எங்களின் சமூகத்திற்கு மேலும் அதிகமான விளம்பரத் தேர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை வழங்குதல்
ஜூன் 30, 2021
எங்களின் சமூகத்திற்கு மேலும் அதிகமான விளம்பரத் தேர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை வழங்குதல்
ஜூன் 30, 2021
Snapchat என்பது சுய வெளிப்பாடு, கண்டுபிடிப்பு மற்றும் தேடலுக்கான ஒரு இடம். தொகுக்கப்பட்ட உயர்தர உள்ளடக்கம், தயாரிப்பு கண்டுபிடிப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் Snapchat-ஐ அனைவரும் அணுகும் வகையில் வைத்திருக்கும் வழிகளில் விளம்பரமும் ஒன்றாகும். எங்கள் சமூகத்திற்கு சிறந்த அனுபவத்தை வழங்க விரும்புகிறோம், மேலும் Snapchat பயனர்களுக்கு காட்டப்படும் விளம்பரங்கள் வேடிக்கையான, சுவாரஸ்யமான மற்றும் தொடர்புடையவையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்!
இதை செயல்படுத்த, Snapchat பயனர்களுக்கு அவர்களின் விளம்பர மற்றும் தரவு பயன்பாடு விருப்பங்களின் மீது மேலும் கட்டுப்பாட்டை கொடுக்கும் சில செயலியில் உள்ள அம்சங்கள் மற்றும் கல்வி வளங்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
விளம்பர முன்னுரிமைகள்
Snapchat மிகவும் பொருத்தமான, பயனுள்ள விளம்பரங்களை Snapchat பயனர்களுக்கு வழங்க உதவ பிற வலைதளங்கள் மற்றும் சேவைகளில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் Snapchat பயனர்கள் பயன்படுத்தும் சேவையில் விளம்பரங்களைக் காட்ட விளம்பரதாரர்கள் மற்றும் பிற கூட்டாளர்களை அனுமதிக்கிறோம். இந்தத் தகவலின் அடிப்படையில் விளம்பரங்கள் அவர்களுக்கு காட்டப்பட்ட வேண்டுயாம் என Snapchat பயனர்கள் விரும்பினால், அவர்கள் செயலி அமைப்புக்களில் தங்கள் விளம்பர முன்னுரிமைகளை எளிதாக சரியமைக்கலாம். பல்வேறு விளம்பர முன்னுரிமைகள் பற்றிய மேலும் அறிய இங்கே பாருங்கள்.
விளம்பரத் தலைப்புத் தேர்வுகள்
Snapchat பயனர் ஒரு குறிப்பிட்ட விளம்பர தலைப்பின் விளம்பரங்களைப் பார்ப்பதை இயல்பாக உணராவிட்டால், எங்களுக்கு அதைத் தெரியப்படுத்துவதை அவர்களுக்கு சுலபமாக்குகிறோம். மது மற்றும் அரசியல் விளம்பரம் போன்ற முக்கியமான விளம்பர தலைப்புகளில் இருந்து விலகுவதற்கான திறனை நாங்கள் இப்போது வழங்குகிறோம், மேலும் சூதாட்ட விளம்பரங்களுக்கும் இந்த செயல்பாட்டை விரைவில் நீட்டிப்போம்.
விளம்பரத்தைப் புகாரளிப்பது
Snapchat பயனர் ஒரு விளம்பரத்தைப் பார்க்கும் போது, அது குறித்து ஏதோ ஒரு புகார் அளிக்க நினைக்கலாம். Snapchat பயனர்களுக்கு உள்ளடக்கம் பிடித்திருந்தாலோ பிடிக்காவிட்டாலோ அல்லது அது மோசடியானது அல்லது கவலை தருவது என்று நினைத்தால் அவர்கள் எளிதாகப் புகாரளிக்க முடியும். Snap-இல் உள்ள எங்கள் பிரத்யேக குழு நாள் முழுவது பணி புரிகிறது மற்றும் எங்கள் கொள்கைகளை மீறும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கிறது!
விளம்பரங்களை மறைப்பது
Snapchat பயனர்கள் பொருத்தமற்ற, தொடர்பற்ற அல்லது எரிச்சலூட்டுவதாக நினைக்கும் தனிப்பட்ட விளம்பரங்களுக்கு, எதிர்காலத்தில் அவர்களுக்கு அது தோன்றாத வகையில் எளிதாக விளம்பரங்களை மறைக்கலாம்.
Snapchat பயனர்கள் விளம்பரங்களை எளிதில் புகாரளிக்க அல்லது மறைக்க முடியும்
செயலி கண்காணிப்பு வெளிப்படைத்தன்மை பற்றிய கல்வி வளங்கள்
பாதுகாப்பான ஸ்னாப்ஷாட் டிஜிட்டல் கல்வியறிவு உள்ளடக்க தொடரின் ஒரு பகுதியாக, Snapchat பயனர்கள் Apple இன் செயலி கண்காணிப்பு வெளிப்படைத்தன்மையைப் (ATT) புரிந்து கொள்ள உதவும் ஒரு புதிய Discover அத்தியாயத்தை எங்கள் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம். ATT என்பது ஒரு புதிய தனியுரிமை கட்டமைப்பாகும், இது நுகர்வோர் தங்கள் தனிப்பட்ட தரவை செயலி மூலம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் திறனை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி அத்தியாயமானது, ப்ராம்ட் எவ்வாறு செயல்படுகிறது, அவர்கள் விரும்பும் தரவைப் பயன்படுத்துவதற்கான தேர்வை எவ்வாறு செய்வது மற்றும் அவர்களின் தேர்வு Snapchat இல் அவர்களின் விளம்பர அனுபவத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படைகளை கோடிட்டுக் காட்டுகிறது.
அடுத்தது என்ன?
எளிதான மற்றும் வெளிப்படையான விளம்பர விருப்பத்தேர்வுகள் மற்றும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தலைப்புகளில் பொருத்தமான வளங்களின் மூலம் Snapchat சமூகத்திற்கான தனியுரிமை மற்றும் தேர்வுக்கு நாங்கள் தொடர்ந்து முன்னுரிமை அளிப்போம். மேலே உள்ள கருவிகள் மற்றும் வளங்கள் எங்கள் சமூகத்தை பாதுகாப்பாகவும் தகவல் தெரிந்தவர்களாகவும் வைத்திருக்க எங்களின் சில முயற்சிகளைக் குறிக்கின்றன. இந்த மற்றும் எதிர்கால புதுப்பிப்புகள் எங்கள் சமூகம் செய்யக்கூடிய விளம்பரம் மற்றும் தரவுப் பயன்பாட்டுத் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மற்றும் Snapchat பயனர்கள் அவர்கள் சிறந்ததாக கருதும் தேர்வுகளை செய்ய ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.