Privacy, Safety, and Policy Hub

இணையவழி வெறுப்பைச் சமாளிப்பதற்கான எங்களின் பங்கைச் செய்து கொண்டிருக்கிறோம்

ஜூலை 16, 2021

யூரோ 2020 இறுதி போட்டிக்குப் பிறகு பல இணையவழி தளங்களில் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர்களை நோக்கிக் கூறப்பட்ட இனவாதப் பேச்சுகளால் நாங்கள் வருத்தமடைந்து திகைப்புற்றுள்ளோம். Snapchat-இல் இனவெறி, வெறுப்புப் பேச்சு, துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் தற்போதைய பணியின் மேலோட்டத்தையும் எங்கள் சமூகத்திற்கு கற்பிக்க நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளையும் வழங்க விரும்புகிறோம்.

வெறுப்புப் பேச்சு அல்லது துஷ்பிரயோகம் பரவுவதற்கான வாயப்பைத் தடுக்கும் தளத்தை வடிவமைக்க நாங்கள் கடினமாக வேலை செய்துள்ளோம். Snapchat பிற பாரம்பரிய சமூக ஊடங்கங்களை விட வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்குத் தெரியாத நபர்களை விட தங்கள் உண்மையான நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் மேலும் அர்த்தமுள்ள வகையிலும் உண்மையாகவும் தொடர்புகொள்ள ஒரு வழியை உருவாக்க இந்த செயலை கேமராவைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரிபார்க்கப்படாத பதிப்பாளர்கள் அல்லது வேறு நபர்கள் வெறுப்பான அல்லது தவறான உள்ளடக்கத்தை ஒளிபரப்புவதற்கான வாய்ப்புள்ள திறந்த பொது செய்தி ஊட்டத்தை Snapchat வழங்குவதில்லை. செய்தி மற்றும் பொழுதுபோக்குக்கான எங்கள் Discover தளம் மற்றும் சமூகத்தின் சிறந்த Snapகளுக்கான எங்களது ஸ்பாட்லைட் தளம் இரண்டும் நிர்வகிக்கப்படும் மற்றும் நடுவருடன் உள்ள சூழல்கள் ஆகும். இதன் அர்த்தம் Discover அல்லது ஸ்பாட்லைட்டில் உள்ள உள்ளடக்கம் கடுமையான உள்ளடக்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை ஏற்கும் எங்களது தொழில்முறை ஊடக கூட்டாளர்கள் மூலம் வழங்கப்படுகிறது அல்லது அதிக Snapchat பயனர்களுக்கு பகிரப்படும் முன் மனித மதிப்பாய்வைப் பயன்படுத்தி முன்கூட்டியே கட்டுப்படுத்தப்பட்ட பயனர் உருவாக்கிய உள்ளடக்கமாக இருக்கும். மேலும் துஷ்பிரயோகத்திற்கு வழிவக்கும் பொதுக் கருத்துக்களை Snapchat செயல்படுத்தாது.

இனவெறியை எங்கள் தளத்திலோ அல்லது தளத்திற்கு வெளியிலோ தூண்டுபவர்களுடன் இணைக்கப்பட கணக்குகளை நாங்கள் விளம்பரப்படுத்த மாட்டோம் என்பதை நாங்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம். மிகக் குறிப்பாக 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் Discover-இல் ஜனாதிபதி டிரம்பின் கணக்கை விளம்பரப்படுத்துவதை நிறுத்த முதலில் முடிவு செய்ததன் மூலம் நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம்.

எங்கள் தளத்தில் உள்ள பொதுப் பகுதிகளிலிருந்து எங்கள் கொள்கைகளை மீறும் செயல்பாட்டைத் தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உதவுகின்றன. 2018 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்தின் வெறுப்புப் பேச்சு குறித்த நடத்தை விதிகளுக்கு Sanap கையொப்பமிட்டது, அது அதன் கண்காணிப்புச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக ஆன்லைன் வெறுப்பைப் புகாரளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 39 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளை சேகரிக்கிறது.. விதிகளுடன் இணக்கம் மீதான ஆணையத்தின் சமீபத்திய இரண்டு அறிக்கைகளில் Snapchat இல் வெறுப்புப் பேச்சு குறித்த புகார்கள் எதுவும் இல்லை. சமீபத்திய ஆறு மாத அறிக்கை காலத்தில் ஐக்கிய ராச்சியத்திற்கு நாங்கள் 6734 கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளோம் என எங்கள் சொந்த வெளிப்படைத்தன்மை அறிக்கை காட்டுகிறது. இந்த உள்ளடக்கத்தில் பெரும்பாலானவை தனிப்பட்ட Snapகள் குறித்து புகாரளிக்கின்றன, பொது உள்ளடக்கப் பகுதிகளில் அல்ல. இதன் மூலம் பரந்த தாக்கத்தைக் குறைக்கிறது.

Snapchat இன் தனிப்பட்ட தகவல்தொடர்பு தரப்பில் சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை எதிர்த்துப் போராடவும் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். நாங்கள் செயலினுள் பயன்படுத்த எளிதான புகாரளிக்கும் கருவிகளை வழங்குகிறோம். இதன் மூலம் Snapchat பயனர்கள் எந்தவொரு சட்டவிரோத அல்லது தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் எங்களுக்குத் தெரிவிக்கலாம். எங்கள் உலகளாவிய 24/7 அறக்கட்டளை பாதுகாப்பு அணி அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து மீறும் கணக்குகளுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கையை எடுக்கிறது. இனவெறி தவறான பேச்சுகள் அல்லது இனபடி வார்ப்புகளைக் குறிக்கும் இமோஜிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இனவெறி மொழி குறித்த பல்வேறு சமிக்ஞைகளை அடையாளம் காண இந்த அணி பயிற்சி பெற்றுள்ளது. சாத்தியமான துஷ்பிரயோகத்தைப் பிரதிபலிக்கும் வளர்ந்து வரும் போக்குகளைப் புரிந்துகொள்வதற்காக, மற்றும் இந்தப் பகுதியில் எங்கள் கொள்கைகளை தொடர்ந்து உருவாக்க இந்த உள்நுணுக்கங்களைப் பயன்படுத்தவும்.எமோஜிகள் மற்றும் உரை அடிப்படையிலான தலைப்புகள் போன்ற பிற வெளிப்பாடுகளைப் பயன்படுத்துவதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.

எங்கள் சமூகத்திற்கு கற்பிப்பது உள்ளிட்ட நாங்கள் செய்யக்கூடியது அதிகம் உள்ளது, மேலும் இணைப்பு நிஜமாக்கம் மூலம் கருப்பு பிரிட்டிஷ் கதைகளை மேன்மைபடுத்துவதற்கான திட்டம் ஒன்றில் நாங்கள் தற்சமயம் பணியாற்றி வருகிறோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எங்களின் முதல் முயற்சியானது Kick It Out மற்றும் Kugali எனப்படும் கறுப்பின படைப்பாளிகளுடன் இணைந்து இங்கிலாந்தின் நான்கு சிறந்த கறுப்பின கால்பந்து வீரர்களை நினைவுகூரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு இணைப்பு நிஜமாக்க (AR) அனுபவமாகும்.

இறுதியாக, Snapchat-இல் பாகுபாடு, இனவெறி அல்லது துஷ்பிரயோகத்திற்கு இடமில்லை. இந்த உள்ளடக்கம் வெளிப்படாமல் தடுக்க, மேலும் இது ஏற்படும் போது விரைவான திறன்மிக்க நடவடிக்கை எடுக்க நாங்கள் கடினமாக உழைப்போம்.

-ஹென்றி டர்ன்புல், UK மற்றும் நார்டிக்ஸ் பொதுக் கொள்கையின் தலைவர்

செய்திக்குத் திரும்புக