Privacy, Safety, and Policy Hub

எங்கள் செயலியில் உள்ள பெற்றோருக்கான கருவிகளை விரிவாக்குதல்

ஜனவரி 11, 2024

Snap-இல், பதின்ம வயதினர் Snapchat-ஐப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை ஆதரிக்க பெற்றோருக்கு கூடுதல் கருவிகளையும் வளஆதாரங்களையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

2022-ஆம் ஆண்டில், நாங்கள் குடும்ப மையத்தைத் தொடங்கினோம், இது Snapchat-இல் பதின்ம வயதினர் எந்தெந்த நண்பர்களுடன் பேசுகிறார்கள் என்பதைப் பெற்றோர் காண்பதற்கும், ஏதேனும் கவலைகளை இரகசியமாகப் புகாரளிப்பதற்கும், மேலும் உள்ளடக்கக் கட்டுப்பாடுகளை அமைப்பதற்கும் அனுமதிக்கின்ற பெற்றோருக்கான கருவிகளின் தொகுப்பாகும் - இவை அனைத்தும் Snapchat-இல் பதின்ம வயதினரைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் தங்கள் நண்பர்களுடன் ஆஃப்லைனில் தொடர்புகொள்வதைப் போன்ற அதே வழியில் தொடர்புகொள்ள உதவும் வகையில் Snapchat உருவாக்கப்பட்டது, மேலும் குடும்ப மையம் பெற்றோருக்கும் பதின்ம வயதினருக்கும் இடையிலான நிஜ உலக உறவுகளின் இயங்கியலைப் பிரதிபலிக்கிறது - அங்கு பெற்றோர்கள் தங்கள் பதின்ம வயதினரின் தனிப்பட்ட தகவல்தொடர்புகளின் தனியுரிமையை மீறாமல் அவர்கள் யாருடன் நேரம் செலவிடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். குடும்ப மையத்தை உருவாக்க, நாங்கள் குடும்பங்களுடனும் ஆன்லைன் பாதுகாப்பு நிபுணர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றி, அவர்களின் கருத்துக்களைப் பயன்படுத்தி, கூடுதல் அம்சங்களுடன் அதைத் தொடர்ந்து புதுப்பிக்கிறோம். 

இன்று, பெற்றோர்களுக்கு அதிக தெரிவுநிலையை வழங்குவதற்கும், ஆன்லைன் பாதுகாப்பைப் பற்றி பயனுள்ள உரையாடல்களை மேற்கொள்ள அவர்களுக்கு மேலும் அதிகாரம் அளிப்பதற்கும் விரிவாக்கப்பட்ட குடும்ப மையம் அம்சங்களை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். வரும் வாரங்களில், நாங்கள் பின்வருவனவற்றை நடைமுறைப்படுத்த உள்ளோம்: 

அவர்களின் பதின்ம வயதினரின் அமைப்புகளில் தெரிவுநிலை: நாங்கள் பதின்ம வயதினருக்கான முக்கியப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அமைப்புகளை இயல்பாகவே கடுமையான தரநிலைகளுக்கு இயல்புநிலையில் அமைத்திருக்கிறோம். இப்போது, பெற்றோரால் பின்வருனவற்றைக் காண இயலும்:

  • அவர்களின் பதின்ம வயதினரின் கதை அமைப்புகள்: பதின்ம வயதினர் தங்கள் கதையைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் சிறிய குழுவைத் தேர்ந்தெடுக்க முடியும்.

  • அவர்களின் பதின்ம வயதினரின் தொடர்பு அமைப்புகள்: snapchat பயனர்களை அவர்கள் நண்பராகச் சேர்த்தவர்களால் அல்லது அவர்களின் தொலைபேசித் தொடர்புகளால் மட்டுமே தொடர்புகொள்ள முடியும்.

  • அவர்களின் பதின்ம வயதினர் Snap வரைபடத்தில் தங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டால்: Snap பயனர்கள் தங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கவும், சுவாரஸ்யமான இடங்களைக் கண்டறியவும், உலகம் முழுவதும் உள்ள Snap பயனர்கள் சமர்ப்பித்த உள்ளடக்கத்தைப் பார்க்கவும் Snap வரைபடம் அனுமதிக்கிறது. Snap பயனர்கள் தங்கள் இருப்பிடத்தைப் பகிரத் தேர்வுசெய்ய வேண்டும் - மேலும் தங்கள் இருப்பிடத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள மட்டுமே அவர்களுக்கு விருப்பத்தேர்வு உள்ளது.

AI-க்கான பெற்றோர் கட்டுப்பாடுகள்: பெற்றோர் தங்கள் பதின்ம வயதினரின் அரட்டைகளுக்குப் பதிலளிக்க, எங்களின் AI-ஆல் இயக்கப்படும் சாட்போட்டான My AI-க்கான திறனை இப்போது அவர்களால் கட்டுப்படுத்த இயலும். பொருத்தமற்ற அல்லது தீங்கு விளைவிக்கும் பதில்வினைகளுக்கு எதிரான பாதுகாப்புகள், Snap பயனர்கள் மீண்டும் மீண்டும் சேவையைத் தவறாகப் பயன்படுத்தினால் தற்காலிகப் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் மற்றும் வயது-விழிப்புணர்வு உட்பட, My AI-இல் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட பாதுகாப்புகளை இந்த அம்சம் உருவாக்குகிறது.

குடும்ப மையத்தை எளிதாக அணுகலாம்: Snapchat பற்றி அறிமுகமில்லாத பெற்றோருக்கு, குடும்ப மையத்தை எளிதாகக் கண்டுபிடிக்கும் வகையில் உருவாக்குகிறோம். இப்போது, பெற்றோர் தங்கள் சுயவிவரத்தில் இருந்தும் அல்லது பெற்றோரின் சுயவிவரத்தின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள அமைப்புகளுக்குச் செல்வதன் மூலமும் குடும்ப மையத்தை அணுகலாம். Snapchat-க்குப் புதியவர்களாக இருக்கக்கூடிய பெற்றோர்கள் மற்றும் பதின்ம வயதினர் இருவரும் எளிதாகக் குடும்ப மையத்தைக் கண்டுபிடித்து அதில் சேர உதவுவதே எங்கள் குறிக்கோள்.

Snapchat-ஐ நம் முழு சமூகத்திற்கும் வேடிக்கையான மற்றும் பாதுகாப்பான சூழலாக மாற்றுவதற்கு உதவ, பெற்றோர் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு நிபுணர்களுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.

செய்திக்குத் திரும்புக