப்பட்டதாக்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம், ஏனெனில் நிஜ வாழ்க்கையைப் போலவே, ஒவ்வொரு பயனர்களும் எந்தத் தகவலை, எப்போது பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்பதை அவர்களே தேர்வு செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். எடுத்துக்காட்டிற்கு, எங்கள் Snap வரைபடத்தை முதலில் பயன்படுத்தும்போது, அனைத்து பயனர்களுக்கும் இருப்பிடப் பகிர்வு இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை முடிவு செய்யும் விருப்பத்தை கொண்டுள்ளனர் - ஆனால் தெரியாதவர்களோடு பகிர முடியாது.
எங்கள் பயனர்களிடமிருந்து குறைவான தரவை சேகரிக்கும் மற்றும் குறுகிய நாட்களுக்கு அந்தத் தரவை தக்கவைக்கும் இலக்கை கொண்ட தயாரிப்புகளை நாங்கள் வடிவமைக்கிறோம். ஏனென்றால், எங்கள் சேவையை இலவசமாக வழங்குவதற்கு விளம்பரம் அவசியம் என்றாலும், மக்களின் நட்பின் தனியுரிமையை மதித்து, அவர்களின் உறவுகள் ஒரு விற்பனை பொருளாக மாற்றப்படுவதாக அவர்கள் உணராமல், வணிகப் பங்குதாரர்களுக்கு மதிப்பை வழங்க முடியும் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.
செயலியில் உள்ள கருவிகளை பயன்படுத்தி, நாங்கள் நேரடியாக அவர்களை உறுத்தும் உள்ளடக்கத்தை புகாரளிக்கும் பயனர்களுக்கான விரைவான மற்றும் எளிதான வழிகளை வழங்குகிறோம், எனவே எங்கள் பிரத்யேகமான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவினரால் விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
எங்கள் வழிகாட்டுதல்கள் மற்றும் அமலாக்கம்
முதல் நாளில் இருந்தே தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை பரப்ப நினைப்பவர்களின் ஊக்கங்களை தவிர்க்க Snapchat செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் சமூக வழிகாட்டுதல்களில் சதி கோட்பாடுகள், தவறான மருத்துவக் கூற்றுகள் மற்றும் குடிமைச் செயல்முறைகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகள் உட்பட, தீங்கு விளைவிக்கக்கூடிய தவறான தகவல்களைப் பரப்புதல், கொடுமைப்படுத்துதல், வெறுக்கத்தக்க பேச்சு ஆகியவற்றை நீண்டகாலமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
எங்கள் தளத்தை தவறாகப் பயன்படுத்துவதை நாங்கள் பொறுத்துக்கொள்ளமாட்டோம், மேலும் எங்கள் வழிகாட்டுதல்களை திறம்பட வடிவமைத்து செயல்படுத்துவதற்கான பிரத்யேக உள்கட்டமைப்பு எங்களிடம் உள்ளது. நாங்கள் இதை ஒரு எளிய வழியில் செய்கிறோம்: எங்கள் கொள்கைகளை மீறும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நாங்கள் அந்த உள்ளடக்கத்தை அகற்றுவோம். நாங்கள் புண்படுத்தும் உள்ளடக்கத்தை லேபிளிடவோ அல்லது பிரபலங்களுக்கு எந்தவொரு விதிவிலக்கும் அளிக்கவோமாட்டோம் - எங்கள் வழிகாட்டுதல்கள் அனைத்து Snapchat பயனர்களுக்கும் சமமாக பொருந்தும்.
மீறும் உள்ளடக்கம் சிறார்களின் பாதுகாப்பை பாதிப்பதாக இருக்கும் பட்சத்தில், அவற்றை காணாமல் போன மற்றும் சுரண்டலுக்குள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கு (NCMEC) புகார் செய்வோம், மேலும் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து செயல்படவும் ஆதரிக்கவும் குறிப்பிட்ட செயல்முறைகள் உள்ளன.
இது எங்களை முழுமையடையச் செய்யாது, மேலும் தகவல்தொடர்புக்கு உதவும் எந்த செயலியும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளது. Snapchat செயலியின் பாதுகாப்பைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் எங்கள் கருவிகளையும் மற்றும் வழிமுறைகளையும் நாங்கள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். இடர்களையும் எங்கள் சமூகத்தைச் சிறப்பாகப் பாதுகாப்பதற்காக எங்கள் தொழில்நுட்பத் திறன்களையும் நடைமுறைகளையும் மேம்படுத்துவது எப்படி என்றும் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம். இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, தவறான நபர்களை விட ஒரு படி மேலே இருக்கக்கூடிய வழிகள் குறித்து பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணர்களிடமிருந்து நாங்கள் தொடர்ந்து வழிகாட்டுதலைப் பெறுகிறோம். இந்த வலைப்பதிவில் இந்த தலைப்புகளில் உள்ள பல விஷயங்களை ஆழமாக ஆராயப்போகிறோம், இதன் மூலம் இந்தச் சிக்கல்களைப் பற்றி நாங்கள் எப்படி யோசிக்கிறோம், அவற்றைத் தீர்க்க நாங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பற்றியும் நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
ஒரு பெற்றோராக, நான் எனது குழந்தைகளுடன் இந்த உரையாடல்களில் நிறைய நேரம் செலவிடுகிறேன், எனது நண்பர்களுடன் அவர்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் தொழில்நுட்பம் மற்றும் தளங்களின் பங்கைக் குறித்து வாதிடுகிறேன், மேலும் Snapஇல் எங்கள் வேலையின் ஒரு பகுதியாக நான் எங்களின் பல பங்குதாரர்களுடன் பேசுகிறேன். இந்தப் பதிவு, சில அடிப்படைகளைப் பற்றிய உட்பார்வையைத் தரும் என்று நம்புகிறேன், மேலும் எங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றின் விரிவான விளக்கத்திற்கும், நலமான, பாதுகாப்பான மற்றும் வேடிக்கையான சூழலில் Snapchat பயனர்களை இணைக்க உதவும் கூடுதல் ஆதாரங்களுக்கும் எங்கள் பெற்றோர் வழிகாட்டியைப் பார்க்க பெற்றோர்களையும் குடும்ப உறுப்பினர்களையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
ஜென்