Snapchat, 16+ வயதான டீனேஜர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்புகள், கல்வி மற்றும் புதிய பெற்றோர் கருவிகளுடன் பொறுப்புள்ள பொது பகிர்வுக்கான அறிமுகத்தை வழங்குகிறது
செப்டம்பர் 10, 2024
Snapchat-இல் தாங்கள் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பரந்த பார்வையாளர்களுடன் பகிர விரும்பும் 16 மற்றும் 17 வயதான டீனேஜர்களுக்கு ஒரு புதிய அறிமுக அனுபவத்தை வரையறுக்கப்பட்ட சந்தைகளில் நாங்கள் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளோம். எங்கள் சமூகம் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில், மூத்த டீனேஜர்கள் தங்களின் தகவல் பக்கத்தில் சிறந்த பாதுகாப்புகளுடன் உருவாக்கப்பட்ட பொதுவில் காட்டப்படும் புதிய உள்ளடக்கப் பக்கத்தில் உள்ளடக்கத்தைப் பதிவிட முடியும். இந்தத் திறன்கள் படிப்படியாக எங்கள் சமூகம் முழுமைக்கும் விரிவாக்கப்படும்.
16+ வயதான Snapchat பயனர்களுக்கு உள்ளடக்கத்தைப் பதிவிடுதல் எப்படி வித்தியாசப்படுகிறது:
Snapchat-இல் உள்ளடக்கத்தைப் பதிவிடுவதற்கு முதன்மையாக இரண்டு வழிகள் உள்ளன: எங்கள் தனித்துவ கதை வடிவம் மற்றும் குறுகிய வடிவமான ஸ்பாட்லைட் வீடியோக்கள்.
இப்போது 16+ வயதான தங்களின் படைப்புத்திறனைப் பகிர விரும்பும் Snapchat பயனர்கள், பொதுக் கதையைப் பதிவிடலாம் அல்லது அவர்களின் தகவல் பக்கத்திற்குள் உள்ள கூடுதல் பாதுகாப்புகளைக் கொண்ட பொதுவில் காட்டப்படும் உள்ளடக்கப் பக்கத்திற்கு இணைப்புக் கொடுத்து ஸ்பாட்லைட்டில் வீடியோவைப் பகிரலாம். அதில் அவர்களுக்குப் பிடித்தமான பதிவுகளைக் காட்சிப்படுத்த அவர்களின் கதைகள் மற்றும் ஸ்பாட்லைட்களைக் சேமிக்கலாம்.
ஒவ்வொரு Snapஉம் எங்கு பகிரப்பட வேண்டும், அதை யார் பார்க்கலாம், அது அவர்களின் தகவல் பக்கத்தில் சேமிக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க உதவும் பதிவிடுதல் விருப்பங்களை வழங்குவதன் மூலம் Snapchat பயனர்களுக்கு அவர்கள் உருவாக்கும் உள்ளடக்கத்தின் ஒவ்வொரு பகுதி மீதும் கட்டுப்பாட்டை வழங்குகிறோம். Snapchat-இல் பொதுவில் அல்லது தனிப்பட்ட முறையில் பதிவிடுவதா என்ற தேர்வு எப்போதும் வழங்கப்படுகிறது.
பொறுப்புள்ள முறையில் உள்ளடக்கத்தைப் பொதுவில் பகிர்வது தொடர்பான அறிமுகத்தை மூத்த டீனேஜர்கள் பெறும் வகையில் கண்டிப்பான தடுப்பாக இதனை உருவாக்கியுள்ளோம்:
உண்மையான நண்பர்களின் பங்கேற்பைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: இயல்புநிலையாக, Snapchat பயனர்கள் அனைவரும் பரஸ்பரம் ஏற்றுக்கொண்ட நண்பர்கள் அல்லது அவர்களின் தொலைபேசியில் சேமிக்கப்பட்ட தொடர்புகளை மட்டுமே நேரடியாகத் தொடர்புகொள்ள முடியும். பொதுவில் பகிரும் விருப்பங்களின் மூலம், மூத்த டீனேஜர்கள் அவர்களின் பொதுக் கதைகளுக்கு அவர்களைப் பின்தொடர்பவர்களிடமிருந்து கதை பதில்களைப் பெறலாம், ஆனால் அந்த பதில்களிலிருந்து நேரடி அரட்டையில் ஈடுபட முடியாது. பதில்கள் படைப்பாளரை அடையும் முன்பாக வடிகட்டப்படும் - 16 மற்றும் 17 வயதான Snapchat பயனர்களுக்கு வடிகட்டுதல் இன்னும் கடுமையாக இருக்கும். உரையாடல்களை மரியாதையுடனும் வேடிக்கையாகவும் வைக்க அவர்களுக்கு உதவும் வகையில் Snapchat பயனர்கள் ஒட்டுமொத்தமாக பதில்களை அணைக்க அல்லது பல்வேறு சொற்களைத் தடைசெய்வதற்கான விருப்பத்தேர்வை கொண்டிருப்பார்கள். பின்தொடர்பவர்களிடமிருந்து வரும் இந்தக் கதை பதில்கள் Snapchat பயனர்களின் அரட்டை ஊட்டத்தில் உள்ள அந்தரங்க உரையாடல்களில் இருந்து முழுமையாகப் பிரித்து வைக்கப்படும், பொதுவில் பகிர்ந்த உள்ளடக்கம் டீனேஜரின் உண்மை நண்பர் நெட்வொர்க்கிற்கு வெளியே உள்ள பெரியவர்களிடமிருந்து வரும் தேவையற்ற நண்பர் கோரிக்கைக்கான வழியாக மாறுவதிலிருந்து தடுக்க கூடுதல் பாதுகாப்புகளையும் நாங்கள் செயல்படுத்தியுள்ளோம்.
வரம்பிடப்பட்ட விநியோகம்: 16- மற்றும் 17-வயதில் உள்ளவர்கள் பதிவிடும் பொதுக் கதைகள் அவர்களின் நண்பர்கள் அல்லது பின்தொடர்பவர்களாக உள்ள Snapchat பயனர்கள் மற்றும் பரஸ்பர நண்பர்களைக் கொண்ட பிற Snapchat பயனர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படும். Snapchat பயனர்களுக்கு அவர்களுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தின் பிரத்தியேக அனுபவத்தை வழங்கும் எங்கள் செயலியின் “Discover” பிரிவின் பரந்த சமூகத்திற்கு இந்தப் பொதுக் கதைகள் விநியோகிக்கப்படாது.
குறைந்த அளவீடுகள்: 16 - 17 வயதான Snapchat பயனர்கள் தங்களின் கதைகள் அல்லது ஸ்பாட்லைட்களை எத்தனை பேர் "பிடித்தவை" ஆகக் குறித்தனர் என்பதைப் பார்க்க இயலாது, இது அளவீடுகளைப் பெற்று பொதுவில் பிரபலமடைவதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தாமல் படைப்புத்திறனில் கவனம் செலுத்த வழிவகுக்கிறது.
முன்கூட்டியே மீளாய்வுசெய்தல்: மூத்த டீனேஜர்களுக்கு Snapchatஇன் உள்ளடக்க வழிகாட்டுதல்கள் குறித்த அறிமுகம் தேவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மற்றும் மிக ஆழ்ந்து சிந்திக்காமல் ஏதேனும் ஒன்று பதிவிடுவதில் இருந்து Snapchat பயனர்களைப் பாதுகாக்க விரும்புகிறோம். ஸ்பாட்லைட் வீடியோக்கள் பரந்த அளவில் பரிந்துரைக்கப்படும் முன்பு மனித மற்றும் இயந்திர மீளாய்வைப் பயன்படுத்தி முன்கூட்டியே மீளாய்வு செய்கிறோம்.
பெற்றோர் கருவிகள்: விரைவில், எங்கள் செயலியினுள் உள்ள பெற்றோர் கருவிகள் தளமான குடும்ப மையத்தில், பெற்றோர்கள் தங்களின் 16- மற்றும் 17- வயது டீனேஜர்கள் பொதுக் கதையை வெளியிட்டுள்ளார்களா அல்லது தங்களின் பக்கத்தில் ஏதேனும் உள்ளடக்கத்தைப் பொதுவில் சேமித்துள்ளார்களா என்பதைப் பார்க்க முடியும். பொதுவில் உள்ளடக்கத்தைப் பகிர்வது தொடர்பான முக்கியமான உரையாடல்களை மேற்கொள்ளவும் அவர்களுக்குப் பொருத்தமானது எது என்பதை ஆலோசிக்கவும் குடும்பங்களுக்கு உதவ இந்தப் புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், புதிய வேலை தொடர்பான அறிவிப்பு அல்லது சமீபத்திய குடும்பச் சுற்றுலாவின் Snapகள் போன்ற உள்ளடக்கங்களைப் பொதுவில் பகிர்வது நமது அன்றாட அனுபவத்தின் பொதுவான பகுதியாக மாறிவிட்டது. பரந்துபட்ட டிஜிட்டல் உரையாடல்களில் பங்கேற்று, தங்கள் குரலை, படைப்பாற்றலை, திறமைகளைப் பகிர இளைஞர்கள் பேரார்வம் கொண்டுள்ளதை நாங்கள் அறிவோம்.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமைத் தரநிலைகளைப் பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு உதவும் 16+ வயதுடைய Snapchat பயனர்களுக்காகக் கவனத்துடன் வடிவமைக்கப்பட்ட கருவிகளுடன் சுய வெளிப்பாட்டை நாங்கள் வலுப்படுத்துகிறோம், எங்கள் பரிசோதனைகளில் இருந்து கற்றுக்கொண்டவற்றின் அடிப்படையில் இந்த அனுபவத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவோம்.