பிரேசில் தனியுரிமை அறிவிப்பு

அமலுக்கு வரும் தேதி: செப்டம்பர் 30, 2021

பிரேசிலில் உள்ள பயனர்களுக்காக இந்த அறிவிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பிரேசிலில் உள்ள பயனர்கள் பிரேசிலிய சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சில தனியுரிமை உரிமைகளைக் கொண்டுள்ளனர், இதில் Lei Geral de Proteção de Dados Pessoais (LGPD) அடங்கும். எங்கள் தனியுரிமை கோட்பாடுகள் மற்றும் நாங்கள் வழங்கும் தனியுரிமை கட்டுப்பாடுகள் அனைத்து பயனர்களுக்கும் இந்த சட்டங்களுக்கு ஏற்ப இருக்கும்—இந்த அறிவிப்பு பிரேசிலின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. உதாரணமாக அனைத்துப் பயனர்களும் தங்கள் தரவின் நகலைக் கோரலாம், நீக்குவதற்குக் கோரலாம் மற்றும் செயலியில் தங்கள் தனியுரிமை அமைப்புகளைக் கட்டுப்படுத்தலாம். முழு விவரத்திற்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

தரவு கட்டுப்படுத்தி

நீங்கள் பிரேசிலிலுள்ள பயனராக இருந்தால், Snap Inc. உங்கள் தனிப்பட்ட தகவலின் கட்டுப்பாட்டாளராக உள்ளது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

அணுகல், நீக்கம், திருத்தம் மற்றும் பெயர்வுத்திறன் ஆகியவற்றின் உரிமைகள்

தனியுரிமைக் கொள்கையின் உங்கள் தகவல் மீதான கட்டுப்பாடு என்ற பிரிவில் விவரிக்கப்பட்டுள்ளவாறு அணுகல், நீக்கம், திருத்தம் மற்றும் பெயர்வுத்திறன் ஆகியவற்றின் உங்கள் உரிமைகளை நீங்கள் பயன்படுத்தலாம்.

உங்கள் தகவலைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைகள்

சில நிபந்தனைகள் பொருந்தும்போது மட்டுமே உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த உங்களின் நாடு எங்களை அனுமதிக்கும்.
இந்த நிபந்தனைகள் "சட்ட அடிப்படைகள்" என்று அழைக்கப்படும், மேலும், Snap-இல் நாங்கள் நான்கில் ஒன்றைச் சார்ந்திருக்கிறோம்:
  • ஒப்பந்தம். உங்களின் தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதற்கான காரணங்களில் ஒன்று, நீங்கள் எங்களுடன் ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்துள்ளீர்கள் என்பதாகும்.
    எடுத்துக்காட்டிற்கு, நீங்கள் ஆன் டிமாண்ட் Geofilter ஐ வாங்கி, எங்கள் சொந்த ஆக்கப்பூர்வக் கருவிகள் விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளும்போது, கட்டணம் வசூலிக்கவும், உங்கள் ஜியோஃபில்டரை நாங்கள் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான நபர்களுக்குக் காண்பிப்பதை உறுதிப்படுத்தவும் உங்களின் சில தகவல்களை நாங்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது.
  • முறையான ஆர்வம். உங்களின் தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், அவ்வாறு செய்ய நாங்கள் அல்லது எங்களின் மூன்றாம் தரப்பு ஒரு முறையான ஆர்வத்தைக் கொண்டுள்ளது என்பதாகும்.
    உதாரணத்திற்கு, உங்களின் கணக்கைப் பாதுகாத்தல், உங்களின் Snaps-ஐ வழங்குதல், வாடிக்கையாளர் சேவையை வழங்குதல், மற்றும் நண்பர்களையும், உங்களுக்கு விருப்பமானது என நாங்கள் கருதும் உள்ளடக்கத்தையும் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுதல் உள்ளிட்ட எங்களின் சேவைகளை வழங்குவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் உங்களின் தகவல்களை நாங்கள் பயன்படுத்தவேண்டியுள்ளது.
    எங்களின் பெரும்பாலான சேவைகள் இலவசமானது என்பதால், நீங்கள் சுவாரசியமானதாகக் கருதும் விளம்பரங்களை உங்களுக்குக் காண்பிக்க முயற்சிப்பதற்காக உங்களைக் குறித்த சில தகவல்களையும் நாங்கள் பயன்படுத்துவோம்.
    முறையான ஆர்வம் குறித்துப் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்களின் ஆர்வங்கள் உங்களின் தனியுரிமையை விட முக்கியமானதல்ல, எனவே நாங்கள் உங்களின் தரவுகளைப் பயன்படுத்துவது உங்களின் தனியுரிமையைப் பாதிக்காது அல்லது உங்களால் எதிர்பார்க்கப்படும், அல்லது அவ்வாறு செய்வதற்கான கட்டாயக் காரணம் இருக்கிறது என்று நாங்கள் நினைக்கும்போது மட்டும் தான் நாங்கள் முறையான ஆர்வத்தைச் சார்ந்திருப்போம்.
    உங்கள் தகவல்களைப் பயன்படுத்துவதற்கான எங்கள் முறையான வணிகக் காரணங்களை இங்கு விரிவாக விளக்குகிறோம்.
  • ஒப்புதல். சில சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உங்களின் தகவல்களைப் பயன்படுத்துவதற்காக நாங்கள் உங்களின் ஒப்புதலைக் கேட்போம்.
    நாங்கள் அவ்வாறு செய்தால், எங்கள் சேவையில் அல்லது உங்களின் சாதனத்தின் அனுமதிகள் மூலமாக உங்களின் ஒப்புதலை உங்களால் திரும்பப்பெறமுடியும் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
    உங்களின் தகவல்களைப் பயன்படுத்த நாங்கள் உங்களின் ஒப்புதலைச் சார்ந்து இல்லை என்றாலும், தொடர்புகள் மற்றும் இருப்பிடம் போன்ற தரவுகளை அணுகுவதற்காக நாங்கள் உங்களின் அனுமதியைக் கேட்கக்கூடும்.
  • சட்டரீதியான கடமை. செல்லுபடியாகத்தக்க சட்டச் செயல்முறைக்குப் பதிலளிக்கும் போது அல்லது எங்களின் பயனர்களைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள போது, சட்டத்திற்கு இணங்குவதற்காக நாங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம்.

எதிர்ப்பதற்கான உங்கள் உரிமை

உங்கள் தகவல்களின் எங்கள் பயன்பாட்டை எதிர்க்கும் உரிமை உங்களுக்கு உண்டு. பல வகையான தரவுகளுடன், நாங்கள் அதைச் செயலாக்குவதை நீங்கள் இனி விரும்பவில்லை எனில், அதை நீக்குவதற்கான திறனை நாங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம். பிற வகைத் தரவுகளுக்கு, அந்த அம்சத்தை முழுவதுமாக முடக்குவதன் மூலம் உங்கள் தரவின் பயன்பாட்டை நிறுத்தும் திறனை உங்களுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம். செயலியில் நீங்கள் இவற்றைச் செய்யலாம். நாங்கள் பிற வகையானத் தகவலைச் செயலாக்குவதை நீங்கள் ஏற்காவிட்டால், எங்களைத் தொடர்புகொள்ளலாம்.

புகார்கள் அல்லது கேள்விகள்? 

எங்கள் தனியுரிமை ஆதரவு குழு அல்லது தரவு பாதுகாப்பு அதிகாரிக்கு dpo @ snap.com என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் கேள்விகளை சமர்ப்பிக்கலாம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். Autoridade Nacional de Proteção de Dados (ANPD)-இல் புகார் செய்யவும் உங்களுக்கு உரிமை உள்ளது.